Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/20/2011

காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய ????


ழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் தவிர்த்து, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்' என்கிறது, ஐக்கிய முன்னணி அரசு!

இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை

ஊழல் செய்தார் என, இந்திராவுக்கு எதிராக, அலகாபாத் கோர்ட் தீர்ப்பு சொன்னதால் தானே, இந்திரா கொதித்தெழுந்து, நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணன் குடும்பத்தினர், மகா ஊழல் செய்து, சொத்து சேர்த்த விவரங்கள், பத்திரிகைகளில் வெளிவந்து, நாறிப்போனது தெரியாதா? 

வி.வி.கிரி ஜனாதிபதியாக இருந்தபோது, வழக்கு விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டது மறந்து விட்டதா?பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தானே, பெரிய அளவில் ஊழல் செய்கின்றனர். இந்த லட்சணத்தில், பிரதமரையும், நீதிபதிகளையும் விலக்கு அளிக்கச் சொல்வது, எந்த வகையில் நியாயம்? 

மன்மோகன் சிங் கடுமையாக நடந்து கொண்டிருந்தால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் அரங்கேறியிருக்க முடியாதே!ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும். சாதாரணக் குடிமகன், சீதை மீது குற்றம் சொன்னதால், ராமன் அவளைக் காட்டுக்கு அனுப்பினானே!காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய வேண்டுமானால், யாருக்கும் கருணை காட்டக்கூடாது. 

32 comments:

  1. சரி வடைய எடுத்துட்டு கெளம்புறேன்.......

    ReplyDelete
  2. raittu ரைட்டு.. நீ நெல்லை வராததில் எனக்கு வருத்தமே

    ReplyDelete
  3. அதானே .....எல்லோரும் உள்ளே வாங்கப்பு.......

    ReplyDelete
  4. சிபி அண்ணனோட வடையை யாரோ திருடிட்டு போயிட்டாங்க

    ReplyDelete
  5. //ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும். //
    ஏற்றுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  6. தமிழ் மணம் இப்பச் சரியாப் போச்சு!

    ReplyDelete
  7. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. //
    ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும்.

    //
    கண்டிப்பா வரணும்

    ReplyDelete
  9. இதை சொன்ன உங்களை தேச துரோகினு சொல்லுவாங்க

    ReplyDelete
  10. காந்திய சும்மா பேருக்கு மட்டும் தாம் பயன்படுத்துவானுங்க

    ReplyDelete
  11. ///ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும்./// நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே ....

    ReplyDelete
  12. உண்மைதான். யாராக இருந்தாலும் பாரபட்சம் கூடாது.

    ReplyDelete
  13. karun கருன் எப்படி நலமா? ஏன் எனது ப்ளாக் பக்கம் வருவதில்லை? ஹன்சிகா வயசுக்கு வந்தது பத்தி ஒரு விபரணக்கட்டுரை போட்டிருக்கேன், டைம் கெடைச்சா வாங்க!

    ஹி ஹி ஹி கெடைக்கலின்னாலும் வாங்க!

    ReplyDelete
  14. இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை

    ReplyDelete
  15. //இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை// உளம் கனிந்த பாராட்டுகள் மிகவும் நன்றகவே செய்திருக்கிறீர்கள் எல்லோருமே இங்கு குற்றவளிகல்தான் அனைவரையும் கூண்டில் ஏற்றவேண்டும்

    ReplyDelete
  16. வந்தாச்சு ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  17. ஊழலை ஒழிக்க வேண்டுமெனில், அந்த ஆண்டவனைக் கூட விசாரணைக்கு அழைக்க வேண்டும்.
    :))
    true

    ReplyDelete
  18. அதானே அவர்கள் மட்டும் என்ன வானத்தில் இருந்தா குதித்தார்கள்? விஜயகாந்த் ஸ்டைலில் சொன்னால் அவர்கள் மக்களின் வேலைக்காரர்கள்தானே?

    ReplyDelete
  19. ஊழலை ஒழிக்க எல்லோரும் ஒன்றிஒணைந்து செயல்பட வேண்டும்..

    ReplyDelete
  20. பிரதமர் என்ன அப்பாடக்கரா?..நல்ல பதிவு கருன்.

    ReplyDelete
  21. உண்மையான ஆதங்கம் பாஸ் !!

    ReplyDelete
  22. உண்மையான ஆதங்கம் பாஸ் !!

    ReplyDelete
  23. அருமையான நியாயமான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. வாஸ்தவம் தான் பாஸ்

    ReplyDelete
  25. நீதி என்பது எல்லோருக்கும் சமமானது என்று இவர்களுக்கு எப்போதுதான் புரிய போகுதோ

    ReplyDelete
  26. கால தாமதம் செய்வதற்குஅல்லது
    அப்படியே இந்த ஊழல் எதிர்ப்பு உணர்வை
    மங்கிப்போகச் செய்வதற்கு
    இப்படியெல்லாம் இழுத்தடிக்கிறார்களோ
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. ஊழல் பற்றிய ஒரு வித்தியாசமான பதிவினைத் தந்திருக்கிறீங்க. கல்வியறிவில் மேம்பட்ட,
    தொலை நொக்குடைய இளைஞர்களின் ஆட்சி எப்போது எம் இரு நாடுகளிலும் உருவாகிறதோ, அப்போது தான் ஊழலை அழிக்க முடியும்,

    இறைவன் கூட ஊழல் செய்தவன் - சொல்லடியால் ஒரு சாட்டை .

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"