எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை, பிளஸ் 2 தேர்வில் தோல்வி, மாணவி மாயம் என, ஒவ்வொரு வருடமும், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இதுபோன்ற செய்திகள் வெளியாகத் தவறுவதில்லை.
ஏன் இந்த அவலம்?
கல்வி என்பதை, போட்டிக் களமாக மட்டுமே பார்க்கும் நம்மவர்களின் மனோபாவமே, இதற்கு முழுக்காரணம். எந்த ஒரு துறையிலும், போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும், போட்டி பிரதானம் ஆகிவிடும்போது, இதுபோல் அவலத்தில் தான் முடியும்.
இந்த போட்டி கலாசாரத்தால், கல்வி என்பது விலை பொருளாக மாறுவதை, இனி வரும் காலங்களில் யாராலும் தடுக்க முடியாது.பணம் கொழிக்கும் தொழிலாக கல்வி மாறிவிட்டதால், தனியார் நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.
ஒரு குழந்தையின் தொடக்கக் கல்விக்கே, லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள், அன்றாடம் முளைத்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே முன்னிறுத்தி, மாணவர்களை தயார்படுத்துகின்றன.
தேர்வில் மாணவர்களை நல்ல மதிப்பெண் பெறச் செய்வதும், வளாக நேர்காணலில், முன்னணி நிறுவனங்களில் வேலை தேடித் தருவது மட்டுமே இவர்களின் இலக்கு.
இதற்கு, அவர்கள் செய்யும் விளம்பரங்களே சாட்சி. எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் சில தோல்விகளையும், சவால்களையும், மனவலிமையுடன் சந்திக்கும் பக்குவத்தையும், ஒரு நல்ல சமூகத்தையும் இவர்களால் எப்படி ஏற்படுத்த முடியும்?
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.
உண்மைதானே உறவுகளே...
அவங்களுக்கு உள்ள தன்னம்பிக்கை குறைஞ்சு போயிடுறது முதல் காரணம்...
ReplyDelete//
ReplyDeleteஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.
///
ரொம்ப அருமையா சொன்னிங்க ...
அவசியாமான பதிவு நன்றி
ReplyDeleteஒரு குழந்தையின் தொடக்கக் கல்விக்கே, லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள்,
ReplyDeleteஇதையும் வியாபாரமாக செய்துவிட்டார்கள் நண்பரே .
எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.
ReplyDeleteகேட்டா வியாபார டெக்னிக் அப்பிடின்னு சொல்வாங்க .
//கல்வி என்பதை, போட்டிக் களமாக மட்டுமே பார்க்கும் நம்மவர்களின் மனோபாவமே, இதற்கு முழுக்காரணம். // கரெக்ட் கருன்.
ReplyDeleteதற்கொலை - எல்லாம் அந்தந்த நிமிடங்களில் எடுக்கிற தான்தோன்றி தனமான முடிவு .
ReplyDelete//கல்வி என்பது விலை பொருளாக மாறுவதை, இனி வரும் காலங்களில் யாராலும் தடுக்க முடியாது.பணம் கொழிக்கும் தொழிலாக கல்வி மாறிவிட்டதால், தனியார் நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன//.
ReplyDeleteஅரசு நடத்தும் கல்வி சரியாக இருந்தால் இது போல தனியார் ஆட்டம் போடுவார்களா....
//எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.//
கல்லூரி விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதில்லையா கிட்டதட்ட அது போலத்தான்...
அதிக பணம் கேட்கும் பள்ளிகள் தான் பெஸ்ட் என பெற்றோர்கள் தேடி போய் தானாக விழுவதை நிறுத்தும் வரை இது தொடரும். அப்படி கொட்டி கொடுத்து சேர்த்துவிட்டு குழந்தையின் மீது அவர்களின் பேராசையை திணித்து அவர்களை திணறடிப்பதில் நியாயம் இல்லை
ReplyDeleteஅவசியமான பதிவு
ஹாட் நியூசை பத்தி அலசி இருக்கீங்க சூப்பர்!
ReplyDeleteபெற்றோரே காரணம் பிள்ளைகளின் எல்லா தவறுகளுக்கும் ! ( வெற்றிகளுக்கும்!)
ReplyDeleteஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.//
ReplyDeleteநிதர்சனப் பகிர்வு..
இப்படியான போட்டிகளை... வெளிநாடுகளிலும் தொடக்கி விட்டார்கள்...
ReplyDeleteஎனக்கு அது பிடிக்கவில்லை..
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............
ஆக்ரோசமான பதிவு..
ReplyDeleteகாசேதான் கடவுளடா என்று ஆகிவிட்ட
நிலையில் கல்வியும் காசாகிவிட்டது.
நமது அடுத்த சந்ததியினர் பாவம்..
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து
என்னும் வள்ளுத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி..
ஆனால் உண்மையில் அதன் பொருள் வேறு...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க ..
ReplyDeleteஅந்த பணம் விரும்பிகளுக்கும், பெற்றோர்களுக்கும் கேட்கட்டும் ..
சாரி ஃபார் லேட்
ReplyDelete