Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/02/2011

ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ் தேச நலனுக்காக இதையாவது செய்யுமா?


பிரம்மபுத்திரா நதியின் இடையே அணை கட்ட திட்டமிட்டு, வேலைகளை ஆரம்பித்திருக்கிறது சீனா. அங்கு அணை கட்டினால், நம் நாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் நீர்வரத்து நிச்சயம் குறையும். 

இரண்டு நாடுகளுக்கு இடையிலோ அல்லது அதன் வழியிலோ ஒரு நதி பாய்ந்தால், இரு நாடுகளின் ஒப்புதலுடன் தான் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். இடத்தை கொடுத்தால், மடத்தைப் பிடுங்கக்கூடிய கதை தான் சீனாவின் நிலைப்பாடாக உள்ளது.


மத்திய அரசு, இதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், சீனா மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, இது விஷயமாக, சீனாவுடன் பேச்சு நடத்துவோம் என்கிறார். 

அடுத்த நாளே, "சீனா அணை கட்டுவதால், நம் நாட்டிற்கு ஆபத்து எதுவும் இல்லை' என, சில காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விட்டனர்.இப்படி அறிக்கைகள் விட்டே, அருணாச்சல பிரதேசத்தில், பல ஆயிரம் அடி நிலத்தை, முன்பு காங்கிரஸ் அரசு கோட்டைவிட்டு, அது தற்சமயம் சீனாவின் வசம் உள்ளது.

இதனால், அருணாச்சல பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.பிரம்மபுத்திரா நதியின் மூலம் பலன் பெரும் மாநிலங்கள், சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும்.மத்தியில் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும். ஆனால், தேச நலனுக்காக எதையும் செய்ய முன்வர மாட்டார்கள்.

16 comments:

  1. இவங்க மொத்த இந்தியாவைப் புடுங்குனாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க போலிருக்கே..

    ReplyDelete
  2. அண்டை நாடுகளுக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காமல் தயக்கம்காட்டு வருலது வேதனை அளிக்க கூடிய விஷயம்தான்...

    காங்கிரஸ் இன்னும் என்னனன்ன செய்யப்போகிறதே..

    ReplyDelete
  3. இவனுங்களுக்கு கொள்ளை அடிக்கவே நேரம் சரியா இருக்கு .. மீதி நேரத்துல குழுசண்டை .. அப்புறம் எங்க நாட்டை கவனிக்க நேரம் இருக்கு ...

    ReplyDelete
  4. காங்கிரஸ் ஆட்சியில் நாடும் மக்களும் இன்னும் நிறைய கொடுமைகளை சந்தித்தே ஆகவேண்டும் .விடிவை நோக்கி .....

    ReplyDelete
  5. //மத்தியில் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும். ஆனால், தேச நலனுக்காக எதையும் செய்ய முன்வர மாட்டார்கள்./
    ரத்தினச்சுருக்கமாகச் சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  6. நெத்தியடி..!

    ReplyDelete
  7. இவர்களுக்குத்தான் கொள்ளையடிக்கவும் கொள்ளைய்டித்ததை மறைக்கவும்
    அது தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கவுமே நேரம் போதவில்லை
    இதில் இது போன்ற பைசா பெறாத விஷயத்தையெல்லாம்
    கண்டுகொள்ளவா போகிறார்கள்
    சமூக சிந்தனையை தூண்டிச் செல்லும் நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. காங்கிரஸ் தான் இந்தியா என்ற நினைப்பு இருக்கிறது. மாற்றம் வேண்டும்

    ReplyDelete
  9. அருணாச்சல பிரதேசம் இந்தியாவோடதா #டவுட்டு

    ReplyDelete
  10. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்க...........

    ReplyDelete
  11. நாடு காக்கப்பட காங்கிரஸ்க்கு மாற்று, வர வேண்டியது அவசியம். அவசரமும் கூட.

    ReplyDelete
  12. We lose one by one state first kashmir . . Next arunachalapradeshkashmir . . Next arunachalapradesh

    ReplyDelete
  13. அண்டை நாட்டின் கைக்கூலிகள் காங்கிரஸ் இது இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து வரலாறு சொல்லும் உண்மை.

    ReplyDelete
  14. இந்தியாவின் நலனுக்கு எப்போதுமே அரசியல்வாதிகளால் தான் ஆப்பு என்பதற்கு இச் சம்பவமும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு,

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"