நம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .
சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்
நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.
பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.
வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.
அவை சில வேலை
நிஜங்களாகலாம்.
சில வேலை
பொய்களாகலாம்.
நம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!
vadai
ReplyDeleteFaith is god
ReplyDeletenallarukku vaathiyare
ReplyDeleteநிஜமாவதிலும், பொய்யாவதிலும்தான் இருக்கிறது நம்பிக்கை...
ReplyDeleteநம்பிக்கையின்றி வாழ்க்கையில்லை!
ReplyDeleteநல் வசந்தத்தின் வருகையைக்
கூறுவதல்லவா குளிர்காலம்?!
நம்பிக்கை நம் இன்னொரு கை!
ReplyDeleteகலக்குங்க ,...
ReplyDelete//நம்பிக்கை நம் இன்னொரு கை! //
ReplyDeleteமூன்றாவது கை
நம்பிக்கை ஒளிரட்டும் ....
ReplyDeleteநம்பிக்கை கூட ஒரு வித போதை தான், அது மட்டும் இல்லைன்னா எந்த ஒரு மனுசனும் நிஜத்த சந்திக்க முடியாம திணறிடுவான்,
ReplyDeleteமிக ஆழமான கருத்துக்கள் தரும் வரிகள், உற்று நோக்கினால் மட்டுமே தென்படும் அர்த்தங்கள்.. அருமை கருன்!
http://karadipommai.blogspot.com/
நம்புங்கள் நம்பிக்கையை. நிறைவான கவிதை.
ReplyDeleteநம்பிக்கைகள் தான் மனிதனின் பலம்
ReplyDeleteஅருமை
நல்ல படைப்பு
ReplyDeleteநம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்
இடையில் ஊசலாடும் ஒரு மன நிலையை
மிக அழகாக சித்தரித்திருக்கிறீர்கள்
ஆனாலும் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்ளாதவரை
நம்பிக்கை உதவுவதில்லை என்பது எனது நம்பிக்கை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
நம்பிக்கைகளின்
ReplyDeleteநுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .
நம்பிக்கை வாழட்டும்.
//நம்பிக்கைகளின்
ReplyDeleteநுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது//
நாம் நடப்பது கூட நம் நம்பிக்கையால்தான் சகோதரரே. கண்களால் பார்த்து கால்களால் நடக்கவில்லை. நடந்தால் நின்றால் கீழே விழமாட்டோம் என்ற நம்பிக்கையே நம்மை நடக்கச்செய்கிறது.
உங்கள் நல்ல நம்பிக்கைகள் நினைவாக வாழ்த்துக்கள்.
//நம்பிக்கைகள்
ReplyDeleteநம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!//
நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுத்தால் நம்பிக்கைகளாகவே
நம்பிக்கைகள்
தொடரும் .
நல்லதொரு கவிதை ..நண்பரே
ReplyDeleteதமிழ்மணம் 7 நானே தான்
ReplyDeleteநம்பிக்கைகள்
ReplyDeleteநம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!
மனதை கனக்கச்செய்யும் யதார்த்த வரிகள்! அருமை!!
மாப்ளே நீ வாத்தி.........நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்யா!
ReplyDeleteமாப்ளே நீ வாத்தி.........நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்யா!
ReplyDeleteபாழடைந்த கோவில்களின்
ReplyDeleteமயான மூலைகளில்
வௌவால்கலாக தொங்கலாம்.//
ம்...எல்லாக் காட்சிகளும்-
மனிதர்களின் பார்வைகளை அடிப்படையாகக் கொண்டு வேறுபடும் என்பது போல்,
நம்பிக்கையும் வேறுபடும் என்பதனை அருமையாக்ச் சொல்லியிருக்கிறீங்க சகோ.
நம்பிக்கை என்பது, மனிதர்களின் மனதினை அடிப்படையாகக் கொண்டு வேறுபடும் என்பதனை உங்கள் கவிதையில் எளிமையான முறையில் சொல்லியிருக்கிறீங்க சகோ.
ReplyDeleteநம்பிக்கைகள்
ReplyDeleteநம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!>>>>
நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்க வேண்டும்.. அப்போ தான் நாம கூட இருக்கும்.
ம்ம் அசத்தல் அசத்தல்..
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு கரூன்
ReplyDeleteகலக்கல்....நறுக்குன்னு நாலு குத்தியாச்சு...
ReplyDeleteகலக்கல்....நறுக்குன்னு நாலு குத்தியாச்சு...
ReplyDeleteசிதிலமடைந்த மனத்தின்
ReplyDeleteஇருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்
>>>
நச் வரிகள் சகோ
இது கவிதை வாரம் போல. //பாழடைந்த கோவில்களின்
ReplyDeleteமயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.//
நல்லாத்தான் ஜோசிக்குரீன்ன்க பாஸ்.
ஓட்டுரிமையை நிறைவேற்றியாச்சு.
கொஞ்சம் நம்ம ஏரியாவுக்கும் வாங்களேன் யாராச்சும்.