Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
12/14/2011
6/22/2011
ஒரு சந்தோசம்? அவளிடம் பேசிவிட்டோம்..!
என்னைக் கட்டுப்படுத்த
முயன்றும்
என் கால்கள் நகரவில்லை
என்னை மீறி
என்னுள்ளிருந்து
ஒரு குரல் ...
அவளை நோக்கி
ஹலோ ! நலமா?
எப்படி இருக்கிறீர்கள்?
அவளின் மறு பேச்சிற்கு
இடமளிக்காமல்
நானும் தொடர்ந்தேன்...
எத்தனை மாதங்கள்
ஆயிற்று
உங்களைப் பார்த்து...
சரி, இப்போதும்
அங்கேயே
வேலை செய்கிறீர்களா?
சம்பள உயர்வு
கொடுத்தார்களா?
அவள் முகம்
ஒரு மாதிரியாக மாறியது
வெறுப்பில்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
ஏதோ பேச வர
அதை பொருட்படுத்தாமல்
நானும் தொடர ...
அம்மா எப்படி
இருக்கிறார்கள்.
தம்பி, தங்கை
சுகம்தானே...
மாப்பிள்ளை பார்த்தார்களே
உனக்கு
திருமணம் ஆகிவிட்டதா?
விடாமல் கேட்டுக்
கொண்டிருந்த நான்
சிறிது நிறுத்தி
அவள் முகத்தைப் பார்த்தேன்...
நீ யார்?
உன்னை நான்
பார்த்த மாதிரி இல்லையே?
என்றாள்...!
நானும்தான்
உன்னை இதுவரை
பார்த்தது இல்லை
என மனதில்
நினைத்துக் கொண்டு
" ஓ .. அது நீங்க இல்லையா சாரி...!"
என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
6/08/2011
இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)
இது பகுதி - 2
ஒரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !
மனதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.
அன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை
நான்
ஆக்கிரமித்துக் கொண்டேன்.
அதோ வருகிறாய்
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி
திரும்பிப் பார்த்தாய்.
அப்போதும் நீ
பேசவில்லை
உன் உதடுகள் தான்
ஒரு புன்னகை
புரிந்துவிட்டு போனது.
அதில்
என்னையே மறந்துப் போனேன்
என் காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?
மீண்டும் கலவரமானேன்!!!
அன்று
இரவு முழுவதும்
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக
விடிந்தது...!மீண்டும் உன்முன்
உதயமானேன்,
நீ என்னை
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!
சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
6/06/2011
இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)
இது ஒரு தொடர்க(வி)தை, கவிதை வடிவில் உள்ள உண்மைக் கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....
இரவெல்லாம் விழித்ததில்
பகலில்
சிவந்து போன கண்கள்..!
இளமையில் காதலித்ததால்
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!
இரண்டும்
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!
புதைந்துப் போன
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!
உன்னோடும்
உன் நினைவோடும்
பள்ளியில்
சுற்றித் திரிந்த
என் அகராதியை
புரட்டிப் பார்க்கிறேன்...!
பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல்
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள்
சந்தித்துக் கொண்டன ...!
ஒரு நாள்
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில்
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!
அன்றுதான்
எனக்குள் என்னை
அறிமுகப் படுத்தியது காதல்...!
அனுபவம் இல்லாத
அனுபவத்திற்கு
என் முனகல்களை எல்லாம்
முடிச்சுப்போட்டு
எழுதினேன் காகிதத்தில்
அது உன் கைகளில்
கடிதமாக...!
மறு நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச்
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக
காத்திருந்தேன்...!
ஏமாற்றம்... ஏமாற்றம்...!
- தொடரும் !!!
4/29/2011
முகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின் காதலன் தற்கொலை
இனிமையான குரலுக்குச் சொந்தமான காதலி, வசீகரமான தோற்றுத்துடன் இல்லாததால் மனமுடைந்து காதலன் தற்கொலை கொண்டார். நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இப்படித்தான் சினிமா பாணியில் கோவையில் முகம் பார்க்காமல், மொபைல் போன் மூலம் காதலை வளர்த்த காதலன், சந்திப்புக்கு பின், திடீரென தற்கொலை செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, நேதாஜி நகரில் வசித்தவர் நடராஜன் (24); இப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு, போத்தனூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். போனில் பேசிய அவர் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவருடன் பேச வேண்டும் என கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய நடராஜ் சாரி நீங்கள் தொடர்பு கொண்டது ராங் நம்பர் என்றார். ஆனால் சில நாட்களில் ராங் நம்பர் நபர் நண்பரானார்.
இருவரும் தொடர்ந்து போனில் நட்பை வளர்த்தனர். காலப்போக்கில் நட்பு காதலானது. ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலை வளர்த்துக் கொண்டனர். காதலில் விழுந்த இருவரும் நேரில் பார்க்க வேண்டும் என திட்டம் தீட்டினர். நான்கு நாட்களுக்கு முன், நேரில் சந்திக்கக்கூடிய இடத்தை தேர்வு செய்து சந்தித்தனர். அழகிய குரலில் அசத்திய காதலி அழகில் மயக்குவாள் என்ற எதிர்பார்ப்புடன் குறித்த நேரத்தில் அங்கு வந்தார் நடராஜ். ஆனால் காதலி தான் எதிர்பார்த்தது போல இல்லை என்று நொந்து போன நடராஜ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.
அந்தப் பெண்ணின் மீது நடராஜூக்கு காதல் கசந்தது. போன் அழைப்பை ஏற்க மறுத்தார். தனது சகாக்களிடம் குரலை கேட்டு ஏமாந்து விட்டதாக பலமுறை புலம்பியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு, பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். நடராஜின் தந்தை சந்திரபோஸ், அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பித்து, சடலத்தை பெற்றுச் சென்றார்.
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், “முகம் பார்க்காமல் காதலித்தோம்; இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க...?
உதவி கிங்தமில்.
4/28/2011
காதல் தானா... இது காதல் தானா...?
டிஸ்கி: இது ஒரு ஜாலியான பதிவு.
மொக்கப் பதிவை பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க...
இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.
அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.
தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.
தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.
காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.
பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.
ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.
எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.
வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?
டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.
அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.
காதல் பற்றி நீங்களும் சொல்லுங்களேன்...
Subscribe to:
Posts (Atom)
















