பத்தாம் வகுப்பு விடைத்தாள் சேதமான விவகாரத்தில் மறுதேர்வு இல்லை முதல் தாள் மதிப்பெண்ணே வழங்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தவறு ஒரு முறை நடந்தால் அது வாடிக்கை தான் அதுவே, திரும்ப திரும்ப நடந்தால் வேடிக்கை தானே.
முன்பே ஒரு முறை இது மாதிரியான தவறு நடந்திருப்பதும் அதற்கும் இதே மாதிரி செய்யப்பட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே. கடலூர் மாவட்ட மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள், பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக, திருச்சிக்கு அனுப்பப்பட வேண்டி, விருத்தாசலத்தில் ரயிலில் ஏற்றப்பட்டுள்ளன.
ரயில் புறப்பட்ட உடனே, ஒரு பார்சல் கீழே விழுந்து, விடைத்தாள்கள் பல காணாமல் போயும், பல சேதமடைந்துள்ளன.இதை, திருச்சி சென்ற பின்னரே கண்டுபிடித்த, தபால் துறையின் மெத்தனப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.
இப்படி கவனக்குறைவாகச் செயல்பட்ட, தபால்துறை மற்றும் ரயில்வே துறை மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? அப்படியே எடுக்கப்பட்டாலும், அதனால் கிடைக்கப் போகும் பயன், மாணவர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது என்பதெல்லாம், பலனற்ற கேள்வி. ஏதாவது நடவடிக்கை, தண்டனை இருந்தாலாவது, இந்த மாதிரியான தவறுகள், வருங்காலத்தில் தடுக்கப்படலாம்; தவிர்க்கப்படலாம்.ரயில்வேயிடம் நஷ்டஈடு பெறலாம் அல்லது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தண்டிக்கப்படலாம்.
இனிமேல், தேர்வு எழுதப் போகும் முன், மாணவன்/ மாணவி , இறைவனிடம் நன்றாகப் பரீட்சை எழுத மட்டும், வேண்டிக் கொள்ள மாட்டான்; தன் விடைத்தாள் பத்திரமாகச் சேர வேண்டிய இடத்தில் சேர வேண்டும் என்றும், பிரார்த்தனை செய்வான் என்பதே நிதர்சனமான உண்மை.
ஜவகர்லால் நேரு என்பதற்கு பதிலாக , நேரு என்று குறிப்பிட்டிருந்தாலே கேள்வித்தாள், அவுட் ஆப் சிலபஸ் என்று கூறி, ஆர்பாட்டம் செய்யும் மாணவ சமுதாயம் ஒரு புறம், கவனக்குறைவுடன் செயல்படும் கல்வித்துறையும், அலட்சியமாக அலுவல் புரியும் தபால் மற்றும் ரயில்வே ஊழியர்களும் மறுபுறம். இடையே, தேர்வு என்பதையே பயங்கர பூதாகாரமாக்கி, ஏதோ வேற்று கிரகத்துக்கு செல்வதைப் போல், மாணவர்களைத் தயார்படுத்தும் பள்ளிகள் வேறு!
இத்தனைக்கும் நடுவிலே மாட்டிகொண்டு , "கல்வி", பாவம், கதி கதிகலங்கியுள்ளது.
நெஞ்சைச் சுடும் எதார்த்தம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
இவிவாறு மதிப்பீடு செய்வது முறையல்ல!
இது தவறான முன்னுராதரணம் இப்படி செய்வது முறையல்ல
ReplyDeleteகுழந்தைகள் இன்னும் என்னென்ன பிராத்தனைகள் செய்ய வேண்டுமோ...?
ReplyDeleteகானமல் போன விடைத்தாள்களுக்கு 100% மதிப்பெண் வழங்குவதே சரி.தவறான கொள்கைகளை வைத்திருக்கும் அரசையும் அந்த அரசை தேர்ந்தெடுத்த மக்களின் தவறுகளையும் விடைத்தாள் இழந்த மாணவர்களுக்கு சாதகமாக்கி 100% மதிப்பெண் வழங்குவதே சரி .
ReplyDelete