மனோதத்துவ ரீதியாக, பள்ளியில் சரியாக படிக்காத மாணவன் ஒருவனுக்கு, சக மாணவர்களிடையே, ஒரு தாழ்வு மனப்பான்மையும், தவறை அடிக்கடி சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள், பெற்றோர் மீது கர்வம் கட்டி, அவர்களை பழிவாங்கும் நிலையும் ஏற்படுவது சகஜம்.
பல மாணவர்கள், தாங்கள் சரியாக படிக்காத நிலைக்கு, பெற்றோரால் கடுமையான தண்டனை கிடைக்குமோ என்ற பயத்துடனும் இருப்பர். இதனால், பள்ளியில் அன்றாடம் தன்னை விசாரிக்கும் ஆசிரியர் மேல், அவர்களுக்கு ஒரு வன்மம் உருவாவது, தவிர்க்க முடியாதது.மேலும், இத்தகைய மாணவர்கள், தற்காலத்தில், "டிவி'யில் காண்பிக்கப்படும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிகழ்வுகளை, தங்கள் மனதில் பதிவு செய்து கொள்ள, அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
அவ்வாறு வலுவேற்பட்டு, வக்கிரபுத்தியுடன் திட்டம் தீட்டி, பழி தீர்த்துவிட்ட கதை தான், சென்னை ஆசிரியை ஒருவர் மாணவனால் கொல்லப்பட்ட நிகழ்வு. மேலும் நம், "டிவி' சேனல்கள், தங்கள் மகா, மெகா சீரியல்கள் மூலம், பல நிமிடங்கள் தொடர்ந்து, ஒருவரை கொலை செய்யும் காட்சிகளையும், அதை மறைக்க குற்றவாளிகள் மேற்கொள்ளும் வழிமுறைகளையும், மிக நிதானமாக காட்டுகின்றன.
தேவைப்பட்டால், அதை மறுநாள் நிகழ்ச்சியின் போது, "பிளாஷ் பேக்'காக மறுமுறை காட்டி, ஒரு நல்ல கைங்கர்யத்தை தவறாமல் செய்து வருகின்றன. நல்ல நடத்தைகளுக்கு வேட்டு வைக்கும் இந்த காட்சிகளை, பெற்றோர், தங்கள் குழந்தைகளை, கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், இதை பெரியவர் முதல், இளம் நண்டு, சிண்டுகள் வரை, சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், வாய் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவலங்களும், அன்றாடம் அரங்கேற்றமாகின்றன.
இனி ஒரு விதி செய்வோம் ஆசிரியர்களே... நீங்கள் பணிக்கு வரும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது போல், தலையிலிருந்து கால் வரை, கவசமாய் காக்கக்கூடிய உயிர் கவசத்தையும் டிசைன் செய்து, அணிந்து வாருங்கள். அது உங்களுக்கு, மிக மிக நல்லது!
இந்த அழகில் மாணவர்களை அடிக்க கூடாதுன்னு கட்டளை வேறு....
உங்களின் கோபமும் ஆதங்கமும் புரிகிறது...
ReplyDeleteஉயிர் கவசத்தையும் டிசைன் செய்து, அணிந்து வாருங்கள். அது உங்களுக்கு, மிக மிக நல்லது!///உண்மை.
ReplyDeleteதங்களின் ஆதங்கம் நியாயமானதுதான்.
ReplyDeleteபிஞ்சு மனதில் விதையை தூவுவதைக் காட்டிலும் விஷத்தை தூவும் நிகழ்வுகள் தான் அதிகம் நடக்கின்றன.