உ.பி.,யில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும்(ஆட்டையை போடப்படும்) விளை நிலங்களுக்கு, இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதென்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்தாமல் இருக்கவும், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து, விவசாயிகள் தரப்பிலும், காவல் துறையில் சிலரும் உயிரிழந்துள்ளனர். போராட்டம் மேலும் தீவிரமடைந்து, உ.பி.,யின் இதர பகுதிகளுக்கும் பரவியது.
பொதுவாக, இந்தியாவின் உணவுத் தேவை, கிராமப்புறங்களையும், அங்குள்ள பரந்த விளைநிலங்களையும் நம்பியுள்ளது. மாநிலங்களில் ஆட்சி செய்யும் அரசுகளும், மத்திய அரசும்,பொருளாதார மண்டலங்களுக்காகவும், விமான நிலையங்கள், குடியிருப்பு விரிவாக்கம், தொழிற்பேட்டைகளை அமைக்கவும், சகட்டு மேனிக்கு விவசாய நிலங்களில் கை வைக்கும் அவலம் தொடர் கதையாக உள்ளது.
மேலும், தண்ணீர் வசதி, வடிகால் வசதி பற்றாக்குறை காரணங்களால், கிராமப்புற நிலங்கள் வெகுவாக, பிளாட் போடப்பட்டு வீடுகளாய் மாறுகின்றன. விவசாயிகளுக்கு தேவைப்படும் நுகர்பொருட்களான, நேர்த்தியான விதைகள், உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சி மருந்துகள், போதிய அளவு கிடைக்காத காரணங்களாலும், அவர்கள் பெறும் கடன்களை அடைக்க முடியாமல், மன உளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு தள்ளப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால், விவசாயம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விதத்தில் நிர்ணயம் செய்யப்படாததும், நவீன விவசாய அறிவியல் முன்னேற்றங்கள், விரைவாக விவசாயிகளை சென்று அடையாததும், அவர்கள் மத்தியில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயத்திற்காக வழங்கப்படும் இலவச மின்சாரம், உரிய நேரத்தில் வழங்கப்படாததும், ஒரு முக்கியமான காரணம். இத்தகைய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கு, தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே பெரிய பாரமாய் கருதும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய வேலைக்கு சரியான கூலி ஆட்கள் கிடைப்பது இல்லை.
விடுமுறை முடித்து வந்த மாபிள்ளைக்கு வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete1st
ReplyDeleteஅய்யோ உ.பி பிரச்சனை பெரும் பிரச்சன்
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html
என்னய்யா நல்லா ஊர் சுத்திட்டு வந்துட்டீரா..?
ReplyDeleteஅடடே! அண்ணன் விடுமுறைல இருந்தா வந்திருக்கார்? வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிவசாயம் சார்ந்த நம் இந்திய திருநாட்டில் விவசாயிகளுக்கு மரியாதையும் எதிர்காலமும் இல்லாமல் இருப்பது வேதனைக்குறிய செயலாகும்...
ReplyDeleteவிக்கி உலகம் கூறியது...
ReplyDeleteவிடுமுறை முடித்து வந்த மாபிள்ளைக்கு வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!///
நன்றி தக்காளி..
Speed Master கூறியது...
ReplyDeleteஅய்யோ உ.பி பிரச்சனை பெரும் பிரச்சன்/// ஆமாம் நண்பா.
ஜீ... கூறியது...
ReplyDeleteஅடடே! அண்ணன் விடுமுறைல இருந்தா வந்திருக்கார்? வாழ்த்துக்கள்!///// நன்றி..
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஎன்னய்யா நல்லா ஊர் சுத்திட்டு வந்துட்டீரா..?// வந்தாச்சு..
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteவிவசாயம் சார்ந்த நம் இந்திய திருநாட்டில் விவசாயிகளுக்கு மரியாதையும் எதிர்காலமும் இல்லாமல் இருப்பது வேதனைக்குறிய செயலாகும்...// உண்மை நண்பா..
இந்தியா முழுவதுமே இதே பிரச்சினை உள்ளது .இந்த நிலை மாற வேண்டுமென்றால் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்தான் .......
ReplyDelete”காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
ReplyDeleteகையுங் காலுந்தானே மிச்சம்?”
koodal bala கூறியது...
ReplyDeleteஇந்தியா முழுவதுமே இதே பிரச்சினை உள்ளது .இந்த நிலை மாற வேண்டுமென்றால் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்தான் .......// உண்மைதான் பாலா..
சென்னை பித்தன் கூறியது...
ReplyDelete”காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?”//
மிகவும் சரி நண்பரே..
நல்ல விஷயத்தத்தான் சொல்லி இருக்காரு வாத்தியாரு....!
ReplyDeleteஇன்று இரவு விரிவான பதில்களோடு வருகிறேன்,
ReplyDeleteகடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியான விவசாயிக்கு இவ்வளவு கஷ்டங்களா? மிகவும் வேதனையாக உள்ளது.
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ReplyDeleteநல்ல விஷயத்தத்தான் சொல்லி இருக்காரு வாத்தியாரு....!// நன்றி டாக்குடறு..
நிரூபன் கூறியது...
ReplyDeleteஇன்று இரவு விரிவான பதில்களோடு வருகிறேன்,/// வாங்க..வாங்க..
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
ReplyDeleteகடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியான விவசாயிக்கு இவ்வளவு கஷ்டங்களா? மிகவும் வேதனையாக உள்ளது.// உண்மைதான் நண்பரே..
சாரி மாப்ளை.. வெள்ளி என்பதால் வழக்கமாக வரும் நேரம் கொஞ்சம் தள்ளி..
ReplyDeleteவிவசாயிகளுக்கு சிறந்த திட்டங்கள் தேவை
ReplyDeleteஅன்பின் கருண்
ReplyDeleteவிவசாயம் செய்ய வேண்டுய வயல்கள் - இடப் பற்றாக்குறை காரணமாக - வீடுகளாகின்றன. அரசினால் கையகப் படுத்தப்படுகின்றன. என்ன செய்வது - சாலை ஓர மரங்கள் வெட்டப்படுகின்றன - சாலைப் போக்குவரத்தின் காரணமாக - மலைகள் கிரானைட்டாகின்றன - ஆறுகளில் மணல் அள்ளப்டுகிறது. என்ன செய்வது - இயறகைக்கு எதிராக செயல்படுகிறோம். - எதிர் கால சந்ததியினருக்கு என்ன சொல்லப் போகிறோம். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாக்கினை எள்ளி நகையாடி விட்டார்களே1
யோசிக்க வேண்டிய விஷயம்
ReplyDeleteயோசிக்க வேண்டிய விஷயம்
ReplyDeleteவிவசாயிங்க சேத்துல கை வச்சா
ReplyDeleteதான் நாம சோத்துல கை வைக்கமுடியும். ஆனா அவங்களுக்குத்தான் மேலும் மேலும் பிரச்சினைகள்.
//இராஜராஜேஸ்வரி சொன்னது…
ReplyDelete.பகிர்வுக்கு நன்றி!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாக்கினை எள்ளி நகையாடி விட்டார்களே//
வள்ளுவ பாட்டன் விவசாய புரட்சியின் காலத்தில் சொல்லியிருப்பாரு.மறுபிறவின்னு ஒன்னு இருந்து மறுபடியும் பாடகனாகவே இருந்திருந்தா கொழுத்துண்டு ஊழலோடு வாழ்வாரே வாழ்வார்ன்னு பாடியிருப்பாரு:)
(அவரவர் கற்பனையைப் பொறுத்த படி நிஜமான உருவகங்கள் நிறையவே இருக்கிறார்கள்.)
//இராஜராஜேஸ்வரி சொன்னது…
ReplyDelete.பகிர்வுக்கு நன்றி!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாக்கினை எள்ளி நகையாடி விட்டார்களே//
வள்ளுவ பாட்டன் விவசாய புரட்சியின் காலத்தில் சொல்லியிருப்பாரு.மறுபிறவின்னு ஒன்னு இருந்து மறுபடியும் பாடகனாகவே இருந்திருந்தா கொழுத்துண்டு ஊழலோடு வாழ்வாரே வாழ்வார்ன்னு பாடியிருப்பாரு:)
(அவரவர் கற்பனையைப் பொறுத்த படி நிஜமான உருவகங்கள் நிறையவே இருக்கிறார்கள்.)