"2ஜி" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி முறைகேடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு போன்ற, காங்கிரஸ் தலைமையிலான, மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல முறைகேடுகளை அம்பலப்படுத்திய, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை(சி.ஏ.ஜி.), மற்றொரு ஊழல் பூதத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.
நாடு முழுவதும் ரூ.52,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக சிஏஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ள்ளது.
உத்தர பிரதேசம், டில்லி, சண்டிகர், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், விவசாய கடன் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தள்ளுபடியை, விவசாயிகள் அல்லாதோர் பெற்ற வகையில், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக சுருட்டப்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த, 2008ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் படி, நாடு முழுவதும், 3.69 கோடி சிறு, குறு விவசாயிகளுக்கும், 60 லட்சம் பிற விவசாயி களுக்கும், 52 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயக் கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்காக பெறப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட வேண்டிய நிலையில், விவசாயம் அல்லாத பிற கடன்களுக்கும் தள்ளபடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல, குறு நிதி நிறுவனங்கள், இத்திட்டத்தின் பலன்களை அனுபவித்துள்ளன; அவற்றிற்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டிருக்க கூடாது; அதற்கான தகுதி, அந்த அமைப்புகளுக்கு கிடையாது. இந்த திட்டத்தில், பல வங்கிகளும், மோசடியாக பணம் சம்பாதித்து உள்ளன. சம்பந்தமே இல்லாமல், அபராத வட்டி, சட்டப்படியான கட்டணங்கள், பிற செலவுகள் என, பல வகைகளில், பல கோடி ரூபாயை, கடன்தாரர்களிடம் இருந்து சுருட்டி உள்ளன.
"நபார்டு' திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதற்கான, பெறுநர் குறிப்பு (அக்னாலட்ஜ்மென்ட்) பெறப்பட்டிருக்க வேண்டும்; அவற்றை பெரும்பாலான வங்கிகள் பெறவில்லை.
திட்டம் எந்த அளவுக்கு முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை, "நபார்டு' போன்ற அமைப்புகள் கண்காணிக்கவில்லை. இந்த முறைகேடுகளுக்காக, சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்ட விவசாயிகள், கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டிற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, நிதி, சேவை துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழல் பேர்வழிகளை கொண்ட அரசாக உள்ளது. 52 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; இது மிகப் பெரிய மோசடி. இதில், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு சேர வேண்டிய விவசாயக் கடன் நிவாரணம், அவர்களைச் சென்றடையவில்லை. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அரசுப் பணம் வீணாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவர்களை என்னதான் செய்ய?
நல்ல விழிப்புணர்வு கட்டுரை...
ReplyDeleteமக்களுடைய வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கவும் தயங்காது இந்த அரசாங்கம்...
ReplyDeleteஇது எங்கே முடியும்?
ReplyDeleteபோபர்ஸ் குடும்பத்தை அரசாளவிட்டால் இதுதான் நடக்கும்.
ReplyDelete