Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/09/2011

மத்திய அரசு பேச்சில் உடன்பாடு: உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் ஹஸாரே..


லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாள்களாக தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சமூக சேவகர் அண்ணா ஹஸாரே தனது போராட்டத்தை சனிக்கிழமை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

"எங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது நமது நாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி' என்று அண்ணா ஹஸாரே கூறினார்.மத்திய அரசுக்கும், ஹஸாரே பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர்.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அரசுத் தரப்பில் இடம் பெறுகின்றனர்.பொதுமக்கள் தரப்பில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெறுகின்றனர். 

வழக்கறிஞர் சாந்தி பூஷண் குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.கபில் சிபல் வரவேற்பு: அண்ணா ஹஸாரேவின் முடிவை வரவேற்றுள்ள மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார்.

பொதுமக்கள், அரசுத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய லோக்பால் மசோதா வரைவுக் குழு குறித்த அறிவிப்பாணை உடனடியாக வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.சனிக்கிழமை காலை அறிவிப்பாணை வெளியிடப்படும், அதன் நகல் கிடைத்த பின்னரே அண்ணா ஹஸாரே உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ஹஸாரே.. பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள :

"செய் அல்லது செத்து மடி " ஹசாரே ஆவேசம் 

14 comments:

  1. அனைவரும் உதாரணமாக கொள்ளவேண்டிய, பின்பற்றப்பட வேண்டியவர்.
    ஹசாரே யின் போராட்டங்கள் பற்றி நம் தமிழ் வலை பகுதியில் அதிக பதிவுகள் வெளியாவது நல்ல செய்தி. நன்றி.

    ReplyDelete
  2. You are late Ji...Not as quick as before... :-)

    ReplyDelete
  3. Hatsoff to that man...he is really an inspiration for the existing generation...

    ReplyDelete
  4. கக்கு - மாணிக்கம் சொன்னது…
    அனைவரும் உதாரணமாக கொள்ளவேண்டிய, பின்பற்றப்பட வேண்டியவர்.
    ஹசாரே யின் போராட்டங்கள் பற்றி நம் தமிழ் வலை பகுதியில் அதிக பதிவுகள் வெளியாவது நல்ல செய்தி. நன்றி நண்பா..

    ReplyDelete
  5. டக்கால்டி சொன்னது…
    You are late Ji...Not as quick as before... :-) -சரி நண்பரே..

    ReplyDelete
  6. டக்கால்டி சொன்னது…
    Hatsoff to that man...he is really an inspiration for the existing generation... - சரியாச் சொன்னீங்க..

    ReplyDelete
  7. வந்தேன் வாக்களித்து சென்றேன்

    ReplyDelete
  8. அகிம்சையின் தாக்கம் இக்காலத்திலும் தொடர்வது மிகவும் நம்பிக்கை தரும் விஷயம்.

    ReplyDelete
  9. //லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர்.//


    அரசு தரப்பில் இருக்கும் அந்த 5 நபர்களும் தங்கள் அரசியல் சித்து விளையாட்டை காட்டிவிடாமல் இருக்க வேண்டுமே?

    ReplyDelete
  10. //
    மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார்.//

    இவன்தான்ய்யா பெரிய சிக்கலே....

    ReplyDelete
  11. இனி வலைத்தளம் மூலம் ஒரு புரட்சியை உண்டாக்கலாம் போல இல்லையா...

    ReplyDelete
  12. நல்ல மன்சன் உதாரண புருஷர்

    ReplyDelete
  13. நான் இன்னிக்கு ரொம்ப லேட்டுங்க...

    வாழ்க ஜனநாயகம்...
    வாழ்க ஒற்றுமை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"