நம் நாட்டில் எங்காவது ரயில் விபத்து ஏற்பட்டால் உடனே அமைச்சர் விரைந்து சென்று பார்வையிடுவார். பத்து லட்ச ரூபாய் இழப்பீடு இத்யாதி, இத்யாதி என பல அறிவிப்புகள் அறிவிப்பார். பயங்கரவாதிகள் தாக்குதல், உயிர்ப்பலி என்றால், 'மிகவும் கோழைத்தனமானது இது அனுமதிக்க முடியாது', இதை நாங்கள் 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்பார் அமைச்சர். உயிரிழந்தோருக்கு இழப்பீடு, அனுதாபம், ஆதரவு பேச்சு என பல நாடகங்களை அரங்கேறும் .












