தி.மு.க.,வின் தலைவர் பதவிக்கு, ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் யுத்தம், நாம் அனைவரும் அறிந்ததே.நெருக்கடி காலம் முதல், அடிபட்டு,
உதைபட்டு, கட்சியில் அடிமட்டப் பதவியிலிருந்து, இன்று, படிப்படியாக உயர்ந்து, கட்சியின் தலைமை பொறுப்புக்கு, வெகு அருகில் நிற்பவர் ஸ்டாலின்.
கட்சியின் இரண்டாம் இடத்தில் இருப்பவராக உள்ள பேராசிரியர் அன்பழகனே, ஒதுங்கி, ஸ்டாலினுக்கு இடம் விட்ட பிறகு, அழகிரியும், கனிமொழியும் உருவெடுத்தனர்.கருணாநிதி தந்திரமாக, அவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியையும் கொடுத்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும், அழகிரிக்கு மட்டும், தி.மு.க.,வின் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை , இன்று வரை இருக்கிறது.ஸ்டாலின் - அழகிரி மோதல், அன்று முதல், இன்று வரை, நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. தற்போது, டில்லியில் ராஜினாமா கடிதம் கொடுப்பதற்குக் கூட, இரு பிரிவுகளாக சென்று கடிதம் கொடுத்துள்ளனர்.
தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் மீது, சி.பி.ஐ., வழக்குகளும், மாநில அரசின் வழக்குகளும் நிலுவையில் உள்ள போது, மத்திய அரசின் கூட்டணியை விட்டு அக்கட்சி வெளியேறியுள்ளது, இது கட்சியிலும், குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு முன், என்னென்ன அடிதடிகள் கட்சியில் நடக்கப் போகிறதோ என்று நினைத்து, தி.மு.க.,வின் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும், வருந்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
அவர்கள், அறிஞர் அண்ணா துரையை நினைத்துப் பார்த்து, கட்சியின் மாண்பு, அவரோடு போய் விட்டதோ என்று, இன்று நினைக்கின்றனர். அண்ணாதுரை, தன் குடும்பத்தை,குடும்பத்தாரை கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால், இன்று, கருணாநிதியின் குடும்பமே கட்சியாகி விட்டதால் தான், இந்த பின்னடைவு, இந்த நிலைமை என்பதை, தி.மு.க., தொண்டர்கள், இப்போதாவது உணர்ந்து நடந்தால் சரி! உணர்வார்களா?
நன்றி இணையம்.
ReplyDeleteமிக சரியான யோசனை!
சரியான யோசனைதான் விழ வேண்டியவர்கள் காதில் விழுந்தால் நல்லது நடக்கலாம்.
ReplyDeleteவரும் லோக்சபா தேர்தலுக்கு முன், என்னென்ன அடிதடிகள் கட்சியில் நடக்கப் போகிறதோ என்று நினைத்து, தி.மு.க.,வின் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனும், வருந்தும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர்.\\ இவனுங்க அடிசிவானுங்க ஆனா பொணம் வேற எவனோ ஒருத்தன் வீட்டில் விழும், அதுதான் வேதனை.
ReplyDelete