அன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை
வேண்டிக்கொள்கிறேன்.
அன்று,
தாமரைக் குளமும்
பெருமாள் கோயிலும்
பெரிதாய் இருக்கிறதென்று
சொன்னீர்கள்...!
வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும்
சின்ன காய்கறித் தோட்டமும்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!
பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில்
வாழக் கொடுத்து வைக்க
வேண்டுமென்று
வக்கணை பேசினீர்கள்...!
மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!
மாப்பிள்ளையின்
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள்
சம்பந்தி வீட்டு பெருமை...!
மாப்பிள்ளை வீடு
ரொம்ப அழகுதான்
உறவினர்களின் உபசரிப்புக்கும்
ஒரு குறையும் இல்லை...!
இங்கு
நீங்கள்
பார்க்கத் தவறியது
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!
இருந்தாலும் பரவாயில்லை ...
இந்தக் கடிதத்தை
அம்மாவிடம்
படித்துக் காட்டும்போது
அவரோடு நான்
சந்தோஷமாகவே இருப்பதாக
அவசியம் சொல்லவும்...!
mudhal mazaiமுதல் மழை
ReplyDeleteயதார்த்தம்!
ReplyDeleteஎன்ன தல கவிதை எல்லாம் பின்னுது. பெண்கள் மனசை படிக்குறீங்களா?
ReplyDeleteமாப்ள இது வாழ வந்த பொண்ணு வாழ்ந்து கொண்டு இருக்கும் தாயிடம் சொல்ல வேண்டாம் எனும் கவிதையோ!
ReplyDeleteகவிதை... யதார்த்தம்!
ReplyDeleteபெற்றோர்கள் மாப்பிள்ளையின் வசதி பார்ப்பதோடு நின்றுவிடுகிறார்கள்...!!
ReplyDeleteவாழ சென்ற இடத்தில் ஒரு பெண்ணின் துயரம்.. கவிதை யதார்த்தம் >
பல பெண்களின் வாழ்க்கை இப்படி ஆக்கிவிட்டது மனசை பார்க்காமல் திருமணம் செய்ததால்
ReplyDeleteநிதர்சமான உண்மை
ReplyDeleteஉண்மையை கவிதை வடிவில் படைத்தது பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஇந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.
ReplyDeleteஇந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.
ReplyDeleteஇந்த உலகமே புற அழகுக்கும் வெளிபகட்டையும் மட்டும் தான் பார்த்து மனிதனை எடை போடுகிறார்கள். மனதைப் பார்த்து மனிதனை யார் மதிக்கிறார்கள்? அருமையான கவிதை. தாலிகட்டியவன் மனசு அழுக்குன்னா வாழ்க்கையே அவலம்தான்.
ReplyDeleteஅருமை..!
ReplyDeleteஅருமை..!
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteசிவப்பு எழுத்தில் கொடுக்காவிட்டாலும்
அந்த வரிகள் எங்களுக்குள் ஒரு
சிலிர்ப்பை ஏற்படுத்தித்தான் போகும்
சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்
பெண்களின் வாழ்க்கை சோகம் அழகிய கவிதை வடிவில்
ReplyDeleteகவிதைகளின் சரணாலயம் சார்
ReplyDeleteஅருமை
நெல்லை பெ. நடேசன்
துபாய்,
அமீரகம்
யதார்த்த வரிகளில் யதார்த்தத்தை விளக்கும் கவிதை.
ReplyDeleteநச்...
யதார்த்த வரிகளில் யதார்த்தத்தை விளக்கும் கவிதை.
ReplyDeleteநச்...
உண்மையில் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நெஞ்சை பிசையும் உண்மை.
ReplyDeleteஅருமை..அருமை..எப்படி மாமூ இப்படி..சீக்கிரம் கவிஞர் ஆயிடுவீரு போலிருக்கே.
ReplyDeleteஅருமையான கவிதை! எதார்த்தமான கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை-கருத்துடன்!!ம்ம்
ReplyDeleteஅருமை. மனதை உருக்கிவிட்டது.
ReplyDeleteSuper
ReplyDeleteபொளந்து கட்டறீங்களே!
ReplyDeleteஅருமையான இன்றைய யதார்த்த நிலை சொல்லும் கவிதை பாஸ்
ReplyDeleteமுடிவு மனசை பிசைகிறது பாஸ்
//நீங்கள்
ReplyDeleteபார்க்கத் தவறியது
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!//
நெத்தியடி பாஸ்..
பெண்னைப்பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய இடம் இது
வாழ்க்கையின் யதார்த்தம் அழகாக சொல்லிவிட்டீர்கள்
ReplyDeleteம்...கஸ்டம்தான் !
ReplyDeleteஎதார்த்த வரிகளால் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை மழை என்னை நனைத்ததே....!!!
ReplyDelete//இந்தக் கடிதத்தை
ReplyDeleteஅம்மாவிடம்
படித்துக் காட்டும்போது
அவரோடு நான்
சந்தோஷமாகவே இருப்பதாக
அவசியம் சொல்லவும்...!
//
அடாடா...
பெண்ணைப் பெற்றவரை மட்டுமல்ல மற்றவரையும் கலங்கச்செய்யும் கவிதை..
வாழ்த்துக்கள்.
இயல்பான வரிகளில் உணர்வை வெளிக்கொணரும் கவிதைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவார்த்தைகள் வலிமை..அருமையான கவிதை..
ReplyDeleteவார்த்தைகள் வலிமை..அருமையான கவிதை..
ReplyDelete//நீங்கள்
ReplyDeleteபார்க்கத் தவறியது
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!//
மாப்ள சூப்பர்டா.. உன் கிட்ட புடிச்சதே இது தான் கவிதையா இருந்தாலும் எளிமையா அனைவருக்கும் புரியும் படி எழுதுவது சூப்பர் மச்சி
இங்கு
ReplyDeleteநீங்கள்
பார்க்கத் தவறியது
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!
இருந்தாலும் பரவாயில்லை ...
அசத்தலான கவிதை...
வாழ்த்துக்கள்,,,,
!!உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ
nice
ReplyDeleteநான் ரொம்ப லேட்டு பாஸ்...
ReplyDeleteஇவ்வேதனை பெண்களுக்கு மட்டுமல்ல... பெற்றோரின் மீது பற்றுக்கொண்ட ஆண்களுக்கும் உண்டு எனபதை தெரிவித்துக் கொள்கின்றேன். பாசத்திற்காகவே வாழிக்கையில் வேஷமிட வேண்டிய கட்டாயம்! இந்நிலையினை நம் சந்ததியினருக்கு தராமலிருப்பது தான் உத்தமம்!
ReplyDeleteபார்க்கவேண்டியத பார்க்காம படோடோபத்தை ( ஆடம்பரத்தை ) பார்த்ததால் அனுபவிக்கும் கொடுமை
ReplyDeleteயதார்த்தம் , கண்ணீர் மனதை தொடும் உணர்வு
thulithuliyaai.blogspot.com
பெண்ணின் வலியின் உணர்வுகளை அழகான கவிதையாக படைத்திருக்கிறீர்கள்.....
ReplyDeleteவணக்கம் கருண்,
ReplyDeleteபுகுந்த வீட்டில் வேதனைப்படும் பெண்ணின் நிலையினை வசன கவிதையூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
வார்த்தைகள் ஒவ்வொன்றுமே இன்றைய கால கட்டத்தில் மாமியார் வீட்டில் அவதிப்படும் பெண்களின் மன உணர்வினை வெளிப்படுத்தி நிற்கிறது.
ரொம்ப தாங்க்ஸ் உண்மையில் நடப்பது தானே. ம்ம் இன்னும் இன்னும்....
ReplyDeleteரொம்ப தாங்க்ஸ் உண்மையில் நடப்பது தானே. ம்ம் இன்னும் இன்னும்....
ReplyDeleteமிக அருமையான கவிதை......
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com