Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/18/2011

இதுவரை யாரும் எழுதாத கவிதை!!!


காலையிலிருந்தே
மூளையில் அரித்தது
கவிதை எழுதி
ரொம்ப நாளாச்சே என்று...!

வ்வப்போது
வந்துபோகும்
சிந்தனைச் சிதறல்களை
வாக்கியங்களாக
பதிவு செய்யவேண்டும்
என பேனாவும் தாளும்
எடுத்து   அமர்ந்தேன்...!

ழைய நண்பா்
மொபைலில் அழைத்தார்
பத்து நிமிடமாச்சு
அவருடன் பேசி முடிக்க...!

ந்த பின்
அந்தத் தாளைப் பார்த்தால்
இரண்டு வயது
நிரம்பாத என்மகள்
அந்தப் பக்கம் முழுக்க
கிறுக்கி வைத்திருந்தால்...!

பார்க்கும்போதே
பரவசமானேன்
இதுவரை யாரும் 
எழுதாத கவிதை!!!

35 comments:

  1. இதுவல்லவோ நற்கவிதை :)

    ReplyDelete
  2. மழலையின் கிறுக்கல்களே கலக்கலான கவிதை தான் நண்பா.

    ReplyDelete
  3. ஆனால் கவிதையின் கரு ஏற்கனவே கல்கி வார இதழில் வந்ததுதான்..

    ReplyDelete
  4. கவிதையே கவிதை எழுதியிருக்கு நண்பா!

    ReplyDelete
  5. Yaranjay? Karun ku 100 paisa pana mudipu eaduthu varunkal

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    ஆனால் கவிதையின் கரு ஏற்கனவே கல்கி வார இதழில் வந்ததுதான்..
    -- உண்மையாகவே என்மகள் கிறுக்கியதால் எழுதினேன்... அந்த கவிதையை பின்னூட்டத்தில் வெளியிடவும்.

    ReplyDelete
  7. அந்தக் கவிதைக்கு நிகர் ஏது கருன்?

    ReplyDelete
  8. யாருமே எழுதாத கவிதை மற்றும் யாராலும் எழுத முடியாத கவிதை.

    ReplyDelete
  9. கவித
    கவித

    வந்தேன் வாக்களித்து சென்றேன்


    கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html

    ReplyDelete
  10. இரண்டு வயது
    நிரம்பாத என்மகள்
    அந்தப் பக்கம் முழுக்க
    கிறுக்கி வைத்திருந்தால்...!

    பார்க்கும்போதே
    பரவசமானேன்
    இதுவரை யாரும்
    எழுதாத கவிதை!!!


    ...lovely. :-)

    ReplyDelete
  11. ம்..நல்லா வந்திருக்கு கருன்.

    ReplyDelete
  12. ரசித்தேன்.அந்த கவிதையின் புகைப்படத்தையும் இணைக்காமல் விட்டுடீங்களே

    ReplyDelete
  13. அருமையா இருக்குய்யா கவிதை.....

    ReplyDelete
  14. வந்த பின்
    அந்தத் தாளைப் பார்த்தால்
    இரண்டு வயது
    நிரம்பாத என்மகள்
    அந்தப் பக்கம் முழுக்க
    கிறுக்கி வைத்திருந்தால்...!ரசித்தேன்.அந்த கவிதையின் புகைப்படத்தையும் இணைக்காமல் விட்டுடீங்களே

    ReplyDelete
  15. காலையிலிருந்தே
    மூளையில் அரித்தது
    கவிதை எழுதி
    ரொம்ப நாளாச்சே என்று...!//

    கவிதையின் ஆரம்ப வரிகளே, கற்பனை வெள்ளம் உங்கள் எண்ண அலைகளைத் தட்டி விட்டதென்பதையும், கவிதைக்கான கரு உங்களிடத்தே உருக் கொண்டதையும் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  16. அவ்வப்போது
    வந்துபோகும்
    சிந்தனைச் சிதறல்களை
    வாக்கியங்களாக
    பதிவு செய்யவேண்டும்
    என பேனாவும் தாளும்
    எடுத்து அமர்ந்தேன்...!//

    கவிதையின் பிறப்பிடத்தை, கவிதை கருக் கொண்ட எளிமையான சிந்தனையினை, உங்கள் கைகள் கற்பனைக்கேற்ற படி எழுதத் தொடங்கும் இலாவகத்தை அழகாகச் சொல்லுகிறீர்கள்.

    ReplyDelete
  17. பழைய நண்பா்
    மொபைலில் அழைத்தார்
    பத்து நிமிடமாச்சு
    அவருடன் பேசி முடிக்க...!//

    யாரு, நம்ம சிபியா?

    ReplyDelete
  18. இரண்டு வயது
    நிரம்பாத என்மகள்
    அந்தப் பக்கம் முழுக்க
    கிறுக்கி வைத்திருந்தால்...!

    பார்க்கும்போதே
    பரவசமானேன்
    இதுவரை யாரும்
    எழுதாத கவிதை!!!//

    மழலை மொழியிலும், மழலையின் அசைவுகளிலும், மழலையின் செயற்பாடுகளிலும், குறும்புகளிலும் நாங்கள் பல விடயங்களைக் கண்டு களிக்கலாம் என்பது போல நீங்கள் கவிதையினை உங்கள் பையனின் கிறுக்கலில் கண்டு மகிழ்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. இதுவரை யாரும் எழுதாத கவிதை!!!//

    மழலையின் கிறுக்கலில் மலர்ந்த கவிதையின் வரி வடிவமாய் இங்கே விரிந்திருக்கிறது.

    ReplyDelete
  20. பார்க்கும்போதே
    பரவசமானேன்
    இதுவரை யாரும்
    எழுதாத கவிதை!
    pபாராட்டுக்கள்...

    ReplyDelete
  21. சொந்த அனுபவம்.அழகு !

    ReplyDelete
  22. குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர். உண்மைதான் தோழரே. மழலைகளின் மொழிகளிலும், கிறுக்கல்களிலும் 1000 கவிதைகளையும், ஓவியங்களையும் காணலாம்.தங்கள் கவிதை மிக அழகான அனுபவம்

    ReplyDelete
  23. கவிதையும் கவிதை எழுதியதோ

    ReplyDelete
  24. கவிதை அருமை !!

    -"நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  25. அருமை.. அனைவரும் சொல்லிடும் கவிதை தான் இது.. ஹி ஹி..

    ReplyDelete
  26. நீங்கள் எழுதியிருந்தால் கூட இத்தனை இனிமையானதாக இருந்திருக்காது அந்த கவிதை. குட்டி பதினாறு அடி அல்லவா?

    ReplyDelete
  27. இந்த கவிதையின் ஆக்கம் மிக அருமை. ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  28. மழலையே ஒரு கவிதை தான்...........

    ReplyDelete
  29. அருமை

    குழந்தையே கவிதை தானே பாஸ் அந்த வகையில் கவிதை நீங்க எழுதியாச்சு :))

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"