தமிழகத்தில் தி.மு.க. தனியாகவும் ஆட்சி அமைக்கலாம்; கூட்டணி ஆட்சியையும் அமைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.சென்னை சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள், முதல்வரின் அக்காளும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாயாருமான சண்முகசுந்தரத்தம்மாள் ஆகியோர் புதன்கிழமை காலை வாக்களித்தனர்.
அவர்கள் வசிக்கும் தெருவிலேயே வாக்குச் சாவடி அமைந்திருந்தது.காலை 9.45 மணிக்கு வாக்குச் சாவடியை அடைந்த அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். பின்னர், வெளியே கூடியிருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:
தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு உதயசூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கிறது.
எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வெற்றி பெறுவோம்.
தனியாக ஆட்சி அமைப்பீர்களா? கூட்டணி ஆட்சியா?
தனியாகவும் வரலாம்; கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம்.
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து?
எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொண்டதே தவிர, பாரபட்சமாக நடந்து கொண்டதாகச் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றிச் சொன்னால் அதில் தவறில்லை என்பது எனது கருத்து.
வடிவேலுக்கு என்ன பதவி
ReplyDeleteபோங்கையா உங்க ஆட்சி அவ்வளவுதான்..
ReplyDeleteஅது நேத்து இது இன்னைக்கு அடுத்த மாசம் என்ன ஹிஹி!
ReplyDeleteஹா ஹா ஹா செம காமெடி
ReplyDeleteதனியாக ஆட்சி அமைக்கிற நினைப்பும் இருக்கிறது, ஆசை யாரைவிட்டது, ஆசை, தோசை, அப்பளம் வடை.
ReplyDeleteஎன்ன பேசும் போது அய்யாவுக்கு கால் இப்பிடி நடுங்குது...???
ReplyDeleteஆப்பு கன்பாம் ஆகிருச்சோ...
ஆறு மாசம் கலைஞர், ஆறு மாசம் தங்கபாலுன்னு மாறி மாறி முதல்வராக இருக்க வேண்டியது தான்.
ReplyDeleteஎன்ன பேசும் போது அய்யாவுக்கு கால் இப்பிடி நடுங்குது...???
ReplyDeleteஆப்பு கன்பாம்தான். ...
திமுக நின்றது குறைந்த தொகுதிகள் என்பதை கணக்கில் கொண்டு சொல்லியிருப்பாரோ...
ReplyDelete//தனியாகவும் வரலாம்; கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம்.//
ReplyDeleteகொஞ்சம் பயந்த மாதிரி தெரியுதே???
பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஎந்த ஆட்சியாய் இருந்தாலும் திகார் ஜெயில் தான்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லாட்சி மலர்ந்தால் சரி.
அண்ணே ஒரு மாசம் கேப் விடலாமே அரசியல் பதிவுக்கு
ReplyDeleteதனியாகவும் வரலாம்; கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம்.//
ReplyDeleteஎப்படியாவது ஆட்சியை பிடிச்சாத்தான் தப்பிக்க முடியும்
அப்ப பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்... ஹா....ஹா...ஹா...
ReplyDeleteநல்லாட்சி மலர்ந்தால் சரி.
ReplyDeleteஅவ்வளவுதான்
பேஸ்மெண்ட் வீக்கு தான்!
ReplyDeleteசுதந்திரம் என்றால் என்னவென்று அரசியல் வாதிகளுக்கும் தெரியவில்லை,மக்களுக்கும் தெரியவில்லை.அதை சரியாக எடுத்து சொல்லவும் ஆளில்லை.மருபடியும் காந்தியைப்போல் ஒரு பொதுநல மனிதர்வரவேண்டும்.
ReplyDelete