தமிழக அரசியல் கட்சிகள், இலங்கைப் பிரச்சனையில் இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறது. இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில், லட்சக்கணக்கான தமிழ் உறவுகள் வீடிழந்து, நாடிழந்து நிர்க்கதியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு, முதலில் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்தியில் ஆளும் ஐ.மு., கூட்டணி அரசு ஒரு தூதுக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது.
அகதிகளான தமிழ் உறவுகளுக்கு , நிவாரணம் சரியாகக் கிடைக்கவில்லை என்ற நிலையில், இதுபற்றி, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு, நிவாரணப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும். அதை விடுத்து, ராஜபக்ஷேவிற்கு எதிராகக் கோஷம் எழுப்பி, டெசோ சார்பில் பந்த் நடத்தி தமிழ் மக்களைத் தவிக்க விடுவதும், தனித் தமிழ் ஈழம் என்றும், தி.மு.க., தலைவர் கலைஞர் புதிய கோரிக்கை வைப்பதும் தேவையற்றது. இத்தகைய இரட்டை வேடத்தால், வாழ்வையும், உரிமையும் இழந்த தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

இலங்கைத் தமிழர்கள்,அங்குள்ள சிறைகளில் அடைக்கப்படுவதையும், சித்ரவதைப் படுத்தப்படுவதையும், ஐ.நா., இனியாவது, தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை வெளியேறச் சொன்ன போது, கை கட்டி, வாய் பொத்தி ஐ.நா., வெளியேறிய போதே, அதன் மானமும், கப்பல் ஏறி விட்டது.அந்த அமைப்பின்மேல் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.
மிச்சம், சொச்சம் இருக்கும் மானத்தை மீட்டெடுக்க, ஐ.நா., மனித உரிமை மீறல்களுக்கு, இலங்கையில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இங்குள்ள அரசியல் வாதிகள் ஆளுங்கட்சி சார்பாக குழு சென்றாலும், எதிர்க்கட்சி சார்பாக குழு சென்றாலும் ராஜபக்ஷே அளிக்கும் விருந்தை ருசித்து, தம்முடைய 32 பற்களையும் காட்டித் திரும்புவது வழக்கமாகி விட்டது.
இலங்கைத் தமிழர்கள் நிலை தான் இப்படி என்றால், இங்கு, நம் தமிழ் நாட்டு மீனவர்களையும் இலங்கை அரசு விட்டு வைப்பதில்லை. பிடிக்காதவர்களை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது என்பது நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வழக்கம். இந்த பழக்கத்தை, சிங்கள அரசு காப்பியடித்து, தமிழக மீனவர்களை பல பொய் வழக்குகள் போட்டு சிங்கள சிறைகளில் தள்ளி வருகிறது.
இந்த நிலை என்றுதான் மாறுமோ...?

ஈழத்தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு தொட்டுக்கொள்ள ஒரு ஊறுகாய். அவ்வளவுதான். அந்தப் பிரச்சீனை தீர்ந்து விட்டால் அதன்பிறகு அவர்களுக்கு அரசியல் நடத்த வேறு எந்தப் பிரச்சினையும் ரெடியாக இல்லையே?
ReplyDeletemuதலைக் kaண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள்!
ReplyDeleteஇலங்கையின் கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களிடையே பிரச்சினைகள் உருவாவது குறித்து தென் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் சில நாட்களுக்கு முன்பு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறிய தகவலின் சுருக்கம் இதுதான்.
ReplyDelete"இந்திய கடல் பகுதியில் மீன் வளம் என்பது சுத்தமாக இல்லை. எனவே இந்திய மீனவர்கள் வழக்கமாக இலங்கை கடல் பகுதியில்தான் மீன் பிடிக்கின்றனர். இது இலங்கை மீனவர்களின் சம்மதத்துடனேயே நடைபெறுகிறது. அதற்கு விலையாக இந்திய மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களில் ஒரு பகுதியினை இலங்கை மீனவர்களுக்கு கொடுக்கின்றனர். அவ்வாறு இந்திய மீனவர்கள் மீன்களை கொடுக்காமல் வாக்குவாதம் செய்யும் போதுதான் இரு நாட்டு மீனவர்களிடையே மோதல் உருவாகிறது. இலங்கை ராணுவமும் இவ்விஷயத்தில் தலையிடுகிறது. மற்ற படி இரு நாட்டு மீனவர்களிடையே நல்லதொரு புரிந்துணர்வு உள்ளது.இதனை நான் கூறவில்லை. மீனவர்கள் கூறிய கருத்துதான் இது" என்றார்.
இதனை மறுதலிக்கும் கருத்து இருந்தால் வரவேற்கிறேன்!
அரசியல் நடத்த இலங்கைத் தமிழர் பிரச்சினை வேண்டும்...
ReplyDeleteஆதாயம் தேட ஆசைப்படும் தாத்தாவிற்கு கைத்தடியாய் டெசோ...
யாருக்கும் இதில் அக்கரை இல்லை சுயநல நோக்கமே உள்ளது!
ReplyDelete