நிஜம் படுத்திருக்கையில்
நிழல் எங்கோ
தலைமறைவாகிவிட்டது...!
தேடும் முயற்சியில்
குடும்பத்தினர்,
உறவினர்கள்,
நண்பர்கள்
நிஜத்திடம்
சொல்லிச் சொல்லி அழுகின்றனர்...!
பாவம்
அது என்ன செய்யும்..!
இத்தனை நாள்
நிழல் தான்
நிஜத்தை
இயக்கிக் கொண்டிருந்தது
அது இல்லாமல்
இது எப்படி அழும்?
எதிரிகள் துரோகிகளின்
ஒருவித சந்தொஷங்களிலும்
நட்புகள் அன்புகளின்
துயரங்களிலும்
துய்த்துப் போன நிஜம்
கண்மூடியே
ஒன்றும் தெரியாதது போல்
கிடப்பது நாடகமா?
ஒருவார்த்தை சூடாகச்
சொன்னால் போதுமே
சுர்ர்ர் என்று
ஏறுமே இதுக்கு...!
பிறப்பிலிருந்து வளர்ந்த
நாட்களின் கயிறை
கையில் வளைத்து
சுருட்டிக்கொண்டு
சென்றவன் யார்?
சென்றவன் சொல்லாமல் போன
மர்மம என்ன?
அழுது அழுது, கண்கள் வீங்கி
இருப்பவர்களைப் பார்த்தாவது
இறங்குவானா இவன் ?
பிறந்ததிலிருந்து
குளிக்கும்போது கைகால்களை
ஆட்டிக்கொண்டே குளித்ததை...
இப்போது
நான்கு பேர் தூக்கி
பெஞ்சில் கிடத்தி
குளிப்பாட்டுகின்றனர்...!
யாருக்கும் தீங்கிழைக்காததால்
அவர் நல்லவரென்று
நால்வர் முன்வந்து
தூக்கிச் சென்று;
மண்ணுக்கடியிலோ
நெருப்புக்குள்ளோ மூடி
தொலைத்துவிட்டு வீடு
திரும்புவது;
நிஜத்தைதான்
நிழலையல்ல...!
super....super...super
ReplyDeleteசோகம் தழும்புது வாத்தி...
ReplyDelete//மண்ணுக்கடியிலோ
ReplyDeleteநெருப்புக்குள்ளோ மூடி
தொலைத்துவிட்டு வீடு
திரும்புவது;
நிஜத்தைதான்
நிழலையல்ல...!//
நிஜம் எங்கே போகிறது? நிழலைத்தேடி?........
மாறுபட்ட கோணத்தில் வித்யாசமான சிந்தனையில் உதித்த கவிதை மலர் வாசனை அதிகம்தான்.
கவிதைன்னாலும் கலக்குறான், அரசியல் விமர்சனங்கள் என்றாலும் அசத்துறான் மாப்ள செம ஆளுப்பா
ReplyDelete//மண்ணுக்கடியிலோ
ReplyDeleteநெருப்புக்குள்ளோ மூடி
தொலைத்துவிட்டு வீடு
திரும்புவது;
நிஜத்தைதான்
நிழலையல்ல...!//
அற்ப்புதமான வரிகள் நண்பா
இரவல் கொடுத்தவன் நாள் வந்ததும் பிடுங்கிக்கொண்டான் .....இதுதான் மனித வாழ்க்கை ......
ReplyDeleteநிஜம்...
ReplyDeleteசூப்பர்...
அடடா அசத்துய்யா அசத்துய்யா...!!!
ReplyDeleteசூப்பர் பாஸ் மனித வாழ்வில் இது தான் அனைவருக்கும் நிஜம் ...
ReplyDelete//
ReplyDeleteநிஜம் படுத்திருக்கையில்
நிழல் எங்கோ
தலைமறைவாகிவிட்டது...!
//
நல்ல வரிகள்
மிக அருமையாக இருக்கிறது கருண்.. வார்த்தை நெஞ்சில் நிறுத்திக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
ReplyDeleteநிசமா நல்லாயிருக்கு நண்பா
ReplyDeleteSuper.........
ReplyDeleteமாப்ள உங்க அளவுக்கு புலமையில்ல! அதனால ஒன்லி வாழ்த்துக்கள் ங்கே(உபயம் மனோ எனும் நண்பர்!)
அன்பின் கருண்
ReplyDeleteஅருமையான தத்துவம் கவிதையாக மலர்ந்திருக்கிறது. நல்ல சிந்தனை. ஒற்றுப்பிழைகள் தவிர்க்க முய்லௌங்கள் கருண். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
காயமே இது பொய்யடா
ReplyDeleteவெறும் கார்ற்றடைத்த பையடா
நல்ல கவிதை.
ReplyDeleteVery Super.....
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஉண்மையில் நிழலாக உயிரைக் கற்பனை செய்தது
புதுமை அருமை
நிழல் உலக தாதாக்கள் போல்
இருப்பிடம் தெரியாது அனைத்து
காரியங்களையும் செய்து கொண்டிருந்தது
அதுதானே
மனங்கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
ஆஹா..கருனுக்கு கவிடஹி வசப்பட்டு விட்டதே! நல்லா இருக்கு.
ReplyDeleteமிகவும் ரசித்தேன் நண்பரே ..
ReplyDeleteஉணர்வுப்போர்வமான வரிகள் ..வாழ்த்துக்கள்
சோகம் ததும்பும் கவிதை.மனசெல்லாம் பாரமாகி விட்டது.
ReplyDeleteநல்ல வரிகள் யோசிக்க வைக்கும் சிந்தனை வாழ்கையை கவிதையில் படம் பிடித்து இருகிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteயாருக்கும் தீங்கிழைக்காததால்
ReplyDeleteஅவர் நல்லவரென்று
நால்வர் முன்வந்து
தூக்கிச் சென்று;
மண்ணுக்கடியிலோ
நெருப்புக்குள்ளோ மூடி
தொலைத்துவிட்டு வீடு
திரும்புவது;
நிஜத்தைதான்
நிழலையல்ல...!//
வித்தியாசமான குறியீட்டு வடிவில் ஒரு கவிதையினைத் தந்திருக்கிறீங்க..
நிஜம்....ஒரு மனிதன் பிணமான பிற்பாடு, சமூகம் அவனுக்கு எத்தகைய உணர்வுகளைக் கொடுக்கிறது என்பதனை தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறீங்க..
நிஜம், நிழல் பற்றிய புரிதலற்ற மனங்களுக்கான புரிந்துணர்வாக உங்களின் கவிதை அமைந்திருக்கிறது சகோ.
//இத்தனை நாள்
ReplyDeleteநிழல் தான்
நிஜத்தை
இயக்கிக் கொண்டிருந்தது //
கொண்டிருக்கிறது...
சோனியாவையும் + மன்மோகன் ஜீயையும் சொல்றீகளோ ?
சூப்பர்..
மிக அருமை பாஸ்! :-)
ReplyDeleteயாருக்கும் தீங்கிழைக்காததால்
ReplyDeleteஅவர் நல்லவரென்று
நால்வர் முன்வந்து
தூக்கிச் சென்று;
மண்ணுக்கடியிலோ
நெருப்புக்குள்ளோ மூடி
தொலைத்துவிட்டு வீடு
திரும்புவது;
நிஜத்தைதான்
நிழலையல்ல...!
supper .
very very nice...
congratulation"