பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர்
(hina rabbani khar)நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.
(hina rabbani khar)நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.
இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.
அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்துவிட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.
ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.
அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.
வார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையை குறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது அயலுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் வரலாற்றில் அதன் அயலுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.
லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.
இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.
ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.
தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.
2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.
தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் அயலுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அயலுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் அயலுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹினா ரப்பனி கர் உள்ளூர் குழப்பங்களையும் உலகநாடுகளின் கெடு பிடுகளையும் சமாளிப்பாரா பார்ப்போம்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
எத்தனை உலகத்தலைகளை கவிழ்க்கப் போகிறாரோ இந்த இளம் (பெண்) அமைச்சர் .......
ReplyDeleteவடையும் போச்சி ......
ReplyDeleteஅழகா தான் இருக்காங்க.... அரசியல் எப்படி பண்றாங்க பார்ப்போம் !
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோ ....
மச்சி, இது நான் ஏற்கனவே படித்திட்டேன்.
ReplyDeleteநல்ல பகிர்வு. . .
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் இவரின் நிர்வாக திறனை .
ReplyDeleteநடக்கட்டும்...
ReplyDeleteபுது டெம்ப்ளேட் அந்த பாகிஸ்தான் பெண் அதிகாரி போலவே...
ReplyDeleteம்......ம்ம்!
ReplyDeleteதேவையான நல்ல பதிவு நண்பரே!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
இருந்தாலும் அழகை வச்சு எல்லாத்தையும் கவிழ்க்க முடியாது )))
ReplyDeleteகலக்கிட்ட பாஸ்
ReplyDeleteவரவேற்போம்
ReplyDeleteஅழகா இருந்து என்ன செய்ய
நல்லது செய்றாங்களா னு பாப்போம்...
மேடம் செம க்யூட்! வேடந்தாங்கல் பறவை போல..
ReplyDelete///////அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது. /////////////////
ReplyDeleteஇதற்கு முன்பு இவர்களின் புகழ் உயரத்தில் இருந்ததுபோல சொல்லி இருக்கிங்களே ! எப்பொழுதுமே இவர்கள் இப்படித்தான் நண்பரே
நன்பரே அருமையான புகைப்படங்களை போட்டு இருக்கிறீர்கள். அவங்க கைய தொட்ட சந்தோசத்துல நம்ம எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு வாரம் தூங்கலையாம்.
ReplyDeleteஇண்ட்லி ஓட்டளிப்பு பட்டை தமிழில் நிறுவ முடியல. ப்ளாக்கர் தளத்திற்க்காண இண்ட்லி ஒட்டளிப்பு பட்டை என்ற லிங்கை எத்தனை தடவை க்ளிக் பண்ணினாலும் open ஆகமாடேங்குது. யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நன்றி.
அரசியல் நமக்கு எதுக்கு ...எனக்கு காதல் வந்துருச்சு ஹி ஹி
ReplyDeleteTAMIL MANAM 10
ReplyDeleteஃபிகரு ஷோக்காத்தான் கீது
ReplyDeleteஇவங்கள பாத்து நாங்க ஜொல்லு விட்டுக்கொட்டிருக்கும்போது..!!!!? சர்தாஜி பின் கதவால அனுப்புவான்யா குண்டர்களை குண்டோடு...?
ReplyDeleteஆடம்பர பிரியரான இவர் கையில் வைத்திருக்கும் பேக்யின் விலை 17 இலட்சமாம் இந்தியா சுற்றுபயணம் வந்துள்ள இவர் கையில் இருந்த ஒரு வைர மோதிரம் காணவில்லையாம்
ReplyDeleteஇவரது பாதுகாவலர்கள் அதை தேட அதை வேண்டாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறிவி்ட்டாரம் அதன் மதிப்பு 1கோடி மதிப்புடையதாம் அவர் அணித்துள்ள நகைகள் செருப்பு என மிக விலையுர்நதவைகளாம் கோடிக்கணக்கில் மதிப்புடைய ஆபரணங்கள் எப்போதும் அணிந்திருப்பாரம்
நாட்டு மக்கள் பசியிலும் பஞ்சத்திலும குண்டு வெடிப்பிலும் இறந்துகொண்டிருக்க அரசியல்வாதிகளின் ஆடம்பரமாக உலக நாடுகளை சுற்றி கொண்தான் இருக்கிறார்கள் இவர்களால் நாட்டு மக்களுக்கு தீவிரவாதம் இன்றி அமைதியாக வாழ வழிசெய்யப்போகிறார்கள் எல்லாம் பேச்சுவார்த்தையுடன்
முடித்துவிடுகிறார்கள் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்துள்ளாராம் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்தியா............
எனது தொகுப்பு இத்துடன் முடிகிறது
நனறி வணக்கம் வாழ்க நண்பா
வடை காணாமல் போகலை பக்கத்துலதான் இருக்கு
அங்க பார் சிபியின் கமெண்டை...
ReplyDeleteஅது கல்யாணமான பொண்ணுயா!!
பா"கிஸ்"தான்??
ReplyDeleteபா"கிஸ்"தான்????
ReplyDeleteபா"கிஸ்"தான்???
ReplyDeleteபேச்சுவார்த்தைக்குப் போறவங்கள்லாம் பொம்பளைங்களா இருக்கணும்...
ReplyDeleteஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கய்யா... என்ன நடக்குதுன்னு பாப்போம்.பகிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று எனது வலைப்பதிவில்
ReplyDeleteநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
ஏம்ம்ப்பா..! இஸ்லாத்திற்கு விரோதமாக ஒரு பெண்ணை வெளியுறவுத்துரை அமைச்சராக நியமித்ததற்காக கில்லானியையும் அந்த பெண் அமைச்சரையும் கொல்ல போவதாக தாலிபான்,அல்-கயிதை கிட்டேர்ந்து தந்தி ஒன்னும் வல்லியா வாப்பா....
ReplyDeleteதாலிபான், அல்- காயிதை கிட்டேர்ந்து இன்னும் தகவல் வரலியாப்பா...
ReplyDelete