தர்பூசணி கோடைக்கு ஏற்ற , கோடையில் மட்டுமே கிடைக்ககூடிய பழம். தண்ணீர்ச் சத்து அதிகமுள்ளதால், ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என
அழைக்கப்படும் தர்பூசணிக்கு, கோடை காலம் தான் சீசன். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு.
வெயிலுக்கு ஏற்ற பழமான தர்பூசணிக்கு, சிறப்பான மருத்துவ குணங்களும் உள்ளன. இருதயத்தை பலப்படுத்தவும், ரத்தக் குழாய்களில் உள்ள தீமை செய்யும் கொழுப்புப் படலத்தை நீக்கவும், தர்பூசணியில் உள்ள சிறப்பு வேதிப் பொருள் பயன்படுகிறது.
வெயில் காலத்தில் நீர் அதிகமாக அருந்துவதால், பலருக்கு பசி இருக்காது. பசியின்மை ஏற்படும். சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.
இந்த போலியான பசியின்மையை நீக்கி , பசியைத் தூண்டும் இயல்பு தர்பூசணிக்கு உள்ளது. மருத்துவப் பழங்களுள் ஒன்றாக ஆகி விட்ட தர்பூசணியை தாராளமாய் சாப்பிடுவோம்.
கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக்கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ள வேண்டிய அருமையான தகவல்கள் மிக்க நன்றி.
ReplyDeleteகோடைக்குத் தேவையான பயனுள்ள
ReplyDeleteஅருமையான பகிர்வுக்கு நன்றி
படமும் தலைப்பும் கூடுதல் சிறப்பு
This comment has been removed by the author.
ReplyDeleteஉப்பும், மிளகுத்தூளும்... மிகச்சுவையாக இருக்கும்...
ReplyDeleteகுளிர்ச்சியான பயனுள்ள பகிர்வு... நன்றி...
முடிவில் படம் சூப்பர்...
எனக்கு மிகவும் பிடித்தது!
நல்லது
ReplyDeleteபகிர்வு அருமை
ReplyDeleteம் அப்படியா சேதி...
ReplyDeleteதர்பூசணி கொடைக்காலத்திறகேற்ற சுவையான பழவகை. நல்ல தகவல்கள். வயாக்ரா தகவல் புதிது.
ReplyDelete