Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/27/2011

இலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? பகிர் தகவல்


இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் வட பகுதியில் தமிழர் கட்சிகளின் கூட் டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் ராஜபக்சே தலை மையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், வட பகுதி யில் பெற்றுள்ள தோல்வி ராஜபக்சே அரசுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வட பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 18 மாகாண சபைகளை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடபகுதியில் இரண்டு மாகாண சபைகளை மட்டுமே பெற்றுள்ளது.



இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வடபகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆர்வத்து டன் வந்து வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் மக்கள் அமைதியையும் ஜனநாயகத்தையுமே விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் ராஜபக்சேவுக்கு இதில் கொஞ்சம்கூட அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற முடிய வில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் அனுப வித்த, அனுபவித்துவரும் துன்பதுயரங்கள் உலக வரலாற்றில் மிகப்பெரிய சோக காவிய மாகும். உள்நாட்டுப்போரால் வாழ்க்கையை தொலைத்துவிட்டனர் அந்த மக்கள். முள்ளி வாய்க்கால் பகுதியில் இறுதியாக நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இன் னமும் கூட முள்வேலி முகாம்களில் எதிர்கா லம் குறித்த கேள்விக்குறியோடு உடலை சுமையாக நினைத்து வாழ்வோர் ஏராளம்.

இவர்களை தங்களது சொந்த வாழ்விடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க ராஜபக்சே அரசு உருப்படியான எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாறாக தமிழர்கள் வசித்த பகுதிகளில் பெரும்பான்மை மக்களை குடியேற்றுவது, தமிழர்களின் பண்பாட்டு அடை யாளங்களை அழிக்க முயல்வது, மத வழிபாட்டு உரிமையை மறுப்பது, அவர்களின் தாய்மொழி யான தமிழ்மொழியை அங்கீகரிக்க மறுப்பது போன்ற கொடுமைகள் அந்த மக்களின் மனதில் ஆறாத ரணமாக மாறியுள்ளது. இந்த கோபம்தான் தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது.

தேர்தல் முடிவை வன்மத்துடன் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கு எதிரான செயல்களை அதிகரிக்க ராஜபக்சே அரசு முயலக்கூடாது. மாறாக ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களை மறு குடியமர்த்தி, அவர்கள் தங்களது சொந்த வாழ்விடத்தில் கவுரவத்தோடும் கண்ணியத்தோ டும் வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளை யும் செய்ய வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களுக்கு அடங்கி, உரிமைகளை இழந்து வாழ வேண்டும் என்ற சர்வாதிகார மனநிலையைக் கைவிட்டு, தமிழர்களும் இலங்கையின் குடி மக்கள்; அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்ற உணர்வோடு இனியேனும் நிவா ரண பணிகளை மேற்கொள்ளவும், காயம்பட்ட சமூகத்திற்கு மருந்திடவும் ராஜபக்சே அரசு முன் வரவேண்டும். தாங்கள் அனைத்து வகை யிலும் சமமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொள்வது ராஜபக்சே அரசின் பொறுப்பாகும்.

39 comments:

  1. சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  2. உலக நாடுகள் இணைந்து ராஜ பக்சே அன்ட் கோவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் ....

    ReplyDelete
  3. ம்ம்ம் கட்டுரை அருமை!!!அது தான் நடந்துள்ளது!

    ReplyDelete
  4. நல்ல அலசியுல்லிர்கள் ..

    ReplyDelete
  5. தமிழர்களின் எழுச்சிக்கும் ராஜபக்சேவின் வீழ்ச்சிக்கும் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு அத்தாட்சி
    http://gokulmanathil.blogspot.com
    நேரமிருக்கும் போது நம்ம பக்கமும் வந்து போங்க.

    ReplyDelete
  6. ராஜபக்சேக்கு கிடைக்கவேண்டிய தண்டனை முழுதாய் கிடைத்தால்தான் என் மனம் ஆறும். மனிதன் என்ற போர்வையில் வாழத்தகுதியற்றவன் ராஜபக்சே

    ReplyDelete
  7. தமிழர்களின் எழுச்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு அத்தாட்சி.

    ReplyDelete
  8. சரியாகச் சொன்னீர்கள்,
    சர்வாதிகார மனப்பான்மையை
    கைவிடவேண்டும்.

    ReplyDelete
  9. உலகம் தன் கடமையை செய்யுமா...???

    ReplyDelete
  10. தேர்தல் மாற்றத்தை தருகிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  11. இங்க அடிச்சமாதிரி மக்கள் இலங்கையிலும் சரியான பாடம் புகட்டி உள்ளனர். இனியாவது திருந்துங்கடா

    ReplyDelete
  12. சரியான அலசல் கருன்..நம் மக்களின் துணிச்சலும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  13. பார்ப்போம் மகிந்தர் என்ன செய்கிறார் என்று ...

    ReplyDelete
  14. உண்மை என்றும் தோக்காது

    ReplyDelete
  15. பொருத்திருந்து பார்ப்போம்..
    என்ன நடக்கிறது என்று...

    ReplyDelete
  16. அருமையான கட்டுரை!!

    ReplyDelete
  17. மனசாட்சி கூறியது...
    சரியாக சொன்னிர்கள்
    // thanks..

    ReplyDelete
  18. koodal bala கூறியது...
    உலக நாடுகள் இணைந்து ராஜ பக்சே அன்ட் கோவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் ....
    // aamaam baalaa

    ReplyDelete
  19. மைந்தன் சிவா கூறியது...
    ம்ம்ம் கட்டுரை அருமை!!!அது தான் நடந்துள்ளது!
    // thanks..

    ReplyDelete
  20. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
    நல்ல அலசியுல்லிர்கள் .//thanks..

    ReplyDelete
  21. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
    நல்ல பதிவு
    // thanka rajaa

    ReplyDelete
  22. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
    இன்று இன் வலையில்
    // vantutte irukken..

    ReplyDelete
  23. gokul கூறியது...
    தமிழர்களின் எழுச்சிக்கும் ராஜபக்சேவின் வீழ்ச்சிக்கும் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு அத்தாட்சி
    http://gokulmanathil.blogspot.com
    // kandippa varen..

    ReplyDelete
  24. கடம்பவன குயில் கூறியது...
    ராஜபக்சேக்கு கிடைக்கவேண்டிய தண்டனை முழுதாய் கிடைத்தால்தான் என் மனம் ஆறும். மனிதன் என்ற போர்வையில் // sariyaa sonneenga..

    ReplyDelete
  25. சே.குமார் கூறியது...
    தமிழர்களின் எழுச்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு அத்தாட்சி.// correct kumar..

    ReplyDelete
  26. மகேந்திரன் கூறியது...
    சரியாகச் சொன்னீர்கள்,
    சர்வாதிகார மனப்பான்மையை
    கைவிடவேண்டும்.
    // amaam mahendiran..

    ReplyDelete
  27. பொறுத்திருந்து பார்ப்போம், ராஜபக்சேவின் நகர்வுகள் எப்படி இருக்கின்றது என்று.

    ReplyDelete
  28. கருன்!ஒரு பருக்கை பதம் சோறு மாதிரி ராஜபக்சேவுக்கு நல்லெண்ணங்கள் இருந்திருந்தால் செய்த தவறுகளுக்குப் பின்பும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு அல்ஜசிராவுக்கு நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு இரண்டு வருடங்களை வீணடித்திருக்க மாட்டார்.இலங்கை போன்ற சிறிய நாட்டைக் கட்டி எழுப்ப தடையாக இருப்பது சகமனிதனாக உரிமைகளை பங்கீடு செய்வது குறித்த தயக்கமும் சிங்களத்தனமும்.ராஜபக்சேவுக்கு ஆலோசனை விழலுக்கிறைத்த நீர்.

    ReplyDelete
  29. நல்ல பதிவு .பொறுத்திருந்து பார்ப்போம் .

    ReplyDelete
  30. சரியான அலசல் ...முதல் பாடம் புகட்டியுள்ளார்கள் இனியும் புகட்டுவார்கள்.. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  31. தேவையானது போட்டுட்டேன்.. அப்புறம் வரேன்

    ReplyDelete
  32. அருமையான விஷயம் வாத்யாரே!

    ReplyDelete
  33. நல்லா சிங்கள ஒநாய்களுக்கு பாடம் புகட்டியுள்ளான் தமிழன்.மேலும் அங்கு ராஜபக்சேவுக்கு ஜிஞ்சா அடிக்கும் புல்லுறுவிகளையும் ஈழத்தமிழன் களையெடுக்கனும்....

    ReplyDelete
  34. நல்ல பதிவு......பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கட்டும்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"