Showing posts with label அழகிரி. Show all posts
Showing posts with label அழகிரி. Show all posts
4/01/2013
8/26/2011
"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு?அழகிரி விரக்தி..
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எஸ்.ஆர்.கோபி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், "அட்டாக்' பாண்டி ஆகியோரை பார்க்க, நேற்று முன்தினம் , திருச்சி மத்திய சிறைக்கு, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி சென்றார்.
சிறைக்கு சென்று கைதிகளை பார்க்க, மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், மத்திய அமைச்சர் அழகிரியுடன், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர் மட்டுமே, உள்ளே சென்றனர்.
8/12/2011
அழகிரி மதுரையை விட்டே ஓட்டமா ? மதுரையில் பரபரப்பு!
இந்தச் செய்தியின் தலைப்பில் இருக்கும் கேள்விதான், மதுரை தி.மு.க.வினரின் தலையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. காரணம் என்னவென்றால், அப்படியொரு வதந்த கடந்த இரு தினங்களாக மதுரையில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது.
“அண்ணன் தற்போதைக்கு மதுரை வரமாட்டார்” என்று அடித்துச் சொல்கிறார்கள் மதுரை தி.மு.க. புள்ளிகள் சிலர்.
மதுரை போலீஸ் அவர் மீது வழக்குத் தொடர்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்றே தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள் வந்து கொட்டுகின்றன என்று சொல்ல முடியாது. இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கைது செய்யும் அளவுக்கு ஸ்ட்ராங்காக ஏதும் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே காவல்துறை உள்வட்டத் தகவல்.
மனைவி காந்தி அழகிரி கோயில் நிலத்தை வாங்கிய விவகாரம் தமக்கு துருப்புச் சீட்டாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தது மதுரை போலீஸ். அந்த விவகாரத்திலும், கையில் உள்ள ஆதாரங்கள் காந்தி அழகிரியைக் கைது செய்யப் போதுமானதாக இல்லை. அந்த விவகாரத்திலும் மேலும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு இருக்கிறது போலீஸ்.
போலீஸ் தன்னைக் கைது செய்வதில் தீவிரமாக இருப்பது அழகிரிக்கும் நன்றாகவே தெரியும். இதனால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி விட்டதால், அதில் பங்கேற்கச் செல்லும் சாக்கில் டெல்லி போய்விட்டார். கூடவே காந்தி அழகிரியையும் அழைத்துப் போயிருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக இவர்கள் இருவருமே மதுரைப் பக்கம் வரவில்லை. இதனால்தான் அழகிரி மதுரையை விட்டே ஓடிவிட்டதாக மதுரையில் வதந்தி பரவியுள்ளது. நன்றி விறுவிறுப்பு.
Subscribe to:
Posts (Atom)