Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

7/20/2011

மாணவர்கள் தற்கொலை ஏன்?



ஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை, பிளஸ் 2 தேர்வில் தோல்வி, மாணவி மாயம் என, ஒவ்வொரு வருடமும், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இதுபோன்ற செய்திகள் வெளியாகத் தவறுவதில்லை. 


ஏன் இந்த அவலம்?


கல்வி என்பதை, போட்டிக் களமாக மட்டுமே பார்க்கும் நம்மவர்களின் மனோபாவமே, இதற்கு முழுக்காரணம். எந்த ஒரு துறையிலும், போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும், போட்டி பிரதானம் ஆகிவிடும்போது, இதுபோல் அவலத்தில் தான் முடியும். 


இந்த போட்டி கலாசாரத்தால், கல்வி என்பது விலை பொருளாக மாறுவதை, இனி வரும் காலங்களில் யாராலும் தடுக்க முடியாது.பணம் கொழிக்கும் தொழிலாக கல்வி மாறிவிட்டதால், தனியார் நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன


ஒரு குழந்தையின் தொடக்கக் கல்விக்கே, லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள், அன்றாடம் முளைத்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே முன்னிறுத்தி, மாணவர்களை தயார்படுத்துகின்றன.


தேர்வில் மாணவர்களை நல்ல மதிப்பெண் பெறச் செய்வதும், வளாக நேர்காணலில், முன்னணி நிறுவனங்களில் வேலை தேடித் தருவது மட்டுமே இவர்களின் இலக்கு. 


இதற்கு, அவர்கள் செய்யும் விளம்பரங்களே சாட்சி. எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.


அன்றாட வாழ்வில் ஏற்படும் சில தோல்விகளையும், சவால்களையும், மனவலிமையுடன் சந்திக்கும் பக்குவத்தையும், ஒரு நல்ல சமூகத்தையும் இவர்களால் எப்படி ஏற்படுத்த முடியும்?


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.


உண்மைதானே உறவுகளே...

7/19/2011

எங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்ச்சி ரிப்போர்ட்


நாம் பயன்படுத்தும் ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படும் "ஒயிட்னர்' திரவ நெடியை நுகர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒருவித போதை ஏற்றிக்கொள்வதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை மாநகர எல்லைக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் எஸ்.எம். எஸ்., மூலம் தனக்கு தகவல் அனுப்பலாம் என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் 94422 23277 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட எஸ். எம்.எஸ்., வந்து கொண்டிருக்கிறது. அடிதடி தகராறு, மோதல், பொதுஇடத்தில் ஒழுங்கீனம், சட்டவிரோதமாக மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வரும் தகவல்களின் பேரில் உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.


மேலும், எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபர்களுக்கு உடனடியாக பதில் தகவலையும் கமிஷனர் அனுப்பி வருகிறார். மிக முக்கியமான தகவல்கள் வந்தால், அதை அனுப்பிய நபரை நேரில் அழைத்தும் விசாரிக்கிறார். நேற்று முன்தினம் கமிஷனர் அமரேஷ் புஜாரியை சந்தித்த ஆர். எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒருவர், "திடுக்' புகார் ஒன்றை தெரிவித்தார். "ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பள்ளி முன் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யும் இரு கடைகள் உள்ளன. அங்கு, ஆவண எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர் பாட்டில்கள், பள்ளிச் சிறுவர்களுக்கும் அதிகளவில் விற்கப்படுகின்றன.


அவற்றை வாங்கிச் செல்லும் சிறுவர்கள், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து ஒருவித போதை ஏற்றிக்கொண்டு மயக்க நிலைக்கு செல்கின்றனர். எனது மகனும் அவ்வாறான செயலில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளான்' என புகார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து விசாரணை நடத்த ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார், சிறுவர்கள் சிலரை சந்தேகத்துக்குரிய கடைகளுக்கு அனுப்பி, ஒயிட்னர் பாட்டில்களை வாங்கச் செய்தனர்; கடைக்காரரும் விபரமேதும் கேட்காமல் விற்பனை செய்தார். 


இதுதொடர்பாக, ராபர்ட்சன் ரோட்டில் ஸ்டேஷனரி கடை நடத்தும் கணபதி, போலீஸ் காலனியைச் சேர்ந்த சத்யன்(40) என்பவரை கைது செய்தனர். இவரது கடையில் இருந்த ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோன்று, மற்றொரு கடைக்காரர் பெரோஸ்(30) என்பவரும் கைது செய்யப்பட்டு, ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் மற்றும் டைப் ரைட்டிங் ஆவணங்கள் தயாரிக்கும் போது, தவறுதலாக பதிவாகும் எழுத்துக்களை அழிக்க ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது.


இதை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைமீறி, பள்ளிச் சிறுவர்களுக்கு கடைக்காரர்கள் விற்றுள்ளனர். இதனால், இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளோம். மேலும், இதுபோன்ற விற்பனையில் ஈடுபடும் பள்ளி அருகிலுள்ள கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில நாட்களுக்கு முன் கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், தான் தங்கியிந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அவரது அறையை சோதனையிட்டபோது,ஒயிட்னர் பாட்டில்கள் அதிகளவில் கிடந்தன. அந்த மாணவர், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து போதை ஏற்றும் பழக்கமுடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது, பள்ளி மாணவனின் தந்தையும் புகார் கூறியிருப்பதால், ஒயிட்னர் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருக்கிறோம் இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார் . 


இப்படிப்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம் உறவுகளே...

7/05/2011

கேப்டன் தோனியை காப்பாற்றுங்கள்!


கேப்டன் தோனியை தடையில் இருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பு இந்திய பவுலர்களுக்கு உள்ளது. அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க வேண்டும்.
 

7/04/2011

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. 

அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

6/30/2011

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)


னிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா?

மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார். ஒன்று ஆண். மற்றது பெண். 

பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது. 

இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள். இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ டியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது.

மனித முகம் உடைய பாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது. உதவி கிங்தமிழ் .

எனக்கு  நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிறீர்களா?

6/25/2011

மெல்லிதயம் கொண்டோரே...


சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்...வாரீர்...

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.

6/23/2011

ஆறிலும் சாவு...! நூறிலும் சாவு ...!


இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு.

குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள்.