Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

6/15/2013

இந்த மாதிரி மனைவி அமைந்தால் என்ன செய்ய?



ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

4/23/2011

ஹி... ஹி...ஹி...இது காமெடி பஜார்!



புருஷன்: டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?

டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..


புருஷன்: ?????????????????

****************************************
டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????

*****************************************
அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா...


அப்பா: அதுக்கு போய்யா அழுவற...
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????

****************************************
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

****************************************
எல்லா எறும்புகளும் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொண்டு வேகமாக ஒட்டி சென்றன...அப்போது பார்த்து ஒரு யானை குறுக்கே வந்துவிட்டது...
எறும்புக்கு கோபம் வந்து யானையை பார்த்து கத்தியது...
"ஒங்கையால...வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா...நீ சாக என் வண்டி தான் கிடைச்சுதா?"

***************************************
பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்...

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6
வாத்தியார்: What
மாணவன்: 4வாத்தியார்: Nonsense
மாணவன்: 8

வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

********************************************
ஆர்யா: 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..

சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..

********************************************
பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...

நியுட்டன் தன்னோட மூன்று
 விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?

ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An object continue to moves, unless it's stopped"

நியுட்டன் மாட்டுக்கு தன் கையால் முழுபலத்தையும் சேர்த்து ஒரு கிக் கொடுத்தார். மாடு "ma" என்று கத்தியது...உடனே நியுட்டன் தன் இரண்டாவது விதியை கண்டுபிடித்தார்..

"F = M A"

சில நிமிடம் கழித்து மாடு நியுட்டனை ஒரு உதை உதைத்தது. உடனே நியுட்டன் தன் மூன்றாவது விதியை கண்டு பிடித்தார்..

"Every action has equal and opposite reaction"

*************************************************
தத்துவம்:

தேங்காய்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு..

அதுக்காக தேங்காயில போர் போட முடியாது..


பூமியில ஸ்ட்ரா போட முடியாது...

****************************************************
என்ன மக்கா! நம்ம காமெடி பஜார்ல சரக்கு எப்படி? இங்க மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் காமெடி கிடைக்கும். ஹி...ஹி...ஹி...

4/19/2011

வகுப்பை கலாய்த்த புத்திசாலி மாணவர்கள்


ந்தச் சிறுவன் அப்போது தமிழ் மீடியதிலிருந்து ஆங்கில மீடியப் பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இப்பள்ளியின் புதிய சூழல் முற்றிலும் புதிதாய் இருந்தது.

ஆங்கில வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. சிறுவனின் பின்புலம் அறிந்த ஆசிரியர் அவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.

' I ' என்றால் என்ன? ' YOU ' என்றால் என்ன?

சிறுவன் உடனே சொன்னான். 'I' என்றால் நீங்கள் . 'YOU' என்றால் நான்!.

வகுப்பறையில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனை கோபமாக பார்த்தார். ஆங்கிலப் பள்ளியில் படித்துக்கொண்டு இது கூட தெரியாமல் இருப்பதா?

முட்டாள் 'I'  என்றால் நான் என்று அர்த்தம். 'YOU' என்றால் நீ என்று அர்த்தம். இது கூட தெரியாமல் இந்தப் பள்ளியில் படித்து என்ன செய்யப் போகிறாய். உன்னால் இந்தப் பள்ளிக்குத்தான் அவமானம் என்றார்.

சிறுவன் அழவில்லை. அவமானமாக உணரவில்லை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு ஆசிரியரைப் பார்த்துப் பேசினான்.

ஐயா ஒரு நிமிடம். நான் சொன்னது சரி என்று இப்போதும் கூறுகிறேன்.       'I' என்றால் நான் என்று தானே அர்த்தம். 'I' என்று உங்களைத்தானே காண்பித்துக் கொண்டீர்கள், அதனால் நீங்கள் என்று அதற்கு அர்த்தம் சொன்னேன். 'YOU' என்றால் நீ என்று தானே அர்த்தம். அதை நீங்கள் கேட்டதால் நான் என்று சொன்னேன்.

வகுப்பறை சில நிமிடம் மெளனமாக இருந்தது. பிறகு, ஆரவாரம் தான்.

ஆசிரியர் சொன்னார். உனக்கு தெரியும் நீ தவறாகவே சொல்லியிருக்கிறாய் என்று, ஆனால் நீ பின்வாங்க தயாராகவில்லை. நீ சொன்னதை சரியென்றும் கூறலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் இருப்பதை தெரிந்துக்கொண்டு சரியாகப் பயன்படுதினாய் அல்லவா? அதற்குத்தான் இந்தப் பாராட்டு. தோல்வி என்று உணராமல் அதற்காக தலை குனியாமல் தைரியமாகப் போராடினாய். அதற்குப் பாராட்டுக்கள் .