இந்த பழமொழி உருவானதற்கு ஒரு புராணக் கதை உண்டு.
குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.
அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார்.
அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.
ஆகவே, ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.
கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொருள்.
AI VADAI
ReplyDeleteஒ அப்படியா எனக்கு இது புதிய தகவல்
ReplyDeleteஆமாங்க, உண்மையான பழமொழிகளின் அர்த்தம் ஒன்றாகவும்,
ReplyDeleteநாம் அர்த்தப்படுத்திக்கொள்வது
வேறாகவும்தான் இருக்கு.
வடையுடன்
ReplyDeleteவிடைபெறுகிறேன்
TAMIL MANAM 1
இதைப்போல மருவிய பழமொழிகள் நிறையவே.இன்றுதான் இதைக் கேள்விப்படுகிறேன் !
ReplyDeleteஅடிக்கடி சொல்லி கேட்டு இருக்குறேன்,
ReplyDeleteஇப்போதுதான் அதன் உண்மை அர்த்தம் அறிந்து கொண்டேன்,
தேங்க்ஸ் பாஸ்
இவ்வளவு நாளும் இது தெரியாம போச்சே .....
ReplyDeleteஅது சரி ! கர்ணனோடு சேர்த்து ஆறு வரும் பொழுது இங்கு 101 தானே வர வேண்டும். அப்பொழுது பழமொழி " ஆறிலும் சாவு நூற்று ஒன்றிலும் சாவு " என்று தானே வர வேண்டும் !!! எனினும் இனிய செய்தி !
ReplyDeleteநடக்கட்டும்...
ReplyDeleteநல்ல தகவல்தான்!
ReplyDeleteசும்மா அள்ளி விடாதீரும்யா..இதென்ன உம்ம ஸ்கூலா......கௌரவர்கள் ஏற்கனவே 100 பேர்..அப்போ ‘ஆறிலும் சாவு..நூத்தி ஒன்னிலும் சாவு’ன்னு தானே சொல்லி இருக்கணும்..அஞ்சு கூட ஒன்னைகூட்டுன கர்ணன், 100கூட ஒன்னைக் கூட்டாதது ஏன்..ஏன்..ஏன்?
ReplyDeleteஇது மாத்திரமல்ல இன்னும் நிறையவே இப்படி இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.
ReplyDeleteஅருமையான பாட தகவல் பாஸ்...
ReplyDeleteஎன்ன திடிரெண்டு??
தமிழ்மணதைக் காஓம்..அப்புறமா வர்றேன்.
ReplyDeleteமுதன்முதலாக கேள்விப்படுகிறேன்.. தகவலுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம்.. அப்படின்னா ஆறிலும் சாவு நூற்றி ஒண்ணுலயும் சாவுன்னு தானே இருக்கணும்?
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலமாகத் தான் இப்படி மருவிய பழமொழிக்கான அர்த்தத்தினை அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் நல்ல புதிய தகவல் தான் இது.
ReplyDelete[ஆனால் ஆறிலும் சாவு, நூற்றிஒண்ணிலும் சாவு என்று வர வேண்டும் அல்லது ஐந்திலும் சாவு, நூறிலும் சாவு என்று வரவேண்டும் - ஆறு நூறு என்ற எதுகை மோனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக இருக்கலாம்.
குந்தி மைந்தர்கள் 1+5 = 6 ஆறு
கெளரவர்கள் = 100 நூறு
இதுவும் ஒருவிதத்தில் OK தான்.
சுவையான பதிவுக்கு, சிந்தனைக்கு நன்றிகள்.
மாப்ளே. நல்லாத்தானே இருந்தே? ஹா ஹா
ReplyDeleteமாப்ள நீ தான் ராணுவத்துல சேர்ந்துட்ட போல ரொம்ப வீரமா பேசுறானேன்னு வந்தா இப்படி பழமொழிக்கு அர்த்தம் சொல்லி கவுத்துட்டியே மாப்ள....
ReplyDeleteபழமொழிகள் எங்கிருந்து உருவானது என்று கண்டறிய புதிய ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி உள்ள கரூனுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாப்ள இந்த பழமொழியின் சிறப்பு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகல்லை கண்டால் நாயைகாணோம் என்பதும் இது போன்று அர்த்தம் பொதிந்ததே
ReplyDeleteபழமொழிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete