அந்தச் சிறுவன் அப்போது தமிழ் மீடியதிலிருந்து ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இப்பள்ளியின் புதிய சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது.
ஆங்கில வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. சிறுவனின் பின்புலம் அறிந்த ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
' I ' என்றால் என்ன? ' YOU ' என்றால் என்ன?
சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.
வகுப்பறையில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனை கோபமாக பார்த்தார். ஆங்கிலப் பள்ளியில் படித்துக்கொண்டு இது கூட தெரியாமல் இருப்பதா?
முட்டாள் 'I' என்றால் நான் என்று அர்த்தம். 'YOU' என்றால் நீ என்று அர்த்தம். இது கூட தெரியாமல் இந்தப் பள்ளியில் படித்து என்ன செய்யப் போகிறாய். உன்னால் இந்தப் பள்ளிக்குத்தான் அவமானம் என்றார்.
சிறுவன் அழவில்லை. அவமானமாக உணரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு ஆசிரியரைப் பார்த்துப் பேசினான்.
ஐயா ஒரு நிமிடம். நான் சொன்னது சரி என்று இப்போதும் கூறுகிறேன். 'I' என்றால் நான் என்று தானே அர்த்தம். 'I' என்று உங்களைத்தானே காண்பித்துக் கொண்டீர்கள், அதனால் நீங்கள் என்று அதற்கு அர்த்தம் சொன்னேன். 'YOU' என்றால் நீ என்று தானே அர்த்தம். அதை நீங்கள் கேட்டதால் நான் என்று சொன்னேன்.
வகுப்பறை சில நிமிடம் மெளனமாக இருந்தது. பிறகு, ஆரவாரம் தான்.
ஆசிரியர் சொன்னார். உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .
புத்திசாலி மாணவன்..
ReplyDeleteஎப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா...
ஐ.. வடை எனக்கே எனக்கா...
ReplyDeleteபார்ரா... ஹி ஹி
ReplyDeleteமாப்ள அப்போ வாத்தியாருன்னா தான் கலாய்க்கப்பட்டதை ஒத்துக்கவே மாட்டாரா டவுட்டு!
ReplyDeleteபுத்திசாலி பிள்ளை... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteசூப்பரு...
ReplyDeleteஎன் வலைப்பூ பக்கம் வந்து இணைந்தமைக்கு நன்றி..உங்கள் வலைப்பூவினை பின்தொடர்வதில் மகிழ்ச்சி...
ReplyDeleteவாயுள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பார்கள்.
ReplyDeleteஆகவே.. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அனைவரையும் கலாய்ப்போம்..
ReplyDeleteஎல்லாம் அனுபவமோ?
ReplyDelete//உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .//
ReplyDeleteசெம கருத்து
எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கு ஹையோ!! ஹையோ !!!
ReplyDeleteபதிவு போட்டு 72 நிமிடங்கள் கழித்து மெயில் அனுப்பி என்னை அவமானப்படுத்திய கருணுக்கு என் வன்மையான கண்டனங்கள் ஹி ஹி
ReplyDeleteஸ்கூல் லைஃப் செம ஜாலிதான்
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDeleteஎனக்கு என்னவோ அந்த வாத்தியார் இவராக இருக்குமோனு லேசா டவுட்டா இருக்கு?????
ReplyDelete@விக்கி உலகம்
ReplyDeleteவாத்தியாருங்க எந்த காலத்துல பாஸ் அவங்க பண்ண தப்ப ஒத்துகிட்டு இருக்காங்க...
அவங்க solve பண்ண answer தப்ப இருந்தா கூட அதன் சரின்னு சொல்லுவாங்க.....
யாருங்க அந்த பையன் நீங்க இல்லன்னு தெரியும்
ReplyDeleteஒருவேள நானா?
உலவு எலவு கொட்டுவதால் மற்ற 3லும் ஓட்டு
கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html
அருமை
ReplyDeleteஅவங்க solve பண்ண answer தப்ப இருந்தா கூட அதன் சரின்னு சொல்லுவாங்க..... --- அணைத்து ஆசிரியர்களும் அப்படியல்ல. யாரோ ஒருவர் அப்படியிருக்கலாம். அதனால் அனைவரையும் குறை கூறுவது தவறாகும்.
ReplyDeleteநீங்கள் ஆசிரியர் என்று நிரூபித்திருக்கிறீர்கள். நன்று. ;-))
ReplyDeleteதல ஒரு சின்ன change ......
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி எல்லோரும் அப்படியில்லை....
80 % இன்னும் நான் சொன்ன மாதிரி தான் இருக்காங்க....
20 % வேனும்ன அவங்க சொன்னது தப்பா இருந்தா உண்மைய ஒத்துக்கறாங்க.....
அது என்னவோ தெரியல பசங்கள மட்டும் குறிவச்சு பலிவங்குரதுல அப்படி என்ன தான் சந்தோசமோ அவிங்களுக்கு....
சத்தியமா உங்கள சொல்லல......
பையன் இப்பவே அரசியலுக்கு தயாராகிட்டான் போல இருக்கே?
ReplyDelete////// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteபதிவு போட்டு 72 நிமிடங்கள் கழித்து மெயில் அனுப்பி என்னை அவமானப்படுத்திய கருணுக்கு என் வன்மையான கண்டனங்கள் ஹி ஹி /////////
எனக்கு ரெண்டுமணிநேரம் லேட்டு, (இல்லேன்னாலும் நாங்க லேட்டாத்தான் வருவோம்......... இது என்ன இஸ்கோலா?)
இன்ட்லி ஓட்டு பெட்டியை காணோம்...
ReplyDeleteபோராட்டம்தானே வாழ்க்கை...
ReplyDeleteயாருயா அந்த வாத்தி தப்பு தப்பா சொல்லி தராரு .
ReplyDeleteயோவ் வாத்தி இது உங்க கிளாஸ்'ல நடந்தது தானே....?
ReplyDeleteஅந்த புத்திசாலி மாணவர் நீங்கதானே கருண்?
ReplyDeleteமிக அருமையான கருத்து... சாணியோ சந்தனமோ செயலுக்குப் பின்னான விளைவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஏற்றம்தான்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
பாராட்டுக்கள் .
ReplyDeleteபுத்திசாலி பையன்.
ReplyDeletesuper
ReplyDeleteஉங்களது சொந்த அனுபவமோ ...........
ReplyDeleteவகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்//
ReplyDeleteஉங்க வகுப்பிலையா இது...
ஹி...
சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.//
ReplyDeleteஎப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்க... சிறுவன் கேள்வி கேட்டவரை அடிப்படையாக வைத்துப் பதில் சொல்லியிருக்கிறான்.
ஹி...ஹி..
நகைச்சுவையில் இறுதியில் உள்ள தத்துவமும் அருமை..
ReplyDeleteஇது உங்க வகுப்பிலையா நடந்திச்சு..
புத்திசாலிப் பையன். அந்த ஆசிரியர் நீங்களா?
ReplyDeleteஒன்னும் புரிய மாட்டேன்குதே.
ReplyDeleteஅப்போ I ந "வாத்தியார்"
YOU ந "பையன்" சரிங்களா?
இப்படியும் இருக்குமோ?
ReplyDeleteI என்று you சொன்னால் நீ
I என்று I சொன்னால் நான்
You என்று You சொன்னால் நான்
You என்று I சொன்னால் நீ