Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/09/2013

உங்கள் குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டுமா?


போட்டி நிறைந்த மற்றும் எந்த நேரத்திலும்  ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ள இந்த உலகத்தில், குழந்தைகள் தன்னம்பிக்கை இல்லாமல் கவலையில் நிறைந்துள்ளனர்.
எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக, அவர்களின் உண்மையான வெற்றிக்கு தேவையான நம்பிக்கையை கொடுக்க வேண்டும். 

ஏனெனில் சரியான தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் குழந்தைகளால் எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய முடியாது. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். 

1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும் 

2.குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள்.  "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம். 

3. குழந்தைகளது கலைத்திறன் படைப்புகள் அல்லது வெற்றிகரமாக முடித்த பள்ளி திட்டங்களை வீட்டில் காட்சிக்கு வைப்பதால், அவர்களது பணியின் மதிப்பை காண்பிக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களின் நேர்மறையான சாதனைகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவர்களுக்கு ஒரு புகழ்ச்சி கிடைக்கும். 

 4 பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும்.

5.மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். 

 6. குழந்தைக்கு ஒரு வலுவான தலைவராக உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள். பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். 



7 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆசிரியர் -பெற்றோர் கூடுகையில் குழந்தைகளை "நாய், பன்றி, செருப்பு, நாக்கு வளிக்கவா வந்தே"ன்னு திட்டாதீங்க என்றால் அப்படி தான் பேசுவேன், உங்கள் மகனை எனக்கு பிடிக்கவில்லை, அவன் பெரிய ஆபிஸில் வேலைக்கு போனால் மேலாளர் இப்படி தான் திட்டுவாங்க. உடனே லட்சம் கொடுக்கும் வேலையை விட்டு விட்டு வரவானா என்று கேட்கின்றனர். என் மகன் தன்மான சிங்கம், கவுரவமாக வாழ தான் படிப்பிக்கின்றேன் ஊள கும்பிடு போட்டு வரவல்ல என்று சொல்லி வந்து விட்டேன். வகுப்பு ஆசிரியையோ "மாணவர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டியது தானே, என்னால் வேண்டும் என்றால் மதிப்பெண்ணை குறைத்து போட்டிருக்க முடியும் நான் அப்படி செய்யவில்லையே" என்று கேட்கின்றார். "மதிபெண் நியாயமாக சரியாக போடுவது உங்கள் கடமை" என்று கூறிவிட்டேன். முதல் முறையாக மூன்று ஆசிரியைகளை தனியாக நின்று சமாளித்து விட்டேன். வரலாறு, ஜியோகரபி, தமிழ் என எல்லோரும் என் மகனை பற்றி நல்லதே சொல்லும் போது நட்பில் இணைந்த இந்த 3 ஆசிரியர்கள் எதிர்ப்பது ஆசிரியை மனநிலை அல்ல ஏதோ பரம்பரை சண்டையாட்கள் போல் உள்ளது

    ReplyDelete
  3. இன்றைய பெற்றோருக்கு தேவையான பகிர்வு.

    ReplyDelete
  4. இன்னும் நிறைய இருந்தாலும், முக்கியமானவற்றை சொல்லி உள்ளீர்கள்...

    உணர வேண்டிய கருத்துக்கள்...

    ReplyDelete
  5. சிறப்பான ஆலோசனைகள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"