இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கலைஞர் கருணாநிதி தன்னுடைய கட்சி ஆதரவை விலக்கி கொண்டதில் எந்தவித வியப்பில்லை.
இது ஒரு அரசியல் நாடகம் என்று அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க., - தே.மு.தி.க., பிரிந்த போது அந்த இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடவில்லை. ஆனால், காங்கிரஸ் - தி.மு.க., பிரிவை இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த கோலத்தில் இவர்கள் ஒட்டி உறவாக இருந்து கடந்த காலங்களில் எப்படி ஆட்சி செய்திருப்பார்கள்? நினைத்து பார்த்தாலே பயமாய் இருக்கிறது.
இது போல இவர்கள் ஒருமுறை, இருமுறை அல்ல கடந்த காலங்களில் ஐந்து முறை பிரிந்து, ஒன்று சேர்ந்துள்ளனர். இது ஒரு அரசியல் நாடகம். பிரியும் போது ஒருவருக்கொருவர் வார்த்தை போர்களில் மோதிக் கொள்வர். இந்த முறை ஒருபடி மேலே பொய் சிபிஐ நாடகமும் நடந்தது.
டில்லியில் தங்கி , முகாமிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு , வேண்டிய இலாகாவை கேட்டுப்(போராடி) பெறத் தெரிந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, இலங்கைத் தமிழர்களுக்காக, டில்லிக்கு சென்று போராடி தன் கோரிக்கையை நிறைவேற்றாமல் இங்கேயே வாபஸ் செய்கிறார்.
கருணாநிதியே டெசோ அமைப்பை ஆரம்பித்து, மத்திய அரசைக் கேட்காமல், ஐ.நா. மன்றத்திற்கே சென்ற கருணாநிதியும், தளபதி ஸ்டாலினும், ஐ.நா.,வில் முறையிட மத்திய மன்மோகன் சிங் அரசு மறுக்கிறது என்று சொல்வதில், என்ன நியாயம் இருக்கிறது?
நியாயமாரே....நீங்களே சொல்லுங்கள் இந்த நாடகம் அனைத்தும் லோக்சபா தெர்தளுக்காகத்தானே....
Test
ReplyDeleteதாங்கள் பதிவிட்டபடி யார் யோசிக்கிறார்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்