Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/08/2011

அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன?


"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார். 

அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது

கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான். 

அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா? 

தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்? 

"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.

37 comments:

  1. குடும்பம் ஒரு பல்கலை கழகம் எண்ணிக்கையில மட்டும்

    ReplyDelete
  2. இவரும்தான் சாக்ரடீஸ் நாடகமெல்லாம் எழுதினார்!--அது வேற,இது வேற!

    ReplyDelete
  3. அரசன் அன்றே கொல்வான். தர்மம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  4. இப்போதைக்கு டில்லியிலும் சென்னையிலும் சில குடும்பங்கள் அரசியலில் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு உத்தமம் .......

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    hi hi hi ஹி ஹி ஹி//
    என்ன சிரிப்பு..

    ReplyDelete
  6. // "தீதும் நன்றும் பிறர் தரவாரா'//
    தானே சொல்லிப்புட்டு தானே பண்ணிப்புட்டாரு.
    இப்போ கடைசியா அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம் என்டுரியலா இருக்ககூடாது என்டுரியலா?
    #அளவோட இருந்தா தப்பில்லையே.

    அஷ்வின் அரங்கம் இன்றையஇடுகை

    ReplyDelete
  7. போதும் அப்பூ... வேதனையை கிளறி விடாதீங்க.. ஏற்கனவே நொந்து நூலாகி விட்டார்.

    நீங்களும் நெய்யனுமா?

    ReplyDelete
  8. உப்பு தின்னவனும், தப்பு செய்தவனும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

    ReplyDelete
  9. "தீதும் நன்றும் பிறர் தரவாரா'
    என்பது நன்கு புரிந்தது.

    ReplyDelete
  10. அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கலாம். அரசியல்ல குடும்பம் இருக்கக்கூடாது. இருந்தா விளைவு இப்படி தான்.

    ReplyDelete
  11. பாஸ்...நச்சென்று ஒரு அடி....
    குடும்பம் இருப்பது தவறல்ல. ஆனால் தன் குடும்பத்திற்காக முழு அரசியலையும் தாரை வார்த்துக் கொடுப்பது தான் தவறு...

    ReplyDelete
  12. சசிகுமார் கூறியது...

    குடும்பம் ஒரு பல்கலை கழகம் எண்ணிக்கையில மட்டும்// ரைட்டு.

    ReplyDelete
  13. ஹி..ஹி.ஹி.. அவரது தந்திரமான அரசியல் யுக்தி. இப்ப கேளித்கூத்தாகிப் போச்சு அவருக்கே..!!

    ReplyDelete
  14. சென்னை பித்தன் கூறியது...

    இவரும்தான் சாக்ரடீஸ் நாடகமெல்லாம் எழுதினார்!--அது வேற,இது வேற!// ஓ ..

    ReplyDelete
  15. தமிழ் உதயம் கூறியது...

    அரசன் அன்றே கொல்வான். தர்மம் நின்று கொல்லும்.// பார்க்கலாம்.

    ReplyDelete
  16. koodal bala கூறியது...

    இப்போதைக்கு டில்லியிலும் சென்னையிலும் சில குடும்பங்கள் அரசியலில் இல்லாமல் இருப்பது நாட்டுக்கு உத்தமம் .......// ஆமாம்..

    ReplyDelete
  17. கருன் சின்னவரிகளிலேயே பல சரித்திரங்களை அடக்கிவிட்டீங்களே :)

    ReplyDelete
  18. Ashwin-WIN கூறியது...

    // "தீதும் நன்றும் பிறர் தரவாரா'//
    தானே சொல்லிப்புட்டு தானே பண்ணிப்புட்டாரு.
    இப்போ கடைசியா அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம் என்டுரியலா இருக்ககூடாது என்டுரியலா?
    #அளவோட இருந்தா தப்பில்லையே.ok..

    ReplyDelete
  19. தங்கம்பழனி கூறியது...

    போதும் அப்பூ... வேதனையை கிளறி விடாதீங்க.. ஏற்கனவே நொந்து நூலாகி விட்டார்.

    நீங்களும் நெய்யனுமா?// sariyaa sonneenga,,

    ReplyDelete
  20. தங்கம்பழனி கூறியது...

    உப்பு தின்னவனும், தப்பு செய்தவனும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.// சரியா சொன்னீங்க..

    ReplyDelete
  21. விடுங்க பாஸ்.. விதைச்சா அறுக்கத்தானே வேனும்

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    "தீதும் நன்றும் பிறர் தரவாரா'
    என்பது நன்கு புரிந்தது.// ரைட்டு.

    ReplyDelete
  23. ஒசை. கூறியது...

    அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கலாம். அரசியல்ல குடும்பம் இருக்கக்கூடாது. இருந்தா விளைவு இப்படி தான்.// அப்படியா?

    ReplyDelete
  24. நிரூபன் கூறியது...

    பாஸ்...நச்சென்று ஒரு அடி....// நன்றி..

    ReplyDelete
  25. பிரவின்குமார் கூறியது...

    ஹி..ஹி.ஹி.. அவரது தந்திரமான அரசியல் யுக்தி. இப்ப கேளித்கூத்தாகிப் போச்சு அவருக்கே..!!// ஆமாம்.

    ReplyDelete
  26. Jana கூறியது...

    கருன் சின்னவரிகளிலேயே பல சரித்திரங்களை அடக்கிவிட்டீங்களே :)//// நன்றி..

    ReplyDelete
  27. மதுரன் கூறியது...

    விடுங்க பாஸ்.. விதைச்சா அறுக்கத்தானே வேனும்// ஆம்.

    ReplyDelete
  28. குடும்பம் இருப்பது தப்பில்லை அந்த குடும்பத்த ஓட்டுறத்துக்காக கட்சி நடத்துவதுதான் தப்பு , இதை முகா மட்டையில் உரைக்கும் படி யாரவது சொல்லுங்கப்பா

    ReplyDelete
  29. //"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்//

    so u are ADMK?!! #doubt

    ReplyDelete
  30. தீதும் நன்றும் பிறர் தர வாரா - கரெக்ட்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

    ReplyDelete
  31. குடும்பம் இருக்கலாம் ஆனா அது நாட்டை சுரண்டி சாப்பிடக்கூடாது

    ReplyDelete
  32. அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம். ஆனால் குடும்பம் மட்டுமே கட்சியில் இருக்கக்கூடாது. நாட்டையே சுரண்டும் பேராசை இருக்கக்கூடாது.

    ReplyDelete
  33. அரசியல் வாதிக்கு குடும்பம் இருக்கலாம். ஆனால் குடும்பம் மட்டுமே கட்சியில் இருக்கக்கூடாது. நாட்டையே சுரண்டும் பேராசை இருக்கக்கூடாது.

    ReplyDelete
  34. கூர்மதியன்!அளவுக்கு மீறினால் அரசியலும் நஞ்சு:)

    ReplyDelete
  35. கருன்!ஒரே நேரத்தில் இரண்டு பதிவு படிச்சிகிட்டிருந்த குழப்பம் முந்தைய பெயர் பின்னூட்டம்:)

    ReplyDelete
  36. அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது.

    "நூற்றுக்கு நூறுவீதமான" உண்மை.பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"