இந்திய அரசியலில், வரலாறு காணாத மிகப் பெரிய ஊழலாக கருதப்படுவதில் "2ஜி" ஸ்பெக்ட்ரம், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் திகழ்கிறது என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்கும்.தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும், தமிழன் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்த மெகா ஊழல் இந்த "2ஜி" ஸ்பெக்ட்ரம் ஊழல்.
அந்த வழக்கில், அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, திகார் சிறையில், சிறைவாசம் அனுபவித்து சாதனை படைத்தார். உண்மையிலேயே, பிரதமர் ஒப்புதல் இல்லாமல், இந்த மாபெரும் ஊழல் நடக்கவில்லை என்றால், ஏன் அன்று குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவை காப்பாற்ற, தி.மு.க., மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை?
கடந்த சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கும், இந்த, '2ஜி' ஊழலே காரணம். இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக்குழு, '2ஜி ஊழலுக்கு மாஜி ராசாவே முழு காரணம்' என, அறிக்கை கொடுத்துள்ளதும், பதிலுக்கு, "பிரதமர் தான் முழு பொறுப்பு" என்று ஆ.ராசா கூறியதும் வியப்பானது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'பிரதமரை, ராசா வழி நடத்தினார் என்றால் நம்ப முடியுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளதும், கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரத் தானே செய்யும் என்பதைப் போன்று, இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொள்கின்றனர். கூடா நட்பினால், பிரதமருக்கு களங்கம் வந்துள்ளது காலத்தின் கட்டாயம் -
நன்றி அருணாசலம்.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"