இந்திய தலைநகர் டில்லியில் மட்டும், 2009ல், 404 பாலியல் வழக்குகளும்; 2010ல், 489ம்; 2011ல், 572ம்; 2012ல், 706ம் பதிவாகி உள்ளதாக தகவல். அனேகமாக, 2013 டிசம்பருக்குள், 706ஐ இது தாண்டும். இதில், 5 வயது பேத்தியும், 70 வயது பாட்டியும் அடங்குவர் என்பது தான், மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
தேசிய குற்றப்பதிவு ஆணைய விவரப்படி, 2001 - 2011 வரை, இந்தியாவில், 48,338 குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது, மற்றொரு ஜீரணிக்க முடியாத விஷயம்.
முதல் கற்கால மனிதன், 1.80 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றினான் என்று, ஒரு வரலாற்று ஆவணம் கூறுகிறது. அவன் தன் உணவுக்காகவும், இனவிருத்திக்காகவும் புலம் பெயர்ந்த வரலாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அக்காலத்தில் கூட சிறுமியரை, அவர்கள் புணர்ந்ததாக புலப்படவில்லை. தற்போதைய நாகரிக உலகில், பெண் தெய்வங்களுக்கு, நல்லவிதமான பட்டு புடவைகளை உடுத்தி, அலங்கரித்து வழிபாடு நடக்கிறது.
நடைமுறையில் சோப்பு விளம்பரம் முதல், செருப்பு விளம்பரம் வரை, பெண்கள் அணியும் உள்ளாடைகளின் ஒரு பகுதியை மட்டும், பெண்ணுக்கு அணிய வைத்து, வண்ணக்கோலங்களில் நடிக்க வைக்கப்படுகின்றனர். பெண்களை பரிபூரண வியாபாரக் கருவியாகவே மாற்றி விட்டனர், நம் இந்திய வியாபாரிகளும், பன்னாட்டு வியாபாரிகளும்! ராணி மங்கம்மாள் ஆட்சியில், அவளது தம்பி ஒரு பெண்ணை மானபங்கம் செய்தது ஊர்ஜிதமான பின், அரசியின் தம்பி என்று கூட பாராமல், திருச்சி மலைக்கோட்டை உச்சியிலிருந்து உருட்டி, உடனுக்குடன், அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றினர் என்ற வரலாறு, நம்மை புல்லரிக்க வைக்கிறது.
கடந்த, 2012, டிச., 16, டில்லி நிகழ்ச்சியை யாரும் மறக்க இயலாது. மாதங்கள் நான்கை தாண்டிவிட்டது; உரிய தண்டனையை குற்றவாளிகளுக்கு கொடுக்காததால், குற்றம் புரிவோருக்கு எச்சரிக்கை இல்லாமல் போனது. தற்போது, நாள்தோறும் கற்பழிப்பு தொடர்கிறது. விரைவு நீதிமன்றமா, விளங்காத நீதிமன்றமா... புரியவில்லை!இதில், கமாண்டோக்களின் மத்தியில், மிகவும் பாதுகாப்பாக பவனி வரும் மன்மோகன் சிங், சோனியா, இப்படிப்பட்ட கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து, வருத்தம் தெரிவித்தனர் என்ற செய்தி நன்றாகத் தான் உள்ளது.
நன்றி ஹரிஹரன்
இந்தக் கொடுமை என்று மாறப் போகிறதோ...?
ReplyDeleteவருத்தம் தரும் செய்திகள்.....
ReplyDeleteஎன்று முடியும் இந்த கொடுமைகள்......
கொடுமை...
ReplyDelete