Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/29/2011

காதல், கல்யாணம், கத்தரிக்காய் ...


ஒரு  நண்பன்  மற்றொரு நண்பனிடம் கேட்டான்  காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த நண்பன் , உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு விதிமுறை உள்ளது.

நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது. ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த நண்பரும்  சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்.

முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.

ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை. முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன்  திரும்பினான்.

அப்போது நண்பர்  கூறினார். காதலும் இதுபோலத்தான். ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

அந்த நண்பன்  மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த நண்பர் , இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா. பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த நண்பன்  கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை  அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று நண்பர்  பதிலளித்தார்.

26 comments:

  1. கதை காட்டும் ஒப்பீடு சரியாகவே இருக்கிறது.
    முன்னதில் பதட்டமான ஈர்ப்பு.
    பின்னதில் நிதானமான கவனம்.

    ReplyDelete
  2. ஆனால் இரண்டிலும் சிலர் சொதப்பிவிடுகிறார்களே...
    ஆண், பெண் என எந்த பாலினத்தை சார்ந்தவராக இருந்தாலும்..
    (பின் வலைப்பூக்களில் கவிதை எழுதி சமாளிக்கிறார்கள்.....)

    ReplyDelete
  3. தலைப்பில் கத்திரிக்காயையும் சேர்த்து காஸ்ட்லியாக்கி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. காதல் என்பது முதலுக்கு மோசமான்னு பாக்குற வியாபாரம் அல்ல என்பது என் கருத்து நண்பா!

    ReplyDelete
  5. அனுபவம் கற்றுதரும் பாடம்
    அருமை

    ReplyDelete
  6. ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?//

    ஆகா...ஆகா..புரிஞ்சு போச்சு....புரிஞ்சு போச்சு....
    உங்க கிட்ட யாரோ மாட்டிக்கிட்டு முழிக்கிறான் என்று;-)))
    அவ்.............

    ReplyDelete
  7. அருமைதான் கதைப்பொருத்தம். முன்பு இதை ரோஜா மலரை வைத்து படித்ததை போன்ற நினைவு.

    ReplyDelete
  8. முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான்.//

    என்ன ஒரு அருமையான தத்துவம்...

    ஹி...ஹி...

    ReplyDelete
  9. காதல், கலியாணம்..தத்துவ விளக்கம் அருமை சகோ.

    ReplyDelete
  10. பாரத்... பாரதி... சொன்னது…
    ஆனால் இரண்டிலும் சிலர் சொதப்பிவிடுகிறார்களே...
    ஆண், பெண் என எந்த பாலினத்தை சார்ந்தவராக இருந்தாலும்..
    (பின் வலைப்பூக்களில் கவிதை எழுதி சமாளிக்கிறார்கள்.....)

    ReplyDelete
  11. தெளிவு பிறந்து தானே முடிவெடுக்கும் தைரியம் மாணவர்கள் கற்க வேண்டும்..

    ReplyDelete
  12. @ விமர்சனம்...
    இப்போது பரவாயில்லையா?
    தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள்..

    ReplyDelete
  13. அருமையான விளக்கம்

    ReplyDelete
  14. ரொம்ப நல்லா இருக்கு.. கருன்..!

    ReplyDelete
  15. அனுபவப் பதிவிற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. தலைப்பே சூப்பர் தலைவரே...

    ReplyDelete
  17. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  18. அழகான கதை.. ஆனா நம்ம ஆளுங்க எப்போவுமே ரூல்ஸ் எல்லாம் பின்பற்ற மாட்டாங்க.. :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  19. வாலிப வயதில் உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை ........

    ReplyDelete
  20. என்ன, காதல் கல்யாணம்னு கலக்கறீங்க!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"