வாழ்க்கையின் முரண்பாடுகள் பற்றி ஒரு கதை:
ஒரு சீன வியாபாரிக்கு இரண்டு சொத்துக்கள் இருந்தன. ஒன்று, அவர் மகன், மற்றொன்று அவருடைய குதிரைகள்.
ஒரு நாள் அவனுடைய குதிரை காணாமல் போனது. செய்தி கேட்ட ஊர் காரர்கள் அவரருகில் வந்து ' என்னப்பா இப்படியொரு துரதிஷ்டம் நடந்துவிட்டது' என்றார்கள். அவர் திருப்பிக் கேட்டார் , 'எதனால் இதை துரதிஷ்டம் என்கிறீர்கள்?'
அடுத்த சில நாள்களில் காணாமல் போன குதிரை கூடவே பத்து குதிரைகளை கூட்டிவந்தது. உடனே ஊர்காரர்கள் , ' அதிஷ்டகார பயலப்பா நீ' என்று அவரை மெச்சினார்கள். அப்போதும் வியாபாரி கேட்டார் , 'நான் ஏன் அதிஷ்டக்காரன்?'
அடுத்த சில நாட்கள் கழித்து குதிரையில் சென்றுகொண்டிருந்த போது அந்த வியாபாரியின் மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். வழக்கம்போல அந்த ஊர்க்காரர்கள், ' என்னப்பா இப்படியொரு துரடிஷ்டகாரனா இருக்கே' என்று சோக கீதம் பாடினார்கள். அந்த வியாபாரியும் சளைக்காமல் கேள்வி கேட்டார்.
ராணுவ வீரராக இருந்த வியாபாரியின் மகன் கால உடைந்ததால் அப்போது நடைப் பெற்ற போருக்கு அழைக்கவில்லை. இறுதியில் அந்தப் போரில் தோற்று பல வீரர்கள் உயிர் இழந்திருந்தனர். ' நிச்சயம் நீ அதிஷ்டகாரன்தாப்பா' என்றார்கள் ஊர்காரர்கள். இப்போதும் வியாபாரி கேட்டார் , 'எதை வைத்து என்னை அதிஷ்டகாரர் என்கிறீர்கள்?'.
வியாபாரி வாழ்கையை புரிந்து வைத்து இருக்கிறார். வாழ்க்கை என்றால் எதாவது ஒரு தருணத்தில் தமக்கு மகிழ்ச்சியும், சோகமும் ஏற்படும் என்று . ஆகவே அவர் எல்லா நேரத்திலும் எதற்கும் தயாராக சமநிலையில் இருந்தார்.
super story
ReplyDeleteமுரண்பாடுகள்தான் வாழ்க்கையை சுவாரஸய மாக்கும்
ReplyDeleteபக்குவப்பட்ட மனதினால் தான் எதையும் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியும்.
ReplyDeletegood post.
வாழ்க்கை என்றால் எதாவது ஒரு தருணத்தில் தமக்கு மகிழ்ச்சியும், சோகமும் ஏற்படும்..சூப்பர்... நல்ல கதை நண்பரே
ReplyDeletehey story very super. i like it
ReplyDeleteஎதை வைத்து என்னை அதிஷ்டகாரர் என்கிறீர்கள்?'.//
ReplyDeleteதத்துவம் நிறைந்த கதை ஒன்றினை, மதியப் பொழுதில் எங்கள் சிந்தனைகளை இன்னும் இன்னும் கூராக்கும் வண்ணம் தந்துள்ளீர்கள்.
சக்சஸ் சக்சஸ்..........
ReplyDeleteஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
nice story!
ReplyDeleteவாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து நடந்தால் நமக்கு நிம்மதியான சூழல் உண்டாகும்.
ReplyDeleteSuper boss! :-)
ReplyDeleteஆமாமாம்மா,முக்கால் பகுதி சோகமும் கால் பகுதி மகிழ்ச்சியும்தான் பெரும்பாலும் இருக்கிறது.
ReplyDeleteசுவையான சம்பவம்..நல்ல கதை..நல்ல செய்தி
ReplyDeleteaஅருமையான வாழ்க்கைத் தத்துவம்..பாராட்டுக்கள்.
ReplyDelete