மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில் மரக்காணத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு போராட்டங்களும், அரசியல் தலைவர்களின் வருகையும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மரக்காணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் மரக்காணம் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர் திரும்பி வந்துவிட்டார்.
உடனடி தகவல்...!
ReplyDeleteதிட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?
ReplyDeleteதிட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?
ஏதோ அவங்களுக்கு தெரிஞ்சத செய்யுறாங்க...
ReplyDeleteமின்கம்பிக்கு தடையா இருந்து இருக்கும் அதான் வெட்டிஇருப்பாங்க
ReplyDeleteபதவிக்காக எதை வேண்டுமாலும் செய்யும் அமைதிப்படை சத்தியராஜின் நிஜ உருவம் தான் இந்த போலி மருத்துவர். ஜாதி சண்டையை முட்டிவிட்டால் மக்கள் பழசையெல்லாம் மறந்து வோட்டு போடுவார்கள் என்ற நினைப்பு. அவர்கள் AC அறையில் கூட்டணி பேசி பதவி வாங்கி விடுவார்கள். பாதிக்கபடுவது என்னவோ அப்பாவி வன்னியனும் அப்பாவி தலித் மக்களும் தான்.

ReplyDeleteபிரச்சனையை பெரிதாக்காமல் இருந்தாலே போதும்
ReplyDeleteஇவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்! இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.
ReplyDelete//இவர் நடத்துவது //
ReplyDeleteதிருமா