Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/29/2011

பட்டினியால் மடியும் பிஞ்சுகள் : "ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்'



இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா?

 இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. 


சோமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. 

அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். 

இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன. இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது. 


இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, "யுனிசெப்' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, "யுனிசெப்' வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் "யுனிசெப்' அறிவித்துள்ளது.நன்றி தினமலர். 

நாமும் எதாவது உதவிகள் செய்வோம் உறவுகளே...

21 comments:

  1. நல்ல முயற்சி நண்பரே..


    யூத் புல் விகடனில் இன்று இடம் பிடிதிருக்கிறீங்க ...வாழ்த்துக்கள்:-)

    ReplyDelete
  2. பட்டினி கொடுமை குழந்தைகளை வாட்ட, அதை தீர்க்கும் அதிகாரிகளோ பட்டு மஞ்சம் கேட்கிறார்கள்?

    ReplyDelete
  3. அதிர்ச்சியூட்டும் தகவல்...

    ReplyDelete
  4. கொடுமை.... ஒரு பக்கம் கொழுத்துக்கொண்டிருக்கிறார்கள்... டிஸ்கொதெ...பார்ட்டி ... என ஏகபோகமாக வீணாக பணத்தை இறைக்கும் நபர்கள்.. அதில் ஒரு பகுதியை இதில் செய்து நன்மை செய்யலாம்.... நன்றி

    ReplyDelete
  5. என்னடா உலகம் இது .......இப்படியும் நடக்குமா ? கடவுள் மனம் இறங்கட்டும் .....

    ReplyDelete
  6. ஊழல் வளர்க்கும் அரசுகள்
    பட்டினி சாவு பற்றி கவலை என்ன

    ReplyDelete
  7. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  8. கொடுமை... என்ன உலகமடா இது

    ReplyDelete
  9. என்ன பாஸ் டெய்லி ஒரு டெம்ப்ளேட்டா?

    ReplyDelete
  10. ஒரு புறம் ஸ்விஸ் பேங்கில் சேர்க்கும் செல்வங்கள் பிதுங்கி வழிந்துகொண்டிருக்கிறது...

    மறுபுறம் குடிப்பதற்கு கஞ்சிக்கும் வழி இல்லாமல் ஒரு கூட்டம்..


    வேதனையின் உச்சம் நண்பரே!

    ReplyDelete
  11. லே அவுட்டில் பின்றீங்களே

    ReplyDelete
  12. நிச்சயமாக உதவுவோம் சகோ.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. கொடுமையான விஷயம்

    ReplyDelete
  14. என்று தணியும் இந்த
    வறுமையின் தாக்கம்

    ReplyDelete
  15. அன்பு நண்பருக்கு,

    உங்களது பதிவு நெஞ்சை பிழியும் விசயமாகும். இருந்தாலும் எங்கோ தொலை தூர தேசத்தில் நடக்கும் விஷயத்தை அலசிய உங்களுக்கு நமது அருகினில் நமது இந்திய நாட்டினில், நமது தமிழகத்தில் நடக்கும் சிசு கொலைகளை பற்றியும் செய்திகளில் பார்த்தீர்களே யானால் அது 250 ஐ தாண்டும். ஆனால் பல செய்திகள் நாளேடுகளில் வராமல் தடுக்கப் படுகின்றது என்பதே உண்மை. நீங்கள் சொன்ன பட்டினி சாவு என்பதாவது இயற்கையின் கொடூரம் என்று சொல்லலாம்...ஆனால் பிஞ்சுகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்படும் செய்திகள் அதைவிட கொடுமையான விஷயம்.

    இருந்தாலும் அங்கே மரணிக்கும் குழந்தைகளுக்கு விரைவில் விமோசனம் கிடைக்க இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்து வேண்டிகொள்கின்றேன்.

    இப்படிக்கு
    சிவா

    ReplyDelete
  16. நானும் படித்தேன்..இதயம் வலிக்கிறது. ஒரு பக்கம் சாப்பாடு விதம் விதமாக குவிந்து கிடக்கிறது. இன்னொரு பக்கம் இப்படி..நிச்சயம் உதவி செய்வோம்

    ReplyDelete
  17. படிக்கவே கஷ்டமாக உள்ளது .

    ஏனிந்த ஏற்ற தாழ்வுகள் என்று புரிய வில்லை .

    ReplyDelete
  18. உலக நாடுகள் ஏன் இவற்றையெல்லாம் பார்த்து மௌனமாக இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது சகோ, வெகு விரைவில் இம் மக்களுக்கு வறுமை நீங்கிய நல்லதோர் வாழ்வு கிடைக்கட்டும்.

    ReplyDelete
  19. நிகழ்வுகள் கூறியது...
    நல்ல முயற்சி நண்பரே..


    யூத் புல் விகடனில் இன்று இடம் பிடிதிருக்கிறீங்க ...வாழ்த்துக்கள்:-)//

    சகோ, கந்தசாமியின் இக் க்ருத்துக்களை வழி மொழிந்து, நானும் என் உளப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தொடர்ந்தும் ஜமாயுங்கள்.

    ReplyDelete
  20. வேதனை...இருண்ட கண்டமாகிப்போனதால் ஒதுக்கப்பட்ட மனிதர்கள் அவர்கள்...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"