மாஜி மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திற்கு சி.பி.ஐ.,நெருங்கி இருப்பதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சமீப காலமாக பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற நிலையில் இருந்து இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் டில்லியில் இருந்து ஒரு மருத்துவக்குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளன. இந்த குழுவின் அறிக்கையின்படி பாட்சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து 2 ஜி ஸ்பெகட்ரம் ஊழலில் சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார் ராஜா. இவரது நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா. சாதாரண நிலையில் இருந்த இவர் ராஜாவின் கண்பார்வையால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பல கோடிகளுக்கு அதிபதியானார். ராஜாவின் சொந்த பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் முக்கிய இடங்களை விலைக்கு வாங்குவது , விற்று லாபம் சம்பாதிப்பது என தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சாவு குறித்து துளைத்தெடுத்து வரும் சி.பி.ஐ., விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கொலையாக இருக்குமோ என்ற யூகத்திற்கு சிறிய தடயம் சிக்கியிருப்பதாகவும், இவரது மருத்துவ ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய டில்லி அகில இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆய்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களது அறிக்கைக்கு பின்னர் பாட்சாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் திருப்பம் ஏற்படும் பட்சத்தில் , பாட்சாவை கொன்றது யார், கொலைக்கு யார் காரணம், சதிச்செயல்களில் ஈடுபட்டது யார் என்ற கேள்விகள் எழும். இதனையடுத்து ஸ்பெக்டரம் வழக்கில் திடுக் திருப்புமுனைகள் ஏற்படும். பாட்சாவை பொறுத்தவரை ராஜாவிற்கு நெருக்கமானவராக இருந்ததால் இவர் சி.பி.ஐ.,யிடம் அப்ரூவராகி உண்மைகளை சொல்லி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு இருந்ததது இந்த காரணமும் பாட்சாவின் சாவுக்கு ஒரு கருவியாக இருந்திருக்கலாம் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. நன்றி தினமலர்.
AIYO KALOI ....
ReplyDeleteVADAI VENAAM AATHI
எல்லா திருடர்களும் இதில் மாட்ட வேண்டும்.
ReplyDeleteஇந்த சந்தேகம் எனக்கும் உண்டு கருன்..பார்ப்போம்.
ReplyDeleteஉண்மை மறைக்கப் பட்டு விட்டது
ReplyDeleteஉண்மை மறைக்கப் பட்டு விட்டது
ReplyDeleteIts pure murder
ReplyDeleteசாதிக் பாட்ஷாவின் கூடா நட்புகள், அவருக்கே கேடாய் முடிந்தது.
ReplyDeleteமறைக்கப்பட்ட உண்மையினைக் கண்டறியும் சந்தர்ப்பமும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் திருப்பங்களும் இந்த விடயத்தில் நிகழவிருக்கின்றன, பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கவிருக்கிறது என்பதை.
ReplyDeleteசாதிக் கேஸ் வளர்ந்து கொண்டே போகுதே?? எப்போ முடியுமோ?
ReplyDeleteபார்க்கலாம்! எல்லாரும் மாட்டுவாய்ங்க!
ReplyDeleteபடிக்கும்போது எல்லாம் பரபரப்பாதான் இருக்கும் ஆனால் பொட்டி கைமாறினால் அடங்கிவிடும்.
ReplyDeleteகொலையோ? தற்கொலையோ? மரணம் அடைந்தது முதலில் சாதிக் பாட்சா தானா?
ReplyDeleteமரணம் அடைந்தவர் முகத்தை இது வரை யாருமே பார்க்கவில்லையே?
மணியன்.,
என்னத்தை சொல்ல பாஸ்,
ReplyDeleteயாரையும் நம்ப முடியல்ல
ம்ம் பொறுத்து இருந்துதான் பாப்பமே....
சந்தேகமே இல்லை. ஆதாரங்கள்தான் கிடைக்கவேண்டும்.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் ...
ReplyDeleteஒருவேளை இது மிஸ்டர் எக்ஸ் ஓட சதியாக இருக்குமோ
ReplyDelete