Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/28/2011

சுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசியங்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


அன்பு  உறவுகளே இந்தக் கட்டுரையைப் பொறுமையாக படியுங்கள்.. நேரத்தைக் காரணம்காட்டி ஒதுக்காதீர்கள். அவ்வளவு முக்கியமான கட்டுரை என்றே நான் நினைக்கிறேன். இந்த கட்டுரையை வெப்துனியாவில் படிக்கும்போதே இதன் முக்கியத்துவம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் முக்கியத்துவத்தை நீங்களும் பதிவு செய்யுங்கள்..

நமது நாட்டில் சில நேரங்களில் வெளியாகும் கூர்மையான சிக்கல்கள் ஊடங்களில் செய்தியாக வெளிவந்து, விவாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும்.



அவ்வாறு மறைந்துவிடுவதற்கும், மறைக்கப்படுவதற்கும் பின்னணியில் மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். அதற்கு ஏதுவாக நமது நாட்டில் நாளும் ஒரு பிரச்சனை முளைக்கிறது, அதன் மீது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து வெளியாகிறது. 

தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. அப்படி ஏதும் பிரச்சனை வராவிட்டால், இப்போது மத்திய அரசு டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை உயர்த்தியதே, அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் அதனால் உருவாகும் பிரச்சனை ஏற்கனவே பாதிப்பை உருவாக்கிய பிரச்சனையை மிக இலாவகமாக பின்னுக்குத் தள்ளிவிடும்.

இப்படி பின்னுக்குத் தள்ளப்பட்ட மிக முக்கியமான ஒரு பிரச்சனைதான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம், அரசு இல்லம் ஆகியவற்றில் தடவப்பட்டிருந்த ‘பசை’ தொடர்பான பிரச்சனையாகும்
. பிரதமருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த அமைச்சராக இருக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் வடக்கு கட்டடத்தில் அமைந்துள்ளது.

அந்த அலுவலகத்தின் சுவர்களில் 16 இடங்களில் இப்படி பசை ஒட்டியிருப்பது ‘கண்டுபிடிக்கப்பட்ட’தாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் அமைச்சர் பிரணாப்.

வெறும் பசை மட்டும் ஒட்டியிருக்கவில்லை, பசை இருந்த இடத்தில் துளைகளும் போடப்பட்டிருந்தது என்று தனது கடிதத்தில் கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, அதில் சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் அளவில் மிகச் சிறியதான ஒலி வாங்கிகளை அல்லது புகைப்படக் கருவிகளை பொருத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதாகவும், அது குறித்து ‘ஆழமாக’ விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்தக் கடிதம் எழுதப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில். ஆனால் அந்த விவரம் இப்போதுதான் வெளியாகியுள்ளது. எப்படி வெளியானது, யார் வெளியிட்டது என்பதைப் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியாகவில்லை. 

ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியா தொலைபேசி உரையாடல் போல், வெளியிட்டவர் யார் என்று தெரியாமலேயே இதுவும் வெளிவந்துள்ளது.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்னரே, தனது அமைச்சகத்திற்கு உட்பட்ட வருவாய் துறையின் புலனாய்வுப் பிரிவைக் கொண்டு ஆராய்ந்து, அது இரகசியத்தை அறிவதற்காகவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதை பிரணாப் புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உளவுப் பிரிவு புலனாய்வு செய்து, அந்த பசை என்னவென்பதை கூறியதுதான் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியது.

பிரணாப் லுவலகத்தில் ஆங்காங்கு ஒட்டியிருந்தது சுயிங்கம் என்றது ஐ.பி.! இந்தக் ‘கண்டுபிடிப்பு’ மேற்பார்வைக்கு நகைச்சுவையாகத் தெரிந்தாலும், மிக அரிதான ஒரு விடயத்தை பூசி, மெழுக சுயிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

பசை போன்று ஒட்டப்பட்டிருந்தது சுயிங்கம் என்று கண்டுபிடித்துக் கூறிய ஐ.பி. அது ஒட்டியிருந்த இடங்களில் எல்லாம் துளையிடப்பட்டிருந்ததே அதற்கு என்ன விளக்கம் அளித்தது என்று தெரியவில்லை. ஆனால், பிரணாப் முகர்ஜி அதனை கேட்கவில்லை! ஆமாம் சுயிங்கம்தான் என்று அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்! இடையில் சமரசம் நடந்துள்ளது தெரிகிறது, ஆனால், யாருக்கும் பிரணாப்பிற்கும் இடையில் என்பதுதான் புரியாத புதிர்.

இந்த பசை அல்லது சுயிங்கம் ஒட்டப்பட்ட காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். நீரா ராடியா தொலைபேசி...

உரையாடல்கள் வெளிவரத் தொடங்கிய நேரம் அது. ஆனால் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் யாவும், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டவை, அதாவது இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது செய்யப்பட்டவைதான். 

அந்த உரையாடல்களில், 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிற்குப் பிறகு அமைச்சர் பொறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அது ஒராண்டு காலத்திற்குப் பிறகு வெளியாகிறது.

நீரா ராடியா கைபேசி உரையாடல்களில் பதிவான விவரங்கள் அனைத்தும், அமைச்சர் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள், எந்தெந்த ‘அடிப்படை’யில் நியமிக்கப்பட்டார்கள் என்கிற உண்மைகளை வெளிப்படுத்தின. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெருமை மிகவும் காயப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அது மட்டுமின்றி, மற்றொரு முக்கிய மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விவரங்கள் நீரா ராடியா உரையாடல் பதிவுகள் மூலம் வெளியான பிறகு செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், அந்த உரையாடலில் சிக்கியிருந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. முரளி தியோரா, பிரஃபுல் பட்டேல் உள்ளிட்ட அமைச்சர்கள் வகித்த துறைகள் மாற்றப்பட்டன. அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது (இதை தமிழ்.வெப்துனியா.காம் ஒரு கட்டுரையில் அப்போதே வெளிக்கொணர்ந்தது), அந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்தாய்வுகள் பிரதமரின் இல்லத்தில்தான் நடந்தது. அதற்கு முன் இவை யாவும் சோனியாவின் இல்லத்தில்தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குள்ளும் ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. அதில் சோனியா, சிதம்பரம் ஒரு பக்கமும், பிரதமர், பிரணாப் முகர்ஜி ஆகியோர் மற்றொரு பக்கமும் உள்ளது தெரிகிறது. 2ஜி அலைக்கற்றை ஒத்துகீடு முறைகேட்டில் பெரும் பங்கு சோனியாவிற்கே சென்றுள்ளது என்று குற்றஞ்சாற்றிவரும் சுப்ரமணிய சுவாமியை நாடாளுமன்ற நிகழ்ச்சி ஒன்றில் புன்சிரிப்போடு அரைவணைக்கிறார் பிரதமர்!

இப்போது, ப.சிதம்பரம் மீது 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாற்று கூறும் சுப்ரமணிய சுவாமி, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் நடந்த பசை விவகாரத்தில் சிதம்பரத்தின் கை உள்ளது என்று கூறுகிறார். அவ்வாறு கூறுவதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார்!

ஆக, டெல்லியில் நடக்கும் அந்தப் பனிப்போர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், ஆட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரதமருக்கும் இடையிலானது என்பது புலனாகிறது.

இதன் பின்னணி என்ன? இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்று ஓராண்டு கழித்து (2010 மே) செய்தியாளர்களிடம் பேசிய பிரதமரிடம், இளைஞர்களுக்கு வழிவிட்டு (இராகுல் காந்தியை மையப்படுத்தி) பதவியில் இருந்து விலகுவீர்களா என்று வினா தொடுக்கப்படுகிறது. அந்த வினாவின் பின்னணி புரிந்தவராய் பதில் கூறிய பிரதமர், இளைஞர்களுக்கு எப்போதும் இடமுண்டு என்று கூறுகிறார். இதன் பிறகே, நீரா ராடியா பேச்சுப் பதிவுகள் எல்லாம் வெளிவருகின்றன.
ஒரு கட்டத்தில் இராகுல் காந்தி இவ்வாறு கூறினார்: “நாங்கள் அரசியலுக்கு வருவோம் என்று பேசினாலே உடனே போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பற்றி பேசி, எங்களை அச்சுறுத்திகிறார்கள்”. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் இராகுல் காந்தி, பிரதமர் ஆக தகுதி பெற்றவர் என்று அக்கட்சி பரப்புரை செய்து வருகிறது. அந்த நிலையை முன் தாக்குதல் நடத்தி முறியடிப்பது எப்படி? ஏனென்றால் அடுத்த 5 ஆண்டுக்காலமும் பிரதமராக நீடிப்பேன் என்றல்லவா மன்மோகன் சிங் கூறினார்!

போபர்ஸ் இடத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளதோ? டெல்லி அரசியல் போக்கு விரைவில் அந்த உண்மையை வெளிக்கொணரும்.

இதையும்படிங்க ....



22 comments:

  1. நல்லா சொல்லி இருக்காங்க வெப் துணியால...நீங்களும் அதை விளக்கப்படுத்தியதுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  2. விரிவான அலசல்! படித்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. விளக்கமான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. விளக்கமான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஒரு நாட்டின் ஆளுங்கட்சியின் முக்கியமான பொறுப்பில் உள்ள அமைச்சரே பாதுகாப்பு சரியில்லை என்று புகார் கொடுத்தால் நாட்டின் லட்சணத்தை பாருங்கள் , இவனுங்க செய்ற ஆட்சியின் அவலநிலையை பாருங்கள். என்னடா ஆட்சி நடுத்துறீங்க லூசு பசங்களா.

    ReplyDelete
  6. இதில் உங்களின் கருத்து என்னவென்று சொல்லவே இல்லையே !?

    ReplyDelete
  7. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! கூறியது...

    இதில் உங்களின் கருத்து என்னவென்று சொல்லவே இல்லையே !?//// நண்பரே இதிலிருக்கும் கருத்துகளே விரிவான அலசலுடன் இருக்கிறதால் நான் தனியாக கருத்து கூற விரும்பவில்லை..
    இதைப் பற்றிய என்னுடைய கருத்துகளை தனிப் பதிவாக போடுகிறேன் தோழரே,,

    ReplyDelete
  8. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்ப

    ReplyDelete
  9. மென்று துப்ப வேண்டிய ஒரு பொருள்; இங்கு மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை!
    நல்ல அலசல்!

    ReplyDelete
  10. 7777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777777

    ReplyDelete
  11. அரசியல் அரசியல் அரசியல்......எதுவும் எப்படியும் நடக்கலாம்...........

    ReplyDelete
  12. சிபியோட கீபோர்ட்ல 7 சிக்கிக்கிடுச்சோ?

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  14. நல்ல பதிவு பாஸ், அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு ,

    பொறுமையாக படித்தேன் நன்றி பாஸ்

    ReplyDelete
  15. அரண்மனை ரகசியம் கொலு மண்டபத்துக்கு ஒவ்வொன்றாக வரும்.

    ReplyDelete
  16. நண்பா... பகிர்வுக்கு நன்றி... சுயிங்கம்மை மென்றது யார்?

    ReplyDelete
  17. நீண்ட பதிவுதான் இருந்தாலும் படித்துவிட்டேன்...

    ReplyDelete
  18. காத்திரமான ஒரு பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி சகோ.

    ReplyDelete
  19. ஓ இப்பிடியெல்லாம் அநியாயம் நடக்குதா கொய்யால....!!!

    ReplyDelete
  20. நல்லதொரு தகவல் பகிர்வுக்கு
    மிக்க நன்றி...........

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"