Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/18/2013

நிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள் வெல்லுமா?



அடுத்த ஆண்டு ?  நடக்கவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும்  CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது என்றால் , பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத மாநிலக்  கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன.

அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும் வெற்றி கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு, பால் விலை, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வு என அதிருப்திகள் இருந்தாலும், இலங்கை விவகாரம், காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளது.



மக்கள் மத்தியில் தி.மு.க. மீது அதிருப்தி நிலவுகிறது. 2ஜி விவகாரம் தொடர்பான அதிருப்தி உள்ளது. இலங்கை பிரச்னை வேறு.
இலங்கை விவகாரத்தில் காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு, பதவி சுகங்கள் அனுபத்துவிட்டு, வெளியேறிய தி.மு.க. மீது அதிருப்தியே நிலவுகிறது. இதனால் அக்கட்சி தோல்வியை தழுவும்.

காங்கிரஸ் என்னாகும்?

போங்க பாஸ் காமெடி பண்ணாதீங்க? தமிழகத்தில் காங்கிரசின் கதையை கேட்கவே வேண்டாம். அதனுடன் கூட்டணி அமைக்கவும் யாரும் முன் வராத நிலையில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்கிறது கருத்துக் கணிப்பு. 

டிஸ்கி : கர்நாடகாவுல 15, ஆந்திராவுல 10, தமிழ்நாடு & பாண்டி - 40 , கேரளாவுல - 5 ஆக மொத்தம் 70 சீட்டு கண்டிப்பா ஜெயிக்கிறாங்க. பி.எம் ஆகுறாங்க.  (கூகிள் பிளசில்).

1 comments:

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"