Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/09/2011

தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


மிழக காங்கிரஸ் தலைவர் பதவியை, தங்கபாலு ராஜினாமா செய்தும் கூட, புதிய தலைவரை நியமிக்க, காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவது ஏன் எனப் புரியவில்லை.

"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.


காங்கிரஸ் மேலிடத்தின் குழப்பத்தால், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள், எந்த திசையை நோக்கிச் செல்வது என, தத்தளித்து வருகின்றனர். இதுகுறித்து, கட்சியின் பொதுச்செயலர் ராகுல் சிந்திக்க வேண்டும். 

தமிழகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கோஷ்டிகளில் காட்டும் ஆர்வத்தை, மொத்த காங்கிரசின் வளர்ச்சியில் காட்டுவதாக தெரியவில்லை. 

தகரபாலுவை, தங்க தட்டில் வைத்து கொண்டாடும் காங்கிரஸ் மேலிடமே... இனியும் உறக்கத்தில் இருந்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசார் சுயேச்சைகளாக போட்டியிட்டு, காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகலாம். 

துணிந்து செயல்பட தகுதியில்லாத காங்கிரஸ் மேலிடத்திற்கு, இது அவமானம்!

17 comments:

  1. "காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன.//சொந்த செலவில் சூனியம் வச்சார்கள்... மக்கள் மனமறிந்து நடக்காததால் வந்த ஆப்பு ...

    ReplyDelete
  2. #"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன.#
    அடப் பாவிகளா இவங்க ஒன்னும் பண்ணலையா? எல்லா மொள்ளமாரிதனத்தையும் இவங்க செஞ்சாங்க . அதனால தான் இவங்க தோத்தாங்க. அது சரி என்ன தலைப்பு இது 'தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்' இப்படி வைங்க 'தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு மகிழ்ச்சி ரிப்போர்ட்'

    ReplyDelete
  3. அழியட்டும் விடுங்க சார்.தமிழ்நாட்டை மதிக்காதவங்க,தமிழனை அழிச்சவங்க.

    ReplyDelete
  4. மாப்ள நீ ஏண்டா கவலை படுற இந்த நாதாரி பசங்க செஞ்ச நம்பிக்கை துரோகத்திற்கு கிடைச்ச பதிலடி தான் இது.

    ReplyDelete
  5. இந்தியாவில் ஒரு தமிழ் நாடுதானே உள்ளது .......தமிழ் நாட்டில் காங்கிரஸ் அழிந்து வெகு காலமாயிற்றே

    ReplyDelete
  6. ஒருத்தன் போனா இன்னொருத்தன் வர முடியும்?

    ReplyDelete
  7. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமாம் சொல்கிறார் யூத் யூவரஜா
    http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_09.html

    ReplyDelete
  8. இதில் அதிர்ச்சி ஏதும் இல்லை! காங்கிரஸ் போய்க்கொண்டிருக்கும் பாதை அதுதான்!

    ReplyDelete
  9. ரைட்டு வாத்யாரே!

    ReplyDelete
  10. காங்கிரஸ் மேலிடத்தின் குழப்பத்தால், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள், எந்த திசையை நோக்கிச் செல்வது என, தத்தளித்து வருகின்றனர்//

    பேசாமல், அம்மாவோடை கட்சியில் போய் சேரச் சொல்லுங்க..


    மக்களை ஏமாற்றினால்- மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இது..

    ReplyDelete
  11. //தகரபாலுவை, தங்க தட்டில் வைத்து கொண்டாடும் காங்கிரஸ் மேலிடமே... இனியும் உறக்கத்தில் இருந்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசார் சுயேச்சைகளாக போட்டியிட்டு, காங்கிரஸ் என்ற கட்சியே தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகலாம். //

    சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே ஏன் கவலைப்படுரிங்க?

    ReplyDelete
  12. கடைசி வரிகள் நிதர்சனம்.

    ReplyDelete
  13. //சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே ஏன் கவலைப்படுரிங்க?// ரிப்பீட்டேய்..

    ReplyDelete
  14. அழியட்டும் விடுங்க சார் . அநியாயத்துக்கு கிடைத்த பரிசு

    ReplyDelete
  15. காங்கிரஸ் தமிழ்நாட்டில் மறைந்த தினம் 1975 -ம் வருடம் அக்டோபர் 2 .

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"