ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி விரக்தியுடன் கேட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது மத்திய அரசில் அங்கும் வகித்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று ஈழத் தமிழர்கள் கூக்குரல் எழுப்பியபோது செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் இருந்தார் கருணாநிதி.
தற்போது இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 1977 ஆம் ஆண்டு சென்னையிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி நடத்தினேன், 1983ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறும் கருணாநிதி, ஆட்சியில் இருந்தபோது 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம் உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று கூறி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணாநிதி, சில மணி நேரத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் என்று சொல்லிவிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடமே பாதுகாப்பு வளையத்தில் இருந்த தமிழ் மக்களை அந்நாட்டு இராணுவம் தடை செய்யப்பட்ட குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து வருகிறதே என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, “மழை விட்டுவிட்டது, ஆனால் துவானம் விடவில்லை” என்றார்.
சிந்தியுங்கள் உறவுகளே.......
ammaa அம்மா நாமம் வாழ்க
ReplyDeleteraitu
ReplyDeleteகலைஞர் ரெஸ்ட் எடுக்கட்டுமே... டென்சன் ஆக்காதிங்க.
ReplyDeleteஇந்த மாற்றங்கள் தேவைன்னு தானே அவர முதல்வரா மக்கள் தேர்ந்தேடுத்திருக்காங்க.
ReplyDeleteஇதில் என்ன முன்னேற்றம் எற்படபோகிறதுஎன பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காங்கரஸ் அண்ணாச்சியின் திருவிளையாடல்கள் லேசில் திர்க்ககுடியது அல்ல
ReplyDeleteஇன்னும் பல கருத்துக்களை சேர்த்திருக்கலாம் கரூன் இருந்தாலும் பதிவு நல்லா இருக்கு
ReplyDeleteTamilam paavam summa vidathu. . .
ReplyDeleteகருணாநிதி ஐயாக்கு கவிதை நல்லாவரும். அடுக்கடுக்கா வார்த்தைகள் வரும்.. கடிதமும் எழுதும் ஆள்.. செயலில எதையும் செய்ய வேண்டிய நேரத்துல செய்ததில்ல.
ReplyDeleteஅம்மாக்கு கவிதையும் வராது, கடிதமும் எழுதவராது ஆனா ஆளு செயலுல இறங்கிட்டா என்னென்னமோ எல்லாம் பண்ணி முடிச்சுடும். யார பத்தியும் (மக்களையும்தான்) யோசிக்க மாட்டா.
அருமையான பதிவு பாஸ். வாழ்த்துக்கள்..
ReplyDelete//ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. //
ReplyDeleteநமக்குதான் ஆட்சேபனை உண்டு.. குளவிக்கூட்ட கொழுத்துறன் என்டுடு கூட இருந்த குருவிக்கூட்டையும் கொழுத்தப்போராங்களே.
அம்மாவின் தைரியம் யாருக்கும் வராது...
ReplyDeleteமேலும் கலைஞர் ஈழம் தமிழர்களுக்கு செய்த சேவைகள், தமிழ்செல்வனின் மரணத்திற்கு கவிதை எழுதினார். தேசிய தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று யோசனை சொன்னார்.
ReplyDeleteசெத்த பாம்பை இன்னும் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கீங்க ...........
ReplyDeleteபழைய புரணம் ...எதுக்கு ,,,பத்து பேர அடிப்பது வீரம் அல்ல உண்மையை தோல்வியை இயலாமையை ஒத்துகொல்வதே வீரம் (ஹி ஹி என்னால பத்து பேர
ReplyDeleteஅடிக்க முடியாதுன்னு இதை சொல்லவில்லை )
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது//
ReplyDeleteபாஸ்...போர் உச்சக் கட்டம் அடைந்தது 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில்,
போர் இறுதிக் கட்டம் அடைந்து முடிவுற்றது 2009 மே மாதம் 17ம் திகதி
அம்மா இப்போது தானே தொடங்கியிருக்கிறா,
ReplyDeleteகொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு வேளை வருங்காலத்தில் மீண்டும் முதல்வராகலாம் எனும் நோக்கோடு பழசைக் கிளறிப் பார்க்கிறாரோ ஐயா.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள் நண்பரே..!!
ReplyDeleteவணக்கம் நண்பரே..
ReplyDeleteவலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.
என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.
பதிவு சுருக்கமாக இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.
ReplyDeleteஎது எப்படி இருப்பினும்... தமிழக அரசியல்வாதிகளால் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை..
ReplyDeleteஇலங்கை தமிழர்களையும் தமிழர் பிரச்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள் தமிழக அரசியல்வாதிகள்
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...
ஐயா ஒரு பழமை பேசி ;-)
ReplyDeleteநெத்தியடி வரலாற்று குறிப்புகள்
ReplyDeleteகட்டுரை செம ஹாட்
ReplyDeleteமேலும் வாசிக்க.... பார்க்க.........
ReplyDeleteDo Visit
மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html
ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html
மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html
நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html
http://www.verysadhu.blogspot.com/
அவர் மக்களுக்காக் அரசியல் செய்தாரா என்பது கேள்வி.ஜெயா அம்மாவும் ஆரம்பம்தானே பார்க்கலாம் !
ReplyDeleteஇன்று இலண்டன் நேரம் 11.05 க்கு சனல் 4 ல் ஈழ அவலம் பற்றின ஒரு மணித்தியாலக் காணொளி காண்பிக்கிறார்கள்.உங்களுக்குத் தெரிந்த மற்றைய நாட்டு நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.ஒரு கிழமைக்கு இணையத்திலும் பார்க்கலாமாம்.நன்றி !