Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/23/2011

குடி குடியைக் கெடுக்குமா? TASMAC



இரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. 

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? 


மது வை தாராளமாக கிடைக்கச் செய்து, மதுவிலக்கை ரத்து செய்த நமது அரசு தானே இதற்கெல்லாம் காரணம்! 

தீயவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு, தன் வருமானத்திற்காக, தீயது என தெரிந்தும், "குடி குடியைக் கெடுக்கும்' என்ற அறிவிப்புடன், குடி பொருட்களை விற்பது, எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். 

மதுவை நாடுவோரின் குடும்பத்தினர், பிச்சைக் காரர்களாகவும், சமூகக் குற்றம் புரிபவர்களாகவும் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகி, நாடே கெட்டொழியும் நிலை ஏற்படும். இதையெல்லாம் சிந்தித்து, மதுக்கடைகளை அரசு படிப்படியாக மூடவும், போதை ஒழிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

உண்மைதானே உறவுகளே..

33 comments:

  1. தமிழாக்கம் டக்கரா கீதுப்பா
    மாமியா கொடுமை கொஞ்சம் ஓவர்

    ReplyDelete
  2. குடி மூலம் தான் அரசாங்கத்தின் பெரும்பாலான வரவு என்பதால் இப்படிச் செய்து மக்களை தன்நிலை மறக்கச் செய்து இருக்கிறார்கள்.... என்று தணியும் இந்த “தாகம்”?

    நல்ல பதிவு நண்பரே...

    ReplyDelete
  3. நல்லா இருக்குது....
    உங்கள் ஆதங்கம் உண்மையானது...

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  4. என்ன செய்றது ?

    மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால்
    இது போன்ற பழக்கங்களை
    நிறுத்த முடியாது..

    அப்புறம்..
    தமிழாக்கம் சூப்பர்

    ReplyDelete
  5. தமிழாக்கம் படு சூப்பர் பாஸ்! :-)

    ReplyDelete
  6. என்ன மாப்ள டெம்ப்ளேட் எல்லாம் மாத்திட்டு இருக்க இது நல்லா இருக்கு மச்சி ட்ரீட் எங்கே

    ReplyDelete
  7. ஊருக்கு ஒன்னு என்பது போய் தெருவுக்கு நாலுன்னு வந்துடிச்சு ,

    இதுல வேற சில இடங்களில் ஊருக்குல்லாற மக்கள் வசிக்கும் இடத்தி வைத்து அவ்வழியே நடக்கும் பெண்கள் உட்பட அனைவருக்கும் சங்கடத்தையும்
    பாதிப்பையும் ஏற்படுத்துகிறார்கள் .

    அவர்களுக்கு தேவை வருமானம் ,

    யார் எக்கேடு கேட்டால் என்ன

    ReplyDelete
  8. ஆதங்கம் புரிகிறது!!!

    ReplyDelete
  9. பில்கேட்ஸ் காமெடி கலக்கல்

    ReplyDelete
  10. வேலியே பயிர்களை மேய்வது கொடுமை ..((

    ReplyDelete
  11. குடி பற்றிய ஆணித்தரமான பதிவு.

    பில்கேட்ஸ் காமெடி கலக்கல்.

    இப்படி இரு சம்பந்தமில்லா விசயங்களை ஒரே பதிவில் சொல்லலாமா? குடியின் சீரியஸ்னெஸ் அடிபடுதே பாஸ்?

    ReplyDelete
  12. அரசு மதுவிலக்கு கொண்டுவரவேண்டும்.

    ReplyDelete
  13. விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  14. மக்களிடம் ஒற்றுமை வந்தால் மது பிரச்சனை மட்டுமல்ல எந்த பிரச்சனையும் சமூகத்தை தாக்காது...என் செய்ய ஆதி முதலே ஒற்றுமை என்பதை விட ஒவ்வொருவருகுள்ளும் உள்ள ஈகோ தலை தூக்கி நிற்கிறது... அட போங்க பாஸு....
    --------------------------
    //இன்னொரு தபா பாரு//

    சென்னை பாஸையில கல கட்டுது நண்பரே... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தமிழாக்கம் தூள் நைனா ....

    ReplyDelete
  16. struggling - மெர்சலா கீறேன்!

    ReplyDelete
  17. புது டெம்ப்லேட் கலக்குதே மாப்ளே

    ReplyDelete
  18. தாங்கள் மேற்கோள் கூறிய காவலாளிகள் எல்லாம் வெறும் டாஸ்க் மார்க் பார்ட்டிகளாக இருக்க வாய்ப்பில்லை. மதுவிலக்கு என்பது பூரணமாக இருக்க வேண்டும். நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் விலக்கு என்றால்... உயர்குடிமக்கள் என்பதால் மட்டும் மது தன் போதையினை, கொடூர வக்கிரங்களை விதைக்காது என நினைப்பது மூடத்தனம்!

    ReplyDelete
  19. வழமை போல் கல்க்குதுங்கோ

    ReplyDelete
  20. குடி குடியை மட்டும் அல்ல கூட இருக்கும் எல்லோரையும்
    கெடுக்கும்.பாழாப்போன இந்தக் குடிபோதை கேடுகெட்ட
    எல்லாவிசயத்தையும் அருமையாக நேசிக்கும்.இதுக்கு மது
    ஒழிப்புச் சட்டத்தை வெறும் புத்தகப் பதிப்பாக பின்தொடராமல்
    நிறுத்தும் நோக்கில் சட்டம் தீவிரம் அடையவேண்டும் . அதுக்கு
    பணம் பெருக்கும் நோக்கம் சம்மந்தப்பட்டவர்களைவிட்டு அடியோடு
    ஒழியவேண்டும். இது நடக்குற கதையா?..... வேலையைப் பாருங்கையா .
    இதுதான் வேலியே பயிரை மேயுற கதை என்று சொல்வார்களே.இது
    மாறவே மாறாது. நன்றி சகோ பகிர்வுக்கு.

    ReplyDelete
  21. ஹல்லோ பாஸ். என்ன ப்ளாக் டிசைனை மாத்திப்புட்டீங்க?? நீங்க செமையா குடிப்பீங்கன்னு கவிதை வீதி சொன்னாரு? நெசமா?

    ReplyDelete
  22. பலமா சொம்பு நசுனி இருக்கும் போல தெரியுதே மக்கா ஹி ஹி.....

    ReplyDelete
  23. விக்கியுலகம் கூறியது...
    struggling - மெர்சலா கீறேன்//

    ஹா ஹா ஹா ஹா மாட்னான் தக்காளி ராஸ்கல் ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    புது டெம்ப்லேட் கலக்குதே மாப்ளே//

    டேய் நாயே பதிவை படிச்சியாடா ராஸ்கல்.....

    ReplyDelete
  25. வருமானத்தை மட்டுமே மனதில் கொள்ளாமல், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே அரசுகள் செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  26. டெம்ளேட் சூப்பர்

    ReplyDelete
  27. ராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டு காமராஜரால் கடைப்பிடிக்கப்பட்ட மதுவிலக்குக்கு விலக்கு கொண்டுவந்தவர் 6 கோடி தமிழ் மக்களின் தானைத்தலைவர் கருணாநிதி. இதில் தமிழகம் எவ்வளவு துாரம் முன்னேறி இருக்கிறது.
    மறுபடியும் மதுவிலக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  28. வணக்கம் பாஸ்,
    சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.

    டெம்பிளேட் கலக்கலா இருக்கு.
    முன்னரை விட இப்போ ஸ்பீட்டா ஓப்பின் ஆகுது.

    ReplyDelete
  29. விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி பாஸ்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"