Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/16/2013

எது புத்திசாலித்தனம்?


ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக்கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து
பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி
அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய
ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என்
கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று
சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்

என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்... படித்ததில் பிடித்தது.


4 comments:

  1. இந்த கதையை நான் கப்பல் பொறியியல் படிக்கும் போதே சொல்லி இருக்கிறார் என் ஆசிரியர் ,,, எனக்கு மிகவும் பிடித்த கதை

    ReplyDelete
  2. அப்படிச் சொல்லுங்க... நல்ல கதை...

    ReplyDelete

  3. நல்ல படிப்பினை!

    ReplyDelete
  4. உண்மைதான் மூளைக்குத்தான் சம்பளம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"