காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.
விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்? குடிசை வாழ் குப்பனும், சுப்பனும் போல, இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை? எல்லாரையும் போல, இவர்களுக்கும் தலா ஒரு ஓட்டு தானே! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் கூறித்தானே சுதந்திரம் பெற்றோம்!ஊழலில் திளைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையிலுள்ள காங்கிரசுக்கு, இது ஒரு கடைசி வாய்ப்பு.
எந்த வில்லங்கமும் ஏற்படுத்தாமல், லோக்பால் சட்டத்தை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்றி, செயல்படுத்த வேண்டும்.இல்லாவிடில், சுதந்திரம் பெற்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.
இன்றைய காங்கிரஸ் ஆட்சி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும், அடுத்து வரப்போகும் ஆட்சி, கண்டிப்பாக இச்சட்டத்தை நிறைவேற்றும். அதுவும், முன் தேதியிட்டு அமல்படுத்தி, ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும் இது காலத்தின் கட்டாயம்.
சிந்தியுங்கள் உறவுகளே...
I think vadai is mine
ReplyDeleteயோ மாப்ளே, உங்களுக்கு டில்லியில் செய்தியாளர் இருக்காங்களா?
ReplyDeleteபுதிய செய்திகளை அதிரடியாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுறீங்க சகோ.
யோ மாப்ளே, உங்களுக்கு டில்லியில் செய்தியாளர் இருக்காங்களா?
ReplyDeleteபுதிய செய்திகளை அதிரடியாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுறீங்க சகோ.
அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியா உலக அரங்கில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் .
ReplyDeleteதமிழ் மணத்துல சீக்கிரமா தூக்கி விடுங்கண்ணே
ReplyDeleteஊழல்கள் நிரைந்த இந்த ஆட்சிக்கு இதுதான் முடிவு..
ReplyDeleteஊழலுக்கு எதிரான போராட்டத்தை நசுக்கி, ஊழலுடன் வாழ வேண்டும் எனும் காங்கிரஸிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் இக் காலத்தில் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கேற்ற ஒரு வழி!
ReplyDeleteஅன்பின் கருண்
ReplyDeleteஎந்த ஒரு புதிய செயலும் விவாதிக்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்படும். இதுவும் அப்படியே ! விவாதிக்கட்டும் - முடிவுக்கு வரட்டும் - செயல் படுத்தட்டும் - பொறுத்திருப்போம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நானும் சிந்திச்சு பார்த்தேன்...சிந்திச்ட்டே இருக்கேன்...
ReplyDeleteகாங்கிரஸுக்கு மாற்று யாரென்று தெரிவியுங்கள்.
ReplyDeleteவணக்கம் கருன்,
ReplyDelete//காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.//
உங்கள் எச்சரிக்கை உண்மையிலேயே உண்மையாகக் கடவதாக !
ஆம் நாட்டு நடப்புகளை அறியாத பிரதமரும்...
தன் நாட்டுக்கே துரோகம் செய்யும் ஆட்சியும் நமக்கு வேண்டாம்...
அரசன் அன்று கொல்வான்..
தெய்வம் நின்று கொல்லும்..
நிச்சயமாக ஒரு பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. பார்ப்போம்.
ReplyDeleteநல்லது நடந்தால் சரி, யாரால் நல்லது நடத்தப்பட்டாலும் சரியே.
ஊழலில் திளைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையிலுள்ள காங்கிரசுக்கு, இது ஒரு கடைசி வாய்ப்பு. //
ReplyDeleteசரியான எச்சரிக்கை.
//இது காலத்தின் கட்டாயம்.//
ReplyDeleteகாத்திருப்போம்!
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்,காலம்மாறும்!
தலைப்பு சூப்பர் கரூன்
ReplyDelete//காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.//
ReplyDeleteno second thoughts as of now ...
lets c wat next
தமிழ் மணம் 8
ReplyDeleteசாட்டையடிப் பதிவு..திருந்துறாங்களான்னு பார்ப்போம்..
ReplyDelete///
ReplyDeleteஇன்றைய காங்கிரஸ் ஆட்சி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும், அடுத்து வரப்போகும் ஆட்சி, கண்டிப்பாக இச்சட்டத்தை நிறைவேற்றும். அதுவும், முன் தேதியிட்டு அமல்படுத்தி, ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும் இது காலத்தின் கட்டாயம்.
///
அப்படி நடந்தால் நல்லது
அகில இந்திய உழல் அரசு இது
ReplyDeleteதலைப்பு அசத்தல் ..
ReplyDeleteசட்டத்தை இயற்றி அதில் அவர்களே மாட்டிக்க கூடாது என்பதற்கு தான் காலத்தை விரயம் செய்கின்றனர் ..
கப்பல் கட்டும்போதே அதில் ஓட்டை போதும் வேலையையும் தொடங்கி விட்டனர் இந்த அரசியல் பெருச்சாளிகள். தலைப்பு என்னவோ உண்மைகாகப் போகிறதென்று எனக்கும் தோன்றுகிறது.
ReplyDeleteஅருமையான கட்டுரை.
ReplyDeleteமிகச் சரியாய்ச் சொன்னீர்..
ReplyDelete