Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/27/2011

இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.


திர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.


இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். 

இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.


அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்.

"
போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.


அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை; போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
 

எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

இலங்கையில் இறுதி கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட நம்  இரத்த  சொந்தங்களின் புகைப்படங்கள் தற்போது இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளிவந்துள்ளது. 











28 comments:

  1. படங்கள் பார்ப்பதற்கே கொடூரமாக உள்ளது.

    ReplyDelete
  2. மிகவும் கெர்டுமையாக இருக்கிறது..

    ReplyDelete
  3. க்ளோசப் படங்களை மாற்றி விடலாமே....

    ReplyDelete
  4. இந்தியாவுக்கு எதிராக இலங்கை மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  5. கொடுமையில்லும் கொடுமை

    ReplyDelete
  6. Rajasekaran,Erode,April 27, 2011 at 6:31 PM

    tamilanukku than intha kodumai kadavulae!

    ReplyDelete
  7. படங்கள் ரொம்ப கஷ்டப்படுத்துகிறது.

    ReplyDelete
  8. தீர்வுக்கான வழிகளை விட காங்கிரஸ் மத்திய அரசு அதள பாதாளத்திற்கு நம்மை நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உள் மனசுக்கு கேட்கிறது.

    ReplyDelete
  9. நாம் இன்னும் இந்தியாவின் அடிமைகள் தான் எவனுக்கு புரியுது ?

    ReplyDelete
  10. கண்களை நிறைக்கிறது கண்ணீர்.. :(

    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  11. மறுபடியும் மறுபடியும் சொல்லும் பின்னூட்டம்....

    தமிழகம் மூலமான தீர்வென்றால் சுயநல அரசியல்வாதிகள் ஒன்றாக இணையும் வரை எதுவும் சாத்தியமில்லை.

    புலம் பெயர் மூலமான தீர்வென்றால் முதலில் உங்களை ஒருங்கிணைப்பதை முயலுங்கள்.அதன் பின் தமிழ் உணர்வாளர்கள் உங்களோடு கரம் கொடுக்க இயலும்.

    தற்போது சீனா,ரஷ்யா,இந்தியா என்ற முக்கோணத்தை எப்படி உடைப்பது என்பது கேள்வி.சீனாவுக்கு மனித உரிமை,ரஷ்யாவுக்கு செச்சின்யா,இந்தியாவுக்கு காஷ்மீர் என்ற மூன்று சுய தேவை நிலைகளில் நிற்பதால் ஐ.நா மூலமான தீர்ப்பு சாத்தியமில்லாத ஒன்று.

    ReplyDelete
  12. என்ன அநியாயமா இருக்கு, ரத்தமெல்லாம் கொதிக்குது....

    ReplyDelete
  13. பார்ப்பதற்கே கொடூரமாக உள்ளது.

    ReplyDelete
  14. மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. நெஞ்சு பொறுக்குதில்லையே!

    ReplyDelete
  16. மாப்ள என்னாச்சி உனக்கு இப்படி பதறும் போட்டோக்களை நீ போட மாட்டியே..........நண்பா இறந்தவர்களை விட இருப்பவர்களுக்கே இழப்பின் வலி தெரியும் .........எட்டப்பன்கள் 100 வயது வரை வாழும் உலகில் வீரர்கள் 20 வயதுவரையே வாழ முடிகிறது என் செய்வது......அடிமைகள் கூவ மட்டுமே முடியும் உடைக்கும் காலம் வரும்வரை...........!...!

    ReplyDelete
  17. Balasingam..Anton BalasingamApril 28, 2011 at 12:00 AM

    அப்பவே தம்பி ராஜீவு சொன்னாபுலே சண்டை எல்லாம் வாணாம்..அப்புறம் நாசமா போயிடுவீங்க'ன்னு..ஆனா
    அந்த அறிவு கேட்ட நாயி கேட்டிச்சா..மக்களை எல்லாம் மந்தை கணக்கா பலி கொடுத்தது தான் மிச்சம் ...
    அப்பு புலிக எல்லாம் என்ன வேணாலும் பண்ணலாம் இராணுவகார மட்டும் பஞ்சு மெத்தையிலே வைச்சு தாங்கணுமா?

    ReplyDelete
  18. அனானி நாயே இதை விட தமிழரை கேனையன் ராஜிவின் கொலை வெறிப்படை கொலை செய்தது. போய் சோனியாவின் முந்தானைக்குள் இந்திய இறையாண்மையைத் தேடவும்.

    ReplyDelete
  19. //அப்பவே தம்பி ராஜீவு சொன்னாபுலே சண்டை எல்லாம் வாணாம்..அப்புறம் நாசமா போயிடுவீங்க'ன்னு..ஆனா
    அந்த அறிவு கேட்ட நாயி கேட்டிச்சா..மக்களை எல்லாம் மந்தை கணக்கா பலி கொடுத்தது தான் மிச்சம் ...
    அப்பு புலிக எல்லாம் என்ன வேணாலும் பண்ணலாம் இராணுவகார மட்டும் பஞ்சு மெத்தையிலே வைச்சு தாங்கணுமா?//

    ஓத்தா ஒன்ன பெத்ததுக்கு கவுந்தடிச்சி படுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  20. http://www.salem-news.com/articles/april272011/sri-lanka-genocide-tk.php

    இதையும் பாருங்க இன்னும் Channel 4 வெளிவர இருக்கும் வீடியோக்களையும் பாருங்க

    ReplyDelete
  21. கொடூரமாக உள்ளது.

    ReplyDelete
  22. எட்டப்பன்கள் 100 வயது வரை வாழும் உலகில் வீரர்கள் 20 வயதுவரையே வாழ முடிகிறது என் செய்வது......அடிமைகள் கூவ மட்டுமே முடியும் உடைக்கும் காலம் வரும்வரை...........!...//

    நச்...எல்லாம் கொஞ்ச காலமே..இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
  23. நல்ல காலம் வரும் நாள் நெருங்குகிறது...

    ReplyDelete
  24. படங்களை இட்டு மீண்டும் வேதனைகளை வெளிக்கொணர வைத்திருக்கிறீர்கள்..!

    ReplyDelete
  25. Now the Indian govt. Try to block UN report discussion in security council. We 7.2 crores of Tamil nadu people did'nt care of This report.

    ReplyDelete
  26. இலங்கை தமிழர்களை காப்பாற்ற தழிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் விரைவில் ஒன்று கூடுவோம்.. இது உறுதியாக நடைபெறும் .. நாம் யாருக்கும் அடிமையில்லை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"