சமீபத்தில் டெல்லி மாணவியைப் போல தூத்துக்குடி யிலும் பள்ளிக்கூட மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
பெண்கள் மீது ஆசிட் வீசி கொலை செய்யும் வன்கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.பெண்கள் பாதுகாப்பு என்பது இப்போது ஒரு அதிமுக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் முதல்வராக ஒரு பெண் இருந்தும் இவை போன்ற செயல்கள் தடுக்கப்படாமல் அதிகரித் துள்ளது என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் மது தாராளமாகக் கிடைக்கின்றன. டாஸ்மாக் கடைகளை ஆங்காங்கே, தெருவுக்கு தெரு திறந்து மது பானங்களை அரசே விற்பனை செய்யும் அவலம் உள்ளது. இவற்றால் தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, மதுவிலக்கைத் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இலவசங்களை ஒழிக்க வேண்டும்.
ஜே தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.20-க்கு விற்ற சாதாரண அரிசி, இப்போது ரூ.40 என்ற அளவில் விற்கப் படுகிறது. அத்தியாவசிய பொருள்களான எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
மத்திய அரசும் அதன் பங்குக்கு எரிவாயு உருளை விலையை உயர்த்தியும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு தாராளமாக வழிவகுத்துள்ளது.
இது எங்குதான் போய் முடியும் எனத் தெரியவில்லை.
புரியாத புதிராகவே உள்ளது வாழ்க்கை....
ReplyDeleteஎங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?கவலையளிக்கிறது; நன்று
ReplyDeleteசென்னையிலே கிலோ 55 ரூபாய்! அரிசி விலை!என்ன செய்வது ?
ReplyDelete