Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/15/2011

கை கொடு நண்பா நீ ஒரு கவிஞன்தான்...!


தீக்குச்சி உரசும்போது
கந்தகம் கருகும் வாசத்தை
எல்லோரும் உணர்கையில்
அதற்கு மருந்து சுமந்த
அரும்புகளின்
‌கனவுகள் கருகும் வாசத்தை
உன்னால் உணர முடிகிறதா?

சைவ உணவை
அசைபோட்டபடியே
மீன் குழம்பில்
உப்பு அதிகமாய் இருக்கிறது  என்று
எல்லோரும் யோசிக்கையில்
வலை வீசிய மீனவனின்
வேர்வையாய் இருக்குமோ
என நீ யோசிக்கறாயா?

கை கொடு நண்பா
நீ ஒரு கவிஞன்தான்...!
கவிஞனேதான்...!

30 comments:

  1. ஆனந்த விகடன்ல வந்த கவிதை போல..?

    ReplyDelete
  2. அப்படியா நன்றி!

    ReplyDelete
  3. கவிஞன் என்று சொல்வதை விட மனிதன் என்று சொல்லலாம்.
    கவிஞனாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பது மிக முக்கியம்.

    ReplyDelete
  4. சந்தேகமே வேண்டாம். நீங்களே கவிஞர் தான்.

    ReplyDelete
  5. என்னவென்று சொல்வதம்மா அண்ணன் கருனுடைய கவியழகை

    ReplyDelete
  6. அதற்கு மருந்து சுமந்த
    அரும்புகளின்
    ‌கனவுகள் கருகும் வாசத்தை
    >>
    இதுதான் நச்ச் வரிகள்

    ReplyDelete
  7. மிக அருமை
    கை கொடு நண்பா..

    ReplyDelete
  8. உள்ளத்தின் உணர்வுகளை மீட்டெடுக்கும் கவிதை..நன்றி! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  9. ஓட்டும் போட்டாச்சு...

    <<>>

    ஒவ்வொரு பயன்பாடு மிக்க பொருட்களிலும் உழைப்பாளின் வியர்வை இருக்கும்.. இதை நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவருமே உணர்ந்தவர்கள்தான்... தொடர்புடைய இடுகை படித்துப் பார்க்கலாமே?

    http://thangampalani.blogspot.com/2010/12/en-neethi-manrathil-unakku-thooku.html

    http://thangampalani.blogspot.com/2011/02/murdered-slaves.html

    ReplyDelete
  10. தீக்குச்சி உரசும்போது
    கந்தகம் கருகும் வாசத்தை
    எல்லோரும் உணர்கையில்
    அதற்கு மருந்து சுமந்த
    அரும்புகளின்
    ‌கனவுகள் கருகும் வாசத்தை
    உன்னால் உணர முடிகிறதா?//

    ஆனந்த விகடன்ல வந்த கவிதை போல..?//

    இல்லைச் சகோதரா. வைரமுத்துவின் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் நூலின் சாயலில் அல்லது அதனை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டிருக்கிறது முதல் பந்தி...

    ReplyDelete
  11. அது மீனவனின் கண்ணீராகவும் இருக்கலாம் தானே ....................

    ReplyDelete
  12. பக்கம் 31, இல் வீர்ம் எனும் தலைப்பில் வைரமுத்து எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் நூலின் தாக்கம் அல்லது அதனை அப்படியே எடுத்து இறுதி வரிகளை மட்டும் மாற்றிய விம்பம் கவிதையில் அழகாக தெரிகிறது. கருத்துக்களை நேரடியாக சொல்வதற்கு மன்னிக்கவும்,

    ReplyDelete
  13. இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்..

    சங்கர்.

    ReplyDelete
  14. விநாயகம்April 15, 2011 at 11:34 AM

    கவிதை அருமை. இவ்வளவு அழகாக கவிதை எழுத வரும் போது காப்பி பேஸ்ட் மேட்டர்களை போட்டு ஏன் உங்களை கேவலப்படுத்தி கொள்ளுகிறீர்கள்.

    வவுத்தெரிச்சல் படுவோர் நீங்கள் அங்கே சுட்டீர்கள் இங்கே சுட்டேர்கள் என்று புலம்புவர். கணக்கில் எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து இது போன்ற அருமையான படைப்புகளை தாருங்கள். தமிழகத்தின் அடுத்த் தலைமுறைக்கான கவிஞர் உங்கள் எழுத்துகளில் தெரிகிறார்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. //கை கொடு நண்பா
    நீ ஒரு கவிஞன்தான்...!
    கவிஞனேதான்...!//
    ஆமாம்,ஆமாம்,சந்தேகமேயில்லை!

    ReplyDelete
  16. கை கொடு நண்பா நீ ஒரு நல்ல கவிஞனே தான் சந்தேகமே இல்லை.

    ReplyDelete
  17. கவிதை அருமை வாத்யாரே..நிரூபன் சொல்வது உண்மையா என்று விளக்கவும்..

    ReplyDelete
  18. ரொம்ப சரி திரு.கருன். வித்தியாசமான பார்வைதான் க்ரியேட்டிவிட்டியின் அடையாளம்.

    ReplyDelete
  19. அசத்திட்டீங்க மக்கா.....
    நீங்க கவிஞன்'தான்....

    ReplyDelete
  20. தீக்குச்சியின் கந்தகவாசம் இன்னும் வைரமுத்துவை எட்டிப்பார்த்தாலும் கருப்பொருள் வேறுபடுகிறது போல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. கை கொடுக்க மாட்டேன் நண்பா, கை எனக்கு எழுத வேண்டும்.

    ReplyDelete
  22. நிரூபன் சொன்னது…

    பக்கம் 31, இல் வீர்ம் எனும் தலைப்பில் வைரமுத்து எழுதிய சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் நூலின் தாக்கம் அல்லது அதனை அப்படியே எடுத்து இறுதி வரிகளை மட்டும் மாற்றிய விம்பம் கவிதையில் அழகாக தெரிகிறது. கருத்துக்களை நேரடியாக சொல்வதற்கு மன்னிக்கவும், --- தீக்குச்சியின் கந்தகவாசம் -இது மட்டும்தான் வைரமுத்துவின் வரிகள் என்றே தோனுகிறது. நமக்கெல்லாம் தீக்குச்சியில் கந்தக வாசம் வரும்என்பது தெரியும் தானே.. மேலும் இக்கவிதையின் கருப்பொருள் வேறு..எப்படியிருந்தாலும் நன்றி நண்பா...

    ReplyDelete
  23. கை கொடு நண்பா
    நீ ஒரு கவிஞன்தான்...!

    ReplyDelete
  24. சகோ, நான் சொல்லியது முதல் பந்தியில் என்று, நீங்கள் விளக்கமளிப்பது, முதல் வரியில் என்று.
    கவிதையின் இறுதி வரிகளை மட்டும் மாற்றி விட்டு, உங்கள் கவிதை போல நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள் என்பதனைத் தான் நான் இங்கே சொல்ல வந்தேன்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"