Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/09/2013

நுணலும் தன் வாயால் கெடும் !?


ஒரு வழியாக தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத். ஆனால், திரைப்படத் துறையில் உள்ள  பிரபலங்களும், மேல் மட்டத்தில் உள்ள விஐபி- க்கள் சிலரும், அவரின் நண்பர்களும், அவர் நல்லவர், வல்லவர், அன்பானவர், அவருக்கு இத்தண்டனை தவறாக அளிக்கப்பட்டதாகும்  என்று கூறி சர்ச்சையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு வேண்டிய மிகச் சரியான ஆதாரங்கள் இல்லாமலா  சுப்ரீம் கோர்ட் இத்தண்டனையை இறுதி செய்து இறுதி தீர்ப்பு அளித்திருக்கும்? எனவே அது தர்க்கத்திற்கும், விவாதத்திற்கும்  அப்பாற்பட்டது.

ஆனால், இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் - டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்  சஞ்சய் தத்துக்குப் ஆதரவாக தண்டனையைத் இன்னும் குறைத்து  தந்திருக்கலாம் என்று சொல்லி இருப்பது  அவர் இப்போது வகித்துவரும்  இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவிக்கு உகந்ததல்ல.

அதுமட்டுமல்ல, அவர் இன்னும் பல இக்கட்டான விஷயங்களிலும்  தன் மூக்கை நுழைத்து பல  கருத்துக்களை வெளியிட்டு வருவது என்பது முன்னாளில்  சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்ததற்கு அழகல்ல.

இதற்கு முன், இந்தியர்களில் தொண்ணூறு  சதவீதம் பேர் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர் என்று கூறியவர் இவரே என்பது நமக்கு தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்நாப் புலவர்  திருவள்ளுவர் கூறிய, "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு" என்ற குரளையும் , 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற தமிழ் பழமொழியையும், அவருக்கு நெருக்கமானவர்கள் யாராவது  மொழிபெயர்த்துக் கூறுவார்களா?

- Sundra Mahalinkam.

4 comments:

  1. பணம் விளையாடும் இடத்தில் எதுவும் உதவாது... குறளும் பழமொழிகளும் கூட...

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே

    ReplyDelete

  3. தங்கள் கருத்து சரியே!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"