நாம் பயன்படுத்தும் ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படும் "ஒயிட்னர்' திரவ நெடியை நுகர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒருவித போதை ஏற்றிக்கொள்வதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகர எல்லைக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் எஸ்.எம். எஸ்., மூலம் தனக்கு தகவல் அனுப்பலாம் என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் 94422 23277 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட எஸ். எம்.எஸ்., வந்து கொண்டிருக்கிறது. அடிதடி தகராறு, மோதல், பொதுஇடத்தில் ஒழுங்கீனம், சட்டவிரோதமாக மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வரும் தகவல்களின் பேரில் உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகர எல்லைக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் எஸ்.எம். எஸ்., மூலம் தனக்கு தகவல் அனுப்பலாம் என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
மேலும், எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபர்களுக்கு உடனடியாக பதில் தகவலையும் கமிஷனர் அனுப்பி வருகிறார். மிக முக்கியமான தகவல்கள் வந்தால், அதை அனுப்பிய நபரை நேரில் அழைத்தும் விசாரிக்கிறார். நேற்று முன்தினம் கமிஷனர் அமரேஷ் புஜாரியை சந்தித்த ஆர். எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒருவர், "திடுக்' புகார் ஒன்றை தெரிவித்தார். "ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பள்ளி முன் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யும் இரு கடைகள் உள்ளன. அங்கு, ஆவண எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர் பாட்டில்கள், பள்ளிச் சிறுவர்களுக்கும் அதிகளவில் விற்கப்படுகின்றன.
அவற்றை வாங்கிச் செல்லும் சிறுவர்கள், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து ஒருவித போதை ஏற்றிக்கொண்டு மயக்க நிலைக்கு செல்கின்றனர். எனது மகனும் அவ்வாறான செயலில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளான்' என புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்த ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார், சிறுவர்கள் சிலரை சந்தேகத்துக்குரிய கடைகளுக்கு அனுப்பி, ஒயிட்னர் பாட்டில்களை வாங்கச் செய்தனர்; கடைக்காரரும் விபரமேதும் கேட்காமல் விற்பனை செய்தார்.
இதுதொடர்பாக, ராபர்ட்சன் ரோட்டில் ஸ்டேஷனரி கடை நடத்தும் கணபதி, போலீஸ் காலனியைச் சேர்ந்த சத்யன்(40) என்பவரை கைது செய்தனர். இவரது கடையில் இருந்த ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோன்று, மற்றொரு கடைக்காரர் பெரோஸ்(30) என்பவரும் கைது செய்யப்பட்டு, ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் மற்றும் டைப் ரைட்டிங் ஆவணங்கள் தயாரிக்கும் போது, தவறுதலாக பதிவாகும் எழுத்துக்களை அழிக்க ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது.
இதை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைமீறி, பள்ளிச் சிறுவர்களுக்கு கடைக்காரர்கள் விற்றுள்ளனர். இதனால், இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளோம். மேலும், இதுபோன்ற விற்பனையில் ஈடுபடும் பள்ளி அருகிலுள்ள கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில நாட்களுக்கு முன் கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், தான் தங்கியிந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது அறையை சோதனையிட்டபோது,ஒயிட்னர் பாட்டில்கள் அதிகளவில் கிடந்தன. அந்த மாணவர், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து போதை ஏற்றும் பழக்கமுடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது, பள்ளி மாணவனின் தந்தையும் புகார் கூறியிருப்பதால், ஒயிட்னர் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருக்கிறோம் இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார் .
இப்படிப்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம் உறவுகளே...
கொடும :(
ReplyDeleteகேட்பதற்க்கே அதிர்ச்சியாக இருக்கிறது...
ReplyDeleteஇந்த செய்தி....உண்மைதான்..ஆனால் இதை மறைமுகமாக..மாணவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.
ReplyDeleteநக்கீரன் போன்ற பணம் திண்னும் கழுகுகள்...இதை செய்தியாக வெளியிட்டு...தெரியாத மாணவர்களுக்கும் செய்தியை முதல் பக்கதில் போட்டு....மாணவ சமுதாயத்தையெ கெடுக்கிறார்கள்
ReplyDeleteஇது மட்டும் இல்லாமல் டைப்ரேட்டிங் பயன் படுத்தும் அழிக்கும் மை அதில் இருந்தும் சைக்கிள் ட்யூப்க்கு பஞ்சர் ஓட்ட பயன் படுத்தும் கம், மேலும் டானிக், இவற்றில் இருந்து எல்லாம் மாணவர்கள் போதைக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள்.
ReplyDeleteஇவை எல்லாம் மிகவும் வேதைனையாக ஒரு விஷயம் :(
சமூகம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதை தவிர வேறென்ன சொல்ல!!??
ReplyDeleteமனசாட்சி இல்லாத வியாபாரிகள்!
ReplyDeleteபோதை பல வழிகளில் உற்பத்தி செய்யப்பட்டு இளைய சமுதாயத்தினரை சீரழிக்கிறது.
ReplyDeleteஅடக்கொடுமையே ...
ReplyDeleteமுன்பே இசெய்தியைப் படிக்கும்போது அதிர்ச்சி அடைந்தேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,காவல்துறை அனைவரும் கலந்தாலோசித்து வழிமுறை காண வேண்டும்,
ReplyDeleteஅடக் கொடுமையே..
ReplyDeleteநண்பரே இது உண்மையா ?
போனவாரத்தில் எனக்கு வேண்டப்பட்டவரின் பெண் ஒருவர் அந்த
ஒயிட்னரை குடித்து தற்கொலைக்கு
முயன்றால் என்று மருத்துவமனையில் அட்மிட் செய்து 2 நாள் வைத்திருந்து பார்த்தார்கள்..
இது போதையா ?
ஆட்கொல்லியா ?
கவனிக்கப்பட வேண்டிய விசயம்...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
என்ன சார் இப்பிடி அதிர்ச்சியான தகவலை சொல்றீங்க????
ReplyDeleteஎன்ன கொடும !!
ReplyDeleteகுழந்தைகள் பயன்படுத்தும் சிறுசிறு விஷயங்களில் கூட பெற்றவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பதிவு நன்றி ஆசிரிய சகோ
ReplyDeleteஎன்ன கொடுமை இது .
ReplyDeleteவிளக்கு வீட்டில் வெளிச்சம் தர ,வீட்டை கொளுத்த அல்ல .
ப்ளாக்கர் நண்பர்களே ,இதே போல் தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிறுவர்கள் ஏதேனும் தவறான பாதையில் செல்கிறார்கள் என்றால் நம்மால் முடிந்த வரை திருத்த வேண்டும் நண்பர்களே .
அழிவுப் பாதைக்குத் தள்ளுகிறது போதை.இதிலும் புத்தகம் இல்லாத வகுப்பறைகள்.இன்னும் என்ன ஆகுமோ?
ReplyDeleteஉண்மை ... ஸ்கிரிப்ட் எழுதும்போது சக உதவி இயக்குனர் ஒருவர் ஒய்டனர் அடிககடி அவரது கைக்குட்டையில் தடவி முகர்ந்துபார்ப்பார் ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை.. பிறகு விசயம் தெரிந்துக்கொண்டேன்....
ReplyDeleteஇது போன்ற விசயங்களில் ஈடுபடாமல் இருக்க தியானம் சிறந்த வழி
வணக்கம் மாப்பிள நான் காட்டான் வந்திருக்கேன்..
ReplyDeleteஉங்க பதிவு ஒரு சமுக சீரலிவ சொல்லி போகுது இவர்கள்தான் நாட்டின் வருங்கால தூண்கள்.. இவர்களை திருத்தாவிடின் அப்துல் கலாம் கண்ட கனவு நிறைவேறப் போவதில்லை..
காட்டான் குழ போட்டான்...
ஒய்ட்னார்ல போதையா>?
ReplyDeleteமாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம்//
ReplyDeleteநிச்சயம் கவனம் செலுத்தவேண்டிய பகிர்வு. நன்றி.
மாப்ள...விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
ReplyDeleteஇது ரொம்ப நாட்களாகவே இருந்து வருகின்ற பழக்கம். வொயிட்னரில் உள்ள டொலூவின் மூளையின் செல்களை பாதித்து போதை ஏற்படுத்துகிறது. ஆனால் இது மூளை செல்களை நிரந்தரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது- mental disorder. இதனை சிறப்பு வகுப்புகள் மூலம் சொல்கிறோம். குழந்தைகளின் கர்சீப்பில் கெமிக்கல் வாடை அடித்தால் சுதாரிக்க வேண்டும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஎங்கே செல்கிறது என்றே தெரியவில்லை ..
ReplyDeleteஅதிர்ச்சியான செய்தி
ReplyDeleteஅடியோடு புதைக்கவேண்டும் இதை.
என்ன கொடுமைங்க !
ReplyDelete