Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/13/2011

நீயும்.... நானும்.....


அத்தியாயம்- ஒன்று

ற்றங்கரை ஓரத்தில் 
மணல் குவித்து 
வீடு கட்டி - அதில் 
விடியும் வரை குடியிருந்து 
விளையாண்ட கதை...!

கூட்டாஞ்சோறு சமைக்க
உங்க வீட்டில் ஒரு படி அரிசியும்
எங்க வீட்டில் கொஞ்சம் உப்பும் புளியும்
திருட்டுத்தனமாய் எடுத்து வந்து 
கூட்டாஞ்சோறு சமைத்துக் 
கூடி நின்று தின்ற கதை...!


அத்தியாயம் - இரண்டு

நீ பூப்படையும் முன்னாலே
மூங்கில் மரக் காடுகளில் 
ஏதோ ஒரு இளம் மூங்கில் மரத்தில்
உன் பெயரும், என் பெயரும்
எழுதியதால் என்னவோ?
யாரும் வெட்டாமல் விட்டதால் 
மூங்கில் பூப்படைந்து 
பூத்து புல்லாங்குழல் 
ஆன கதை...!

அத்தியாயம் - மூன்று 

ன்னை விட்டுப் 
பிரிந்த போது 
ஊரெல்லாம் 
சாலைகள் தேயும்வரை 
நடந்த கதை...!

ப்படி 
எத்தனையோ ஞாபகப் பொழுதுகள் 
கடந்தாலும் ...
சேர்த்தே வைத்திருக்கிறேன் ... நீ 
கொடுத்த மயிலிறகையும்
நான் திருடிய 
உன் கூந்தல் முடியையும்...!

நேற்று 

கூவம் ஆற்று ஓரமாகக்
கைக் குழந்தையோடு 
இரவு பெய்த அடைமழையில் 
நனைந்த புத்தகங்களை ..
காலை வெய்யிலில் காயவைத்துக் 
கொண்டிருந்தாயே ..
நீதானா? எனக் 
கிளர்ச்சியோடு கண்டபோது 
சாலையில் பச்சை விளக்கு 
விழி திறந்து கொண்டது 
பாரமான நெஞ்சோடு 
சாலையைக் கடந்தேன்...

ரவு தூங்காத விழிகள் 
மூடாமல் கிடந்தன ...!

இன்று 

தினமும் இந்த வழியாய்ப் 
போகும் போதும்
வரும் போதும் 
பரவசமாய்ப் பார்வையை விதைப்பேன்
அடியே... உன் ஞாபகம்தான் 
முளைக்கிறது அங்கே ...!



தயவு செய்து சொந்த அனுபவமா என கேட்காதீர்கள் . கவிதைக்கரு நண்பர் கவிபாஸ்கர். 

39 comments:

  1. ஒரு கவிதையில இம்புட்டு அத்தியாயமா?

    ReplyDelete
  2. சொல்லாத காதல் எப்போதுமே நினைவை விட்டு அகலாது.... அதுவும் அவளை மீண்டும் பார்த்தால்?

    ReplyDelete
  3. சூப்பர் பாஸ்...
    நல்ல கற்பனை..என்னோட பதிவிற்கு சரியான பதிலை சொல்லலையே?நோ டைமா?

    ReplyDelete
  4. அன்பின் கருண் - ஒற்றுப்பிழை சந்திப்பிழை தவிர்க்கலாமே ! காதல் தோல்வி அருமையான கவிதையாக வந்து விட்டது. எளிய இயல்பான சொற்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆன கதை...//

    Nice...

    ReplyDelete
  6. எல்லாமே அனுபவமா கருண்.. வார்த்தைகளால் விளாசித் தள்ளுகிறீர்கள்..!!!

    கவிதை வண்ணமயமாய் மனதில் மின்னிக் கொண்டிருக்கிறது..!!

    ReplyDelete
  7. கடைசி வரியைப் படிக்க தவறிவிட்டேன்..

    மற்றபடி கவிதை அருமை..வார்த்தைகளால் விளாசித் தள்ளுகிறீர்கள்..!!!

    கவிதை வண்ணமயமாய் மனதில் மின்னிக் கொண்டிருக்கிறது..!!

    ReplyDelete
  8. //தினமும் இந்த வழியாய்ப்
    போகும் போதும்
    வரும் போதும்
    பரவசமாய்ப் பார்வையை விதைப்பேன்
    அடியே... உன் ஞாபகம்தான்
    முளைக்கிறது அங்கே ...!//கவிதை வண்ணமயமாய் மனதில் மின்னிக் கொண்டிருக்கிறது..!!

    ReplyDelete
  9. //என்னை விட்டுப்
    பிரிந்த போது
    ஊரெல்லாம்
    சாலைகள் தேயும்வரை
    நடந்த கதை...!//கவிதை வண்ணமயமாய் மனதில் மின்னிக் கொண்டிருக்கிறது..!!

    ReplyDelete
  10. இது அழகி என்ற தமிழ்படத்தின் கதைபோல தெரிகிறதே? நீங்களுமா?

    ReplyDelete
  11. இதுதான் காதல் என்பதா

    ReplyDelete
  12. சொந்த அனுபவமாக இருந்தாலும் தப்பில்லை

    ReplyDelete
  13. கவிதைக்கதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  14. எல்லாமே சூப்பர்.....

    ReplyDelete
  15. Do Visit

    http://verysadhu.blogspot.com

    ReplyDelete
  16. கவிதை நல்லா இருக்கு மாப்ள

    ReplyDelete
  17. நல்லாருக்கு.. அதுவும் சொந்தக்கதை மாதிரியே..
    //உன் பெயரும், என் பெயரும்
    எழுதியதால் என்னவோ?
    யாரும் வெட்டாமல் விட்டதால்
    மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆன கதை...!//
    இந்த வித்தியாசமான கற்பனை ரொம்ப பிடிச்சிருக்கு.

    இன்று என் வலையில்:
    உச்சக்கட்ட இன்பம்

    ReplyDelete
  18. மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆனது அருமை...

    தேய்ந்து போன சாலைகளில் கடந்து போன நியாபகங்களும் அருமை...

    போகும் போதும் வரும் போதும் பரவசமாய் விதைத்த பார்வையில்... வரிகளின் ஆளுமையும் அருமை...

    வாழ்த்துக்கள் கருண்..!

    ReplyDelete
  19. மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆனது அருமை...

    தேய்ந்து போன சாலைகளில் கடந்து போன நியாபகங்களும் அருமை...

    போகும் போதும் வரும் போதும் பரவசமாய் விதைத்த பார்வையில்... வரிகளின் ஆளுமையும் அருமை...

    வாழ்த்துக்கள் கருண்..!

    ReplyDelete
  20. கவிதை நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நல்லாயிருக்குங்க

    நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது

    ReplyDelete
  22. மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆன கதை...//

    great love and paetic words ...

    ReplyDelete
  23. //////
    தினமும் இந்த வழியாய்ப்
    போகும் போதும்
    வரும் போதும்
    பரவசமாய்ப் பார்வையை விதைப்பேன்
    அடியே... உன் ஞாபகம்தான்
    முளைக்கிறது அங்கே ...!//////

    மனதில் நிற்கிறது...

    ReplyDelete
  24. கவிதையில பின்னுறீங்களே வாத்யாரே! நல்லாருக்கு.

    ReplyDelete
  25. இது கதையா நிஜமா..:)

    ReplyDelete
  26. உணர்வுகளை உருக்கி, தனது தோழன் கவி பாஸ்கர் அவர்களது பால்ய காலத்தில் பரவிய காதல் கொடியின் நினைவுகளையும்,

    அது பட்ட பின்னர் எந் நிலையினை எய்துகிறது என்பதையும் அழகாகச கருண் அவர்கள் இங்கே உணர்வுகளின் வெளிப்பாடாய்க் கோர்த்திருக்கிறார்.

    இறுதிப் பந்தி.பச்சை விளக்கு...

    இன்றைய பல காதல்களின் உண்மை நிலைக்குச் சாட்சியாக.

    ReplyDelete
  27. நாளை என்பதைக் காணோமே-அது
    நாளைக் கடத்தும் வழியாமே
    வேளை எதற்கும் வரவேண்டும்-இனி
    வேதனை மனதுக்கு தரவேண்டும்
    சாலை தன்னை மாற்றுங்கள்-வீண்
    சஞ்சலம் அதற்கு அகற்றுங்கள்
    வேலை யுண்டு நானுண்டு-என
    விலகுவோம் நீயும் நானுமே
    முற்றும்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. என்னய்யா அத்தியாயம் அத்தியாயமா போட்டு தாக்குறே??

    ReplyDelete
  29. அருமையான கவிதை தோழரே..

    ஒவ்வொருவரும் காதலித்தவர்களே..
    இங்கு காதலிக்காதவர்கள் யார் ?

    ஒவ்வொருவருடைய மனதிலும் ஒளிந்து கிடக்கும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.
    அன்பன் சிவ.சி.மா.ஜா

    http://sivaayasivaa.blogspot.com

    ReplyDelete
  30. மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆன கதை...! Nice Lines !

    ReplyDelete
  31. //கூட்டாஞ்சோறு சமைக்க
    உங்க வீட்டில் ஒரு படி அரிசியும்
    எங்க வீட்டில் கொஞ்சம் உப்பும் புளியும்
    திருட்டுத்தனமாய் எடுத்து வந்து
    கூட்டாஞ்சோறு சமைத்துக்
    கூடி நின்று தின்ற கதை...!//


    ரொம்ப பிடித்த வரிகள்

    ReplyDelete
  32. // இப்படி
    எத்தனையோ ஞாபகப் பொழுதுகள்
    கடந்தாலும் ...
    சேர்த்தே வைத்திருக்கிறேன் ... நீ
    கொடுத்த மயிலிறகையும்
    நான் திருடிய
    உன் கூந்தல் முடியையும்...!//

    எல்லோரும் இந்த மாதிரி ஒன்னை சேர்த்து வச்சிருப்பாங்க பாசு

    ReplyDelete
  33. //மூங்கில் பூப்படைந்து
    பூத்து புல்லாங்குழல்
    ஆன கதை...//

    அருமையான கற்பனை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. அருன்...இவ்வளவும் சொல்லிட்டு பிறகென்ன டிஸ்கி.அருமையான வரிகள் நினைவுகளோடு கவிதை !

    ReplyDelete
  35. உங்கள் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான் பாஸ், ரியலி சூப்பர், முடியும் போது மனசு கணக்குறது பாஸ்,

    ReplyDelete
  36. //என்னை விட்டுப்
    பிரிந்த போது
    ஊரெல்லாம்
    சாலைகள் தேயும்வரை
    நடந்த கதை...!//

    மிகவும் புடித்து இருக்குறது, ரியலி ஆனா வரிகள்

    ReplyDelete
  37. அருமை அருமை
    மூன்று அத்தியாயங்களாக
    கடந்த காலங்களை பிரித்திருந்ததும்
    நிகழ்காலத்துக்கு நேற்று இன்றென
    சட்டென புகுந்த விதமும்
    ஒரு தரமான திரைப்படத்தைக்
    கண்டு ரசித்த உணர்வை
    உண்டாக்கிப்போனது
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"