நான்
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து இம்சிக்கிறது...!
நினைவில்
வந்து இம்சிக்கிறது...!
தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?
முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!
படிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!
எத்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!
எத்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...
இனி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?
Repost
படிக்கும் போதே நம் கண்களிலும் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியல்லே.அந்த அம்மா எப்படி தாங்குவாங்க?
ReplyDeleteமுடியாது...?
ReplyDeleteதெரிந்தவர்கள் பிரிவுதான் வதைக்கும் என்றில்லை...:(
செய்தித்தாள்களில் படிக்கும் சில தகவல்கள் மனதை வதைக்கவும் செய்கிறது... கோபத்தையும் உண்டாக்குகிறது...
ReplyDeleteநெருடல் வரிகள்...
ReplyDelete