Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/22/2011

ஒரு சந்தோசம்? அவளிடம் பேசிவிட்டோம்..!




ன்னைக் கட்டுப்படுத்த 
முயன்றும் 
என் கால்கள் நகரவில்லை 
என்னை மீறி 
என்னுள்ளிருந்து
ஒரு குரல் ...

வளை நோக்கி
ஹலோ ! நலமா?
எப்படி இருக்கிறீர்கள்?

வளின் மறு பேச்சிற்கு 
இடமளிக்காமல்
நானும் தொடர்ந்தேன்...

த்தனை மாதங்கள்
ஆயிற்று 
உங்களைப் பார்த்து...

ரி, இப்போதும் 
அங்கேயே 
வேலை செய்கிறீர்களா?
சம்பள உயர்வு 
கொடுத்தார்களா?

வள் முகம் 
ஒரு மாதிரியாக மாறியது
வெறுப்பில் 
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு 
ஏதோ பேச வர 
அதை பொருட்படுத்தாமல் 
நானும் தொடர ...

ம்மா எப்படி 
இருக்கிறார்கள்.
தம்பி, தங்கை 
சுகம்தானே...

மாப்பிள்ளை பார்த்தார்களே 
உனக்கு 
திருமணம் ஆகிவிட்டதா?

விடாமல் கேட்டுக் 
கொண்டிருந்த நான் 
சிறிது நிறுத்தி 
அவள் முகத்தைப் பார்த்தேன்...

நீ யார்?
உன்னை நான்
பார்த்த மாதிரி இல்லையே?
என்றாள்...!

நானும்தான் 
உன்னை இதுவரை 
பார்த்தது இல்லை 
என மனதில் 
நினைத்துக் கொண்டு
" ஓ .. அது நீங்க இல்லையா சாரி...!"
என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.

42 comments:

  1. கவிதைகாரன் கவிதை போட்டிருக்கான்... நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. கவிதையில ஜொள்ளு ஓவரா இருக்கே... இப்படி தான் நிறைய பேரு யாருன்னு தெரியாமலே பிட்டு போடறாங்க....

    ReplyDelete
  3. எலேய் கொஞ்ச நாளாவே நீ ஒரு மார்கமா போயிட்டு இருக்க ஹிஹி!

    ReplyDelete
  4. மாப்ளே. விடய்யா.. விடய்யா.. மனோவுக்கு ஒரே ஃபிகரு.. உனக்கு , விக்கி தக்காளிக்கு ஊரெல்லாம் ஃபிகரு..

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  6. ஆகா..

    கிளம்பிட்டாங்கய்யா
    கிளம்பிட்டாங்க..

    ReplyDelete
  7. நல்லாதானே பேசியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. Kavithai and picture both are very super

    ReplyDelete
  9. நல்லவேளை நகர்ந்துட்டீங்க.இல்லாட்டி என்னாகியிருக்குமோ?

    ReplyDelete
  10. ஓவர் வழியல் போல. உங்க மாணவர்கள் பார்க்கறதுக்குள்ள தொடைச்சுக்கிடுங்க.

    ReplyDelete
  11. aakaa கவிதை நல்லாபே இருக்கு - நச்சுன்னூ முடிச்சிருக்கிங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அட முதல் பார்வையிலேயே இத்தனை கேள்விகளா ....
    அட நல்ல சிந்தனை தான் நண்பா ...

    ReplyDelete
  13. ஹிஹிஹி ,என்ன பாஸ் பல்ப் போன கதையா ....

    எதிர்பார்ப்புடன் நகர்த்தி நச்சென்று ஒரு முடிவு நல்லாய் இருக்கு ....

    ReplyDelete
  14. ஹிஹிஹி ,என்ன பாஸ் பல்ப் போன கதையா ....

    எதிர்பார்ப்புடன் நகர்த்தி நச்சென்று ஒரு முடிவு நல்லாய் இருக்கு ....

    ReplyDelete
  15. நண்பா, அழகான சிறுகதைக்கான நாட்..அழகான கவிதை ஆக்கிவிட்டீர்கள்!

    ReplyDelete
  16. ஒரு சந்தோஷம். உங்கள் கவிதையை வாசித்தோம். நன்றாக இருந்தது.

    ReplyDelete
  17. //நீ யார்?
    உன்னை நான்
    பார்த்த மாதிரி இல்லையே?
    என்றாள்...! //
    முத்திடுச்சா ....?

    ReplyDelete
  18. மாப்பிள்ளை பார்த்தார்களே
    உனக்கு
    திருமணம் ஆகிவிட்டதா?

    விடாமல் கேட்டுக்
    கொண்டிருந்த நான்
    சிறிது நிறுத்தி
    அவள் முகத்தைப் பார்த்தேன்..நச்சுன்னூ முடிச்சிருக்கிங்க - நல்வாழ்த்துகள் -

    ReplyDelete
  19. மாப்ள வேணாம்டா என் தங்கச்சிய விட்டுட்டு யார் கூட சுத்திகிட்டு இருக்க, மொதல்ல வீட்டுக்கு ஒரு போன் போட்டா தான் அடங்குவ போலிருக்கு.

    ReplyDelete
  20. ரெண்டு நாளா நான் காணோமா நீ தாண்டா காணோம் நம்பருக்கு போன் பண்ணா எவளோ ஒருத்தி எடுத்து தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கார் சொல்றா....

    ReplyDelete
  21. nalla kavithai

    supper
    valththukkaL

    ReplyDelete
  22. நல்ல கவிதை. நல்ல படம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வித்தியாசமா இருக்கு கவிதை.
    அருன் உண்மை சொல்லுங்க.
    உண்மையா நடந்திச்சா இப்பிடி !

    ReplyDelete
  24. சூப்பர் வாத்தியாரே!

    என்னமா விடுறீங்க ஜொள்ளு

    ReplyDelete
  25. //நானும்தான்
    உன்னை இதுவரை
    பார்த்தது இல்லை
    என மனதில்
    நினைத்துக் கொண்டு
    " ஓ .. அது நீங்க இல்லையா சாரி...!"
    என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.//

    என்ன ஒரு வில்லத்தனம். ரொம்ப நல்லாவே இருக்குங்க.

    ReplyDelete
  26. ஹா ஹா
    அசத்தல் பாஸ்

    ReplyDelete
  27. பாஸ் செம ரொமான்ஸ்

    ReplyDelete
  28. செம பல்பு...

    அதை சமாளித்த விதம் அதை விட அருமை.

    ReplyDelete
  29. இம்புட்டு நடக்குதா..

    அழகிய காதல் கவிதை..

    ReplyDelete
  30. கவிதை நல்லாயிருக்கு கருன்

    ReplyDelete
  31. ஹிஹி ஆசிரியர் கவிதை..ஹிஹி

    ReplyDelete
  32. முடிவு ...ஹிஹிஹி ஏன் பாஸ் ஏன்??

    ReplyDelete
  33. காதலியினைப் பிரிந்தாலும்,
    அவளைப் பற்றிய நினைப்பின் பிரம்மையோடு நகர்ந்து, அவளைப் போன்ற பாவனையுள்ள இன்னோர் பெண்ணோடு உரையாடிச் சஸ்பென்ஸாக கவிதையின் முடிவினை இறுதியில் தந்திருக்கிறீங்க.


    யதார்த்தம் நிறைந்த வசன கவிதை அருமை.

    ReplyDelete
  34. அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் பேச என்னவெல்லாம் செய்கிறார்கள்!

    ReplyDelete
  35. andha oruthiyidam mattum thaanaa illai.............? idhe thaan velaiya?

    ReplyDelete
  36. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_25.html//

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"